DISPASSIONATED DJ

May 31, 2007

Federico García Lorca

Filed under: மொழிபெயர்ப்பு — டிசே தமிழன் @ 10:39 am

-மொழிபெயர்ப்பு கவிதை முயற்சிகள்-கார்சியா லோர்கா தமிழ்ச்சூழலில் நன்கு அறியப்பட்ட ஒரு ஸ்பானிய படைப்பாளி. அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க ஒரு புதுவிதமான உலகு எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எளிமையான வார்த்தைகளால்… ஆனால் நிறைய படிமங்களால் ஆனவை அவரது கவிதைகள். சடப்பொருடகளுடனான அவரது உரையாடல்கள் குறிப்பிட்டுச்சொல்லவேண்டியவை. (அப்படி நினைக்கும்போது தமிழ்ச் சூழலில் நினைவுக்கு வருபவர், சோலைக்கிளி). லோர்காவின் நாடகங்களை விதந்து பேசியளவுக்கு அவரது கவிதைகள் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தமிழில் வாசித்தது குறைவு. இடதுசாரித்துவம் மீது ஈர்ப்பிருந்த லோர்கா ஸ்பானிய உள்நாட்டுப்போரால அவரது 38 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். (லோர்காவின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததை முன்வைத்து ஒரு கட்டுரை எழுத விருப்புண்டு; ஆசை கோடி, பட்டியலோ நீளும்.)

lorca
(1898-1936)

Saturday Paseo: Adelinaதோடை
கடலில் வளர்வதோ
காதல் *செவில்லாவில் முகிழ்வதோ அன்று.
நீ நிழலில் நான் தகிக்கின்ற சூரியன்
உனது குடையை இரவல்தா

நானெனது பொறாமையின் விம்பங்களை அணிவேன்
எலுமிச்சையும் நாரத்தையுமான சாறு
உனது வார்த்தைகள்
உனது குற்றமுள்ள சிறு வார்த்தைகள்
சிறிது நேரத்திற்கு நீந்தத் தொடங்கும்.

தோடை
கடலில் வளர்வதில்லை.
ஆ.., அன்பே!
செவில்லாவில் காதலும் இல்லை.

*A city
———————-

கிற்றார்
(The Guitar)

கிற்றாரின் விசும்பல்
ஆரம்பிக்கிறது
விடியலின் கோளங்கள்
துவசமாக்கப்பட்டன.
கிற்றாரின் விசுமப்ல
ஆரம்பிக்கிறது.
அதை அமைதியாக்குவது
பயனற்றது.
அதை நிசப்தமாக்குவது
சாத்தியமற்றது.
அது அலுப்புடன் விசும்புகிறது,
பனிப்புலத்தின் மேலாய்
நீரைப் போல
காற்றைப் போல
விசும்புகிறது
அதை அமைதியாக்குவது
சாத்தியமற்றது
தொலை தூரத்திலுள்ளவைக்காய்
அது விசும்புகிறது
சூடான தென்னக பாலைவனங்கள்
வெள்ளை கமீலியாஸுக்காய் காத்திருக்கின்றன.

விசும்பும்;
இலக்கில்லாத அம்புக்காய்
காலை இல்லாத அந்திக்காய்
கிளையின் மேல் இறந்த முதலாவது பறவைக்காய்.
ஓ கிற்றார்!
ஜந்து வாட்களால்
இதயம் பயங்கரமாய்க் காயப்படுத்தப்பட்டது.
————————

பேச்சற்ற சிறுவன்
(The Little Mute Boy)

சின்னப்பையன் தேடிக்கொண்டிருந்தான்
தனது குரலை
(சில்வண்டுகளின் அரசனிடம் அது இருந்தது)
தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.
அதனுடன் பேசுவதற்காய் அதெனக்கு(குரல்) வேண்டாம்
நானொரு மோதிரத்தை அதிலிருந்து உருவாக்குவேன்
அவ்வண்ணம் அவன் தனது சின்னவிரலில அணியக்கூடும்
எனது மெளனத்தை.

தண்ணீரின் துளியொன்றில்
சின்னப்பையன் தனது குரலைத் தேடிக்கொண்டிருந்தான்.

(கைப்பற்றப்பட்ட குரல், வெகு தொலைவில்
சில்வண்டுகளின் ஆடையை அணிகிறது)
————

பிரியாவிடை
(Farewell)
நான் இறந்தால்,
பலகணியைத் திறந்தபடியே விடுக.

சிறுவன் தோடம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, அவனைப் பார்க்க முடியும்)

அறுவடை செய்பவன் கோதுமையை அறுவடை செய்துகொண்டிருக்கிறான்
(எனது பலகணியிலிருந்து, நான் அவனைக் கேட்கமுடியும்)

நான் இறந்தால்,
பலகணியை திறந்தபடி விடுக.
————–

மலட்டுத் தோடையின் பாடல்
(The song of the Barren Orange Tree)

மரம்வெட்டி.
என்னிலிருந்து எனது நிழலை வெட்டு
கனியாக ஆகமுடியாத அவஸ்தையை
என்னிலிருந்து விடுவி
கண்ணாடிகளுக்கு மத்தியில் நானேன் பிறப்பிக்கப்பட்டேன்?
நாள்
என்னைச் சுற்றி சுற்றி படர்கின்றது
இரவு
தனது அனைத்து நட்சத்திரங்களிலும்
என்னை நகலெடுக்கிறது.

நானெனது விம்பமில்லாது வாழ விரும்புகிறேன்.
பிறகு என்னைக் கனவு காண அனுமதி,
எறும்புகளும் *Thistledownம்
எனது இலைகளும் கிளிகளுமாக.

*தமிழில் எப்படிக் கூறுவது?
————————–

பிரியமுள்ள நண்பர் ஒருவருக்கு அனுப்புவதற்காய் கார்சியா லோகாவின் கவிதைகள் சிலதை மொழிபெயர்த்தேன். எனது மொழியின் போதாமையால் இதை மொழிபெயர்ப்பு என்று சொல்லமுடியாது. நான் இக்கவிதைகளை விளங்கிக்கொண்டளவில் தழுவி எழுதியிருக்கின்றேன் என்றுதான் -நேர்மையாக- ஒப்புக்கொள்ளவேண்டும்.

May 23, 2007

ஷோபாசக்தியின் நேர்காணல்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 3:34 pm

ஷோபாசக்தி அவரது புனைவுகளினூடாகவும், நேர்காணல்கள் (மற்றும் கட்டுரைகள்) ஊடாகவும் இருவேறு துருவங்களான பார்வையை எனக்குத் தந்துகொண்டிருக்கின்றார். ஷோபாசக்தியின் புனைவுகளில் மிகப்பிடித்தமான ‘தேசத்துரோகி’ தொகுப்பை முன்வைத்து எழுத நினைத்த குறிப்புகள் அரைகுறையில் நிற்பது ஒருபுறமிருந்தாலும், இந்த நேர்காணலை முதல் வாசிப்புச் செய்தபோது ஷோபாசக்தியின் நேர்காணல்களை முன்வைத்து ஒரு பதிவு எழுதலாமோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சிலதினங்களுக்கு முன் நண்பரொருவனுடனான உரையாடலில்,’பிரபல்யங்களைப் பற்றி விமர்சிப்பதென்பதே உங்களைப் பிரபல்யமாக்கும் நுண்ணரசியல்தான்’ என்றொரு கருத்தை முன்வைத்து என்னை நோக்கி அவன் எழுப்பிய கேள்வி இன்னும் தொந்தரவுபடுத்துகிறது :-). புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களில் குறிப்பிடும்படியான நான்கு ஆண் படைப்பாளிகள் இருக்கின்றார்கள் என ஷோபாசக்தி குறிப்பிடுகிறார். அவர்களைப் பெயர் சொல்லிக்குறிப்பிடவேண்டும் என்ற ஷோபாசக்தியிற்கு திறந்த அழைப்பிதழ் விடுக்கிறேன் (இதற்கும் நான் ஒருகாலத்தில் விரும்பி வாசிக்கும் சினிமா கிசுகிசுக்களுக்கும் தொடர்புண்டா?). ஷோபாசக்தி தன்னுடைய விருப்ப்பட்டியலைச் சொல்லட்டும். வாசிக்கும் நீங்களும் உங்களுக்கான பட்டியலை (ஆண்/பெண் என்ற பிரிப்பு இல்லாது) பின்னூட்டத்தில் இடலாம் இடலாம்..
(_டிசே)

ஒரு குறிப்பு: நேர்காணலில் ஆரம்பத்தில் நேர்கண்டவர்கள் குறிப்பிடுகின்ற ‘உலகத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர்கள்தான் தலைமை தாங்குவார்கள்’ என்பதைக் கூறியவர் எஸ்.பொ; சிவத்தம்பியல்ல என்று நினைக்கிறேன்.

ஷோபாசக்தி - துயரங்களை பகடிகளாக்கும் கலகக்காரன்

நீலகண்டன், சிராஜுதீன்

‘உலகத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத்தமிழர்கள்தான் தலைமை தாங்குவார்கள்’ என சிவத்தம்பி பத்தாண்டு களுக்கு முன்பு பிரகடனப்படுத்தியபோது அதை எள்ளி நகையாடியும் கிண்டலடித்தும் எதிர்கொண்டவர் ஷோபாசக்தி. ஆனால் அந்தப் பிரகடனத்தை உயிர்ப்பித்து வருபவரும் அவரே என்பதுதான் தற்போதும் அழகிய முரணாக உள்ளது. சின்னக் கதையாடல்கள், எதிர்க் கதையாடல்கள் வரலாற்றில் சிதிலமாக்கப்பட்ட, நிகழ்வு களில் வெறுத்தொதுக்கப்பட்டுவரும் மனிதர்கள் குறித்த கரிசனங்களின் வெளிப்பாடாக இயங்கிவரும் ஷோபா சக்தி இரு நாவல்கள் ஒரு சிறுகதை ஒரு கட்டுரைத் தொகுப்பு என மிகக் குறுகிய காலத்தில் தமிழிலக்கி யத்தை வியாபித்துக் கொண்டதோடு ஈழத்து சைவ வெள்ளாள மரபையும், இந்திய பார்ப்பன சுயசாதி அடையாளங்களுக்குள் இயங்கிவரும் எழுத்துலக மரபையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருபவர்.

புலம்பெயர்ச் சூழலை, அகதி மனநிலையை புலம்பித் தீர்த்தவர்களுக்கு மத்தியில் அவைகளைத் தன் இருப்பை விமர்சிக்கும் கருவிகளாக மாற்றிக் கொண்டதில்தான் ஷோபாசக்தி ஒட்டுமொத்தமாக வெற்றியடைந்துள்ளார் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவரது பிரதிகளில் பாத்திர உரையாடல்கள் வலிகளைப் பேசும் என எதிர் பார்க்கும் பல தருணங்களில் பகடி செய்துவிட்டுப் போகும் அதிசயம் தமிழிலக்கியத்தில் காணக்கிடைக்காத கதையாடல். மார்க்சியம், பெரியார், அம்பேத்கர், டிராட்ஸ்கி, பின்நவீனத்துவம், திரைப்படம் என எதைப் பற்றிய உரையாடலையும் ஷோபாவோடு நிகழ்த்த முடியும். தேசியம் பற்றிய கதையாடலில் மயங்கிக் கிடந்த தங்களை ‘நிறப்பிரிகை’ மீட்டெடுத்ததாய்ச் சொல்லும் ஷோபா சக்தி, நிறப்பிரிகை முன்னெடுத்த குடும்பம், இனவாதம், பாசிசம் ஆகிய விவாதங்களின் பிந்தைய தொடர்ச்சியின் வீரியத்தோடு இயங்கிவருபவர். வெறும் எழுத்தாளன், அறிவுஜீவி என்பதான பிம்பங் களை உடைத்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் நடத்துகின்ற தைப்பூச விழாக்களில் பெரியார் அம்பேத்கர் கருத்துக் களை துண்டறிக்கையாக்கி கொண்டுபோய் கொடுத்து உதைவாங்கித் திரும்புவது போன்ற இயக்கக்காரனின் அலாதி அனுபவங்களும் ஷோ£பாசக்திக்கும் அவரது உற்ற நண்பர் சுகனுக்கும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் வேலைச்சுமையின் அசதி போக்கிக் கொள்ளவும் நண்பர்களையும் புத்தகக் கண்காட்சியையும் காணவும் தமிழகத்திற்கு வரும் ஷோபாசக்தி இம்முறை உரையாடியது புதுவிசைக்காக…

- நீலகண்டன்
சிராஜுதீன்

Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து?

அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காத தினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல்டி சேர்ந்து வாழ்வது குடும்பம் குழந்தைகள் போன்ற வற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படி யொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும் மனிதர்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைத்தி ருக்கும் அய்ரோப்பிய நவீன முதலாளிய சமூக அமைப்பில் முழுமையான Rogue மனநிலையில் வாழ்வது முடியாத காரியமாய்த்தானிருக்கிறது.

வீரத்தையும் தியாகத்தையும் தனிமனித ஒழுக்கத்தை யும் ஆண்மையையும் தேசபக்தியையும் மொழிப் பற்றையும் உழைப்பையும் கொண்டாடும் நமது தமிழ்ச்சூழலிலோ இயக்கப் போராளியாகவோ கட்சி ஊழியனாகவோ இருப்பதைவிட Rogue மன நிலையில் வாழ்வது சவாலானது. வன்முறையும் ஒழுங்குகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் பித்துநிலை அல்லது Rogue மனநிலையைத் தக்க வைத்திருப்பதால் மட்டும்தான் ஒருவர் தன்னைச் சுதந்திர உயிரியாகத் தன்னளவில் உணர்ந்துகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன்.

போர்ச்சூழலும் நாடோடித்தன்மையும் கொண்ட உங்களது வாழ்வியற் பின்னணியிலி ருந்து கொண்டு உங்களால் எப்படி இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாகக் கதை சொல்ல முடிகிறது?

நான் போரைப் பற்றியும் புகலிடத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தேசியவாதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் காதலைப் பற்றியும்தானே கதைகளைச் சொல்கிறேன். இவைகள் அனைத்தும் கேலிக்கும் கிண்டலுக் கும் உரியவைகள்தானே! இந்த வலிமை பொருந்திய சாமான்களை எதிர்கொள்ள நையாண்டியைத் தவிர என்னிடம் வேறெந்த ஆயுதங்களும் தற்போது கைவசமில்லை.

இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகயிருந்தவர்டி எனத் தமிழ்த் தேசியர் களால் விதந்தோதப்படும் இந்திராகாந்தியின் மரணம் உங்கள் கொரில்லாவில் ‘ஒரு மாடு செத்துப்போனது மாதிரியான கவலைதான் ஈழத்திலிருந்தது’ என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது?

நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

கொரில்லா நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள என்னுடைய கிராமம் ஈழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமல்ல. எனது கிராமத்தில் மக்களுக்கு 1984களில் அன்றாட அரிசி யையும் மீனையும் பெற்றுக்கொள்வதுதான் ஒரே அரசியல். அரசியல் கட்சிகளின் கிளைகளோ கொடி களோ உறுப்பினர்களோ எங்கள் கிராமத்தில் கிடையாது. தீப்பெட்டியென்றால் யானை மார்க் தீப்பெட்டி சவர்க்காரமென்றால் சன்லைட் சவர்க்காரம் சைக்கிளென்றால் ரலி சைக்கிள் வாக்குப் போடுவதென்றால் உதய சூரியனுக்குப் போடுவது என்பவைதான் கிராம மக்களின் வாழ்க்கையாயிருந்தது.

அவர்களின் ஏழ்மையும் அறியா மையும் அவர்களைத் தமக்கான அரசியல் குறித்துச் சிந்திக்கவிடவில்லை. அவர்களில் பலர் ‘மகாத்மா’ காந்தியின் மகள்தான் இந்திராகாந்தி என்றுகூட நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் இந்திராவின் மரணம் ஒரு மாடு செத்தது போன்ற சலனத்தை ஏற்படுத்தி யது. ஆனால் இந்திராகாந்தியின் சாவு யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளிடையேயும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் இளைஞர்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. அப்போது எங்களின் கைகளில் சீக்கியர்கள் யாராவது சிக்கியிருந்தால் யாழ்ப்பாணத்தில் அவர்களை உயிருடன் சமாதியாக்கியிருப்போம். அவ்வ ளவுக்கு எங்களுக்கு இந்திரா கிறுக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் இந்திராகாந்தியின் சாவை யொட்டிக் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.

அப்போது ஆயிரக்கணக்கான ஈழப்போராளிகள் தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்தி லும் இந்திய இராணுவத்தினரால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ‘1985 பொங்கலுக்குத் தமிழீழம் என்று கட்டிவிடப்பட்டிருந்த கதையாடலின் மீது பெருத்த இடியாக இந்திராவின் சாவு இறங்கியது.

1977ல் இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவரின் வெளிப்படையான அமெரிக்கவுடனும் சீனாவுடனுமான உறவுகள் சுதந்திர வர்த்தக வலையம் என்ற பெயரில் மேற்கு நாடுகளின் தொழிலாதிக்கம் இலங்கையில் நிலவ வழிசெய்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க அதுவரை கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு அடிபணியும் கொள்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கைவிட்டது போன்ற காரணிகளால் இந்திய ஆளும் வர்க்கம் இலங் கையில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலைமைகளைத் தோற்றுவித்து இலங்கை அரசைத் தனது பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரவே ஈழப்போராளிகளைக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது.

போதிய «ளவுக்கு உள்நாட்டு யுத்தம் மூண்டதும் அதைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையின் இறைமையில் நேரடி யாகவே தலையிட்டது. 1985ல் திம்புவில் நடந்த பேச்சு வார்த்தைகளும் 1987ல் செய்யப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்த இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பும் முற்று முழுதாக இந்திய ஆளும் வர்க்கங்களின் பிராந்திய நலன் என்ற நிலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் சிங்கள மக்களாலும் எதிர்க்கப்பட்டது. தமிழர்களாலும் எதிர்க் கப்பட்டது.

ஆனால் தொண்ணூறுகளில் சோவியத் யூனியனின் உடைவால் உலக அரசியலில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவாகியது. இலங்கையில் மேற்கு நாடுகளின் மூலதனமும் மேற்கு நாடுகளில் இலங்கை அகதிகளும் குவிந்து கிடப்பது போன்ற காரணிகளால் இந்தியாவால் இப்போது நேரடியாக இலங்கை அரசிய லில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இலங்கை இப்போது மேற்கு நாடுகளினதும் ஜப்பானினதும் இந்தியாவினதும் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல் இறைமைகளை யும் இழந்து முற்றுமுழுதாக மறுகாலனியாக்கப் பட்டுள்ளது.

இலங்கை அரசின் கதியே இதுவென்றால் விடுதலைப்புலிகளின் கதியை யோசித்துப் பாருங்கள்! இல்லாத இறைமையை அவர்கள் எங்கே போய் இழப் பது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டுமல்ல யுத்தத்தையும் தீர்மா னிக்கும் நெறிப்படுத்தும் தீர்மானகரமான சக்திகளாக இந்த அந்நிய வல்லாதிக்கவாதிகளே இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இலங்கையின் இறைமை வெளிகளில் இந்தியா மட்டுமே நுழைந்தது. ஆனால் இப்போது நடப்பது கூட்டுக் கொள்ளை.

ஆனால் இன்னமும் இந்திரா காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்களாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் ஈழத்து அரசியலில் செல் வாக்குப் பெற்றவர்களா கவுமிருக்கிறார்டிகள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடே அப்படித்தானேயிருக்கிறது! உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத்தின் புரட்சிகரத் தோழமைகள் முக்கியமானவை. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் எங்களது தோழமை கொம்யூனிஸ்டுகளுடனும் நக்ஸல்பாரிகளுடனும் தானி ருக்க வேண்டும்.

ஆனால் ஈழப் போராட்டத்தை தலைமை தாங்கியவர்களின் தாங்குகிறவர்களின் குறுந்தேசியவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் கலாச்சார அடிப் படைவாதமும் அதிவலதுசாரித்தனமும் ஈழப் போராட் டத்தின் ஆதரவு சக்திகளாக வைகோவையும் நெடுமாறனையும் ராமதாஸையும் பால்தாக்கரேயையும் தான் திரட்டி வைத்திருக்கிறது. ‘குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்’ என்பார்கள்.

உலகமயச் சூழலில் திரும்பத் திரும்ப இயக்கமாக வேண்டிய தேவைகள் இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளின் தேவையாயுள்ளபோது நீங்கள் தொடர்ந்து இயக்கங்களைத் தாக்கியும் விமர்சித்தும் வருகிறீர்களே?

நான் ஒருபோதும் இயக்கங்களின் அமைப்புகளின் தேவையை மறுத்துப் பேசியதில்லை. எதிரி அமைப்பா கத்தான் இருக்கின்றான். அவன் அந்த அமைப்பைக் கட்டிக் காப்பதற்கு பொலிஸ் ஆயுதப்படைகள் நீதி மன்றம் சிறைச்சாலை என்று உப அமைப்புகளையும் தன்னைக் காப்பாற்றும் சட்ட ஒழுங்குகளையும் தன்னை நியாயப்படுத்தும் தத்துவங்களையும் கட்டிவைத்திருக்கின்றான். பண்பாட்டுக்கூறுகளில் தன் நலனைப் பிரதிபலிக்கும் கருத்தாக்கங்களை மறைத்தும் வைத்திருக்கின்றான். இத்தனை தந்திரமாகவும் உறுதியாகவும் நிறுவôபட்டிருக்கும் அமைப்புக்கு எதிராக போராடுவதெனில் எதிரி உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களைச் சிதைப்பதெனில் நாம் நிச்சயம் அமைப்பாக வேண்டும். புரட்சிகரக் கட்சியாக வேண்டும்.

ஆனால் வரலாறு முழுவதும் நமது புரட்சிகரக்கட்சி களின் பண்புகளை மீள்மதிப்பீடு செய்து பாருங்கள். அவர்களின் இலட்சியங்கள் முதலாளியத்திற்கு அதிகாரத்திற்கு எதிராகவிருக்கும் வேளையில் அவர்களின் அமைப்பு கட்சி வடிவங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் மாதிரியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சன நாயகத்துவ மத்தியகுழு புரட்சிகர நிறைவேற்றுக்குழு என்ற ஏதோவொரு குழுதான் அமைப்பின் முழு வேலைத்திட்டத்தையும் நிர்ணயிக்கிறது. பரந்துபட்ட மக்கள்திரளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினை களை வர்க்கமென்றோ தேசிய இனமென்றோ இதுவரை யான நமது அமைப்புக்கள் சாராம்சப்படுத்தி வந்திருக் கின்றன. வித்தியாசங்களைச் சாராம்சப்படுத்துவது அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பது போன்ற பண்பு களின்றி அதிகாரம் பரவலாக்கப்பட்ட புரட்சிகர அமைப்புக்களைத்தான் நாம் கண்டடைய வேண்டும்.

ஆனால் அமைப்புகள் கட்சிகள் குறித்து விமர்சனங்களை அய்ரோப்பியச் சூழலிலும் சரி தமிழகச் சூழலிலும் சரி முன்வைத்த நவீனத்துக்குப் பிந்திய முக்கிய சிந்தனையாளர்கள் இடதுசாரிகளாகவே இருந்தார்கள் இருக்கிறார்கள். உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தீவிர சமூக அக்கறையாளர்களாகவுமே இருந்தார்கள். ஆனால் இங்கே என்ன நடக்கிறதென்றால் என்.ஜி.ஓ க்களிடமும் வலதுசாரி அறிவுத்துறைக் கட்டமைப்புகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் அறிவுத்துறையினர் அமைப்புகள் கட்சிகள் குறித்த நவீனத்துக்குப் பிந்திய சிந்தனைகளை எளிமைப்படுத்தித் தமது குற்ற உணர்ச்சிகளைத் தணிப் பதற்கான டதமாகத் தடவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதங்களுக்கு அப்பால் நமது சூழலைப் பொறுத்தவரை ஒருவகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை என்று சொல்லும் அ.மார்க்சுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.

உலகமயமாக்கலை இந்தியாவும் இலங்கையும் முழுமையாக ஏற்றுக்கொண்டன. இந்தியாவில் பல்வேறு இயக்கங்களும் உலகமயமாக்கலை எதிர்க்கின்றன. இலங்கையில் எல்.டி.டிþ நிலை என்ன?

2002லேயே வன்னியில் புலிகள் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் தமது இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதரக்கொள்கைதானென்று பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தினார். இலங்கையில் மின்சாரம், நீர்டி வழங்கல்டி போன்ற பொதுச்சேவைகள்கூட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலே வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள சம்பூரில் ஒரு அனல் மின் நிலையத்தை அமைக்கவிருக்கிறது.

வொய்ஸ் ஒப் அமெரிக்கா இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. இது குறித்தெல்லாம் புலிகள் எப்போதுமே வாய் திறந்ததில்லை. நவீன உலக அரசியல் வரலாற்றிலேயே விடுதலைப் புலிகளைப்போல ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு தேசிய விடுதலை அமைப்பை நீங்கள் கண்டிருக்க முடியாது. அண்மையில் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்டுக் கொலைசெய்யப் பட்ட நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள்.

இதுவரையில் புலிகள் சதாமின் கொலைக்கு வாயளவிலான ஒரு கண்டனத்தைத் தன்னும் தெரிவித்தார்களில்லை. புலி கள் முதலாளியத்தினதும் உலகமயமாக்கலின் ஆதரவா ளர்கள் மட்டுமல்ல விசுவாசமான பாதுகாவலர்களும் கூட. வாரத்திற்கு ஒருமுறை வெளிநாட்டுத் தூதுவர்களை யும் இராசதந்திரிகளையும் சந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்டி 1987 சுதுமலைப் பொதுக்கூட்டத் திற்குப் பின்பு கடந்த இருபது வருடங்களாகவே பொது மக்களைச் சந்திக்கவேயில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.

சரி அங்குள்ள இடதுசாரிகளின் எதிர்ப்பு எப்படி உள்ளது?

சோஸலிச சமத்துவக் கட்சி புதிய ஜனநாயகக் கட்சி போன்ற மிகச்சிறிய அமைப்புகள் உலகமயமாக்கலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. லங்கா சமசமாஜக் கட்சி இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற பெரும் கட்சிகள் இடதுசாரிப் பாதையிலிருந்து இனவாதப் பாதைக்கு நகர்ந்து வெகுநாட்களாகின்றன.

அவர்கள் அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டு உலகமயாக்கலுக்கு ‘கொள்கை’ விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சிங்களக் கிராமப்புற மக்களிடமும் மாணவர்களிடமும் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஜேவிபி தனது கடந்த கால ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தைக் கைவிட்டு வாக்குப் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பொறுத்தளவில் அங்கே எந்த இடதுசாரிக் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இயங்குவதற்கு அனுமதி யில்லை. மக்களின் கருத்துரிமைடிபேச்சுரிமை அரசியல் கூட்டங்கள்டி ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் அனைத்துமே பாஸிசப் புலிகளால் மறுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைகூடக் கிடையாது. உங்களுக்கு ஒரு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தான். ஆனால் எங்கள் தேசம் முழுவதுமே பாப்பாப் பட்டி கீரிப்பட்டியாய்க் கிடக்கிறது.

உலக மார்க்ஸியர்களால் ஓடுகாலிப் பட்டம் சூட்டப்பட்ட டிராட்ஸ்கியை நீங்கள் ஆதரிப்பது?

இப்படி எடுத்த வீச்சுக்கு ஓடுகாலிடி கந்தலாண்டி திரிபு வாதி திருத்தல்வாதி கலைப்புவாதி காட்சிவாதி துரோகி என்று பட்டங்கள் கட்டித்தானே நாசமாய்ப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம்.

இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகயிருந்த கொல்வின் ஆர்.டி. சில்வாவும் கட்சியின் பெரும்பான்மை உறுப் பினர்களும் ட்ராட்ஸ்கியவாதிகளே. 1939ல் கட்சி ஸ்டாலினின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் மீது நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளிலிருந்து ட்ராட்ஸ்கிஸ்டுகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சி கட்சியிலிருந்த ஸ்டாலினிஸ்டுகளை வெளியேற்றியது. ஆக இலங்கையைப் பொறுத்தளவில் ஓடுகாலிப்பட்டம் ஸ்டாலினிஸ்டுகளுக்கு என்பது வரலாற்றின் முரண்நகை.

மலையக மக்களின் பிரசா உரிமையை சேனநாயக்க அரசு பறித்தபோது அதற்கெதிராக ல.ச.ச. கட்சி தீவிரமாகப் போராடியது. தனிச்சிங்களச் சட்டமசோதா விவாதத் தின்போது ட்ராட்ஸ்கிஸ்டுகளான என்.எம்.பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் முக்கியமானவை தீர்க்கதரிசனமானவை. ‘உங்களுக்கு அமைதியான அய்க்கியமான ஒரு இலங்கை வேண்டுமா அல்லது இரண்டாகத் துண்டாடப்பட்ட இரத்தப் பெருக்கெடுத்த ஏகாதிபத்தியப் பிசாசுகளால் விழுங்கப்படப்போகும் இரண்டு இலங்கைகள் வேண்டுமா? அதனால் இந்து சமுத்திரம் முழுவதும் ஏகாதிபத்தியப் பிசாசுகளுக்கு இரையாகும். இரண்டு மொழிகளென்றால் ஒருநாடு ஒரு மொழியென்றால் இருநாடு’ என்றார் கொல்வின் ஆர்.டி. சில்வா.

1964ல் ல.ச.ச.கட்சி அரசோடு இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் 1968ல் தோழர். கீர்த்தி பாலசூரியாவை செயலாளராகக் கொண்டு புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் தோற்று விக்கப்பட்டது. கழகம் நான்காம் அகிலத்தின் அனைத் துலகக் குழுவின் இலங்கைக்கான பிரிவாயிருந்தது. 1990களில் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் ‘வடக்குக் கிழக்கிலிருந்து சிறிலங்கா இராணுவமே வெளியேறு! தமிழ் முஸ்லீம் சிங்களப் பாட்டாளிகளின் அய்க்கியம் ஓங்கட்டும்!!’ என்பதையே தனது முதல் முழக்கங் களாய்க் கொண்டு இயங்கியது. நான் 1993லிருந்து 1997வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்காகப் பிரான்ஸில் வேலை செய்தேன். இங்கிருந்து வருகிறது என் ட்ரொட்ஸ்கியப் பாரம்பரியம்.

இப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோஸலிச சமத்துவக் கட்சியாகப் பெயரையும் பண்பையும் மாற்றிக் கொண்டுவிட்டது. எனக்கும் கட்சியின் மீது ஆயிரெத் தெட்டு விமர்சனங்கள் உள்ளன. ஸ்டாலினிசமா ட்ராட்ஸ் கிஸமா என்று புகலிடப் பத்திரிகைகளில் முரட்டுத்தனமான விவாதங்களில் ஈடுபட்ட காலத்தையும் நான் கடந்து வந்துவிட்டேன்.டி ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி என்ற ஆளுமைமீது எனக்குள்ள ஈடுபாடு இன்னமும் அப்படியேதானுள்ளது. மார்க்ஸிய இயக்கத்திற்குள் காரல் மார்க்சுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய இலக்கிய ஆளுமை ட்ரொட்ஸ்கியே என்பார்கள். பிரஞ்சு எழுத்தாளர் ஆந்ரே பிரட்டனும் மெக்ஸிகோ ஓவியர் ரிவேராவும் இணைந்து 1938ல் வெளியிட்ட புகழ்பெற்ற அறிக்கையான ‘சுதந்திரமான புரட்சிகரக் கலையை நோக்கி’ என்ற அறிக்கைக்குப் பின்னணியிலிருந்தவர் ட்ராட்ஸ்கியே. கலை இலக்கியத்தின்டி சுதந்திரம் குறித்த அவரின் கருத்துக்களே எனக்கு இப்போதும் வழிகாட்டி.

ஈழத்தில் சாதியில்லை எனத் திரும்பத் திரும்ப பத்மநாபா அய்யர் சொல்வதிருக்கட்டும் எஸ். பொவும் சொல்கிறாரே?

ஈழத்தில் சாதியில்லை என்றால் பத்மநாபன் தன் பெயருக்குப் பின்னால் இன்னமும் எதுவித குற்றவுணர் வுமில்லாமல் போட்டிருக்கும் ‘அய்யர்’ பட்டத்தையும் இயல் விருதோடு சேர்த்து இவருக்கு ரொரன்டோ பல் கலைக்கழகமா கொடுத்தது? இந்த மாபாவி வெறும் சாதி அபிமானி மட்டுமல்ல அய்ரோப்பிய புலம்பெயர் இலக்கியச்சூழலில் ஆட்காட்டியாக, தலையாட்டியாகவும் இருந்து வருகிறார். ‘மூன்றாவது மனிதன’ என்றொரு சிற்றிதழ் இலங்கையிலிருந்து வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அந்த இதழ் சனநாயத்தையும் கருத்துரிமையையும் முக்கிய கோரிக்கைகளாக முன்னிறுத்தித் தோழர்.எம்.பௌஸரால் நீண்ட காலங்களாகவே வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் இலண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்காகத் தோழர்களால் பௌஸ ரும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த பத்மநாபன் பௌஸரின் வருகையைத் தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் மற்றைய சந்திப்பு ஏற்பாட்டுத் தோழர்கள் பௌஸரை அழைப்பதில் உறுதியாக நின்றார்கள். உடனே சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிய இந்தத் துட்டப் பார்ப்பனர் பௌஸர் ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி அல்கைதாவின் கூலிப்படை என்றெல்லாம் வதந்திகளை உருவாக்கி உலவவிட்டார்.

இந்த வதந்தி புலிகளின் ஆதரவு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. இதனால் பௌஸருக்கு பெருத்த சிரமங்கள் ஏற்பட்டன. இது குறித்து பௌஸர் வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் இப்போதும் thenee.com என்ற இணையத்தளத்தில் படிக்கலாம். ஆனால் பத்ம நாபனைக் கேட்டால் ஈழத்தில் சாதிமட்டுமா இல்லை முஸ்லீம்கள் மீதான புலிகளின் அடக்குமுறையும் தானில்லை என்றுதான் சொல்வார்.

எஸ். பொ. ஈழத்தில் சாதியில்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார். அவர் அண்மையில் எழுதிய தன்வரலாற்று நூலான வரலாற்றில் வாழ்தலில் கூட ஈழத்தின் சாதிக்கொடுமைகளைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கொம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினரான து.வைத்தியலிங்கம் கூடத் தன்னி டம் சாதி பாராட்டியதை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் புலிகள் தலையெடுத்த பின்பு ஈழத்தில் சாதியொடுக்குமுறைகள் குறைந்திருக்கின்றன என எஸ்.பொ சொல்லியிருக்கக்கூடும்.

இன்று ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றால் அதைக் குறைத்த பெருமை எஸ்.ரி.என்.நாக ரத்தினம், கே.டானியல் போன்றவர்கள் தலைமை தாங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தையே சேரும். புலிகள் உட்பட எல்லாத் தேசிய விடுதலை இயக்கங்களுமே சாதிப்பிரச்சினைகளை கையிலெ டுக்கத் தயங்குகிறார்கள். என்றைக்கு அவர்கள் சாதிய ஒழிப்பை முழுவதுமாக உண்மையாக முன்னெடுக்கிறார் களோ அன்று அவர்கள் ஈழத்து வெள்ளாளர்களால் முற்று முழுவதுமாகக் கைவிடப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

சாதியத்தின் வேர்கள் அதன் வரலாற்றுரீதியான இயங்குமுறைமைகள்டி இந்துப் பண்பாட்டுத் தளத்தில் அதன் அசைக்க முடியாத வலிமை ஈழத்து ஆதிக்க சாதிகளின் சாதியக் கூட்டுமனம் அரசியல்- பொருளியல்-டி பண்பாடு- இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் நிறைந்திருக்கும் அதன் ஆதிக்கம் என்பவற்றைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தொடர்ச்சி யால்தான் நாம் எதிர்கொள்ள முடியும். சாதிய விடு தலையை மையச் சிந்தனையாக இலட்சியமாக வரித்துக் கொண்ட தலித்துகளின் தலைமையில் அமைந்த ஓர் அமைப்பால்தான் ஈழப்புலத்திலிருந்து சாதியை ஒழிக்கும் திசையில் நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்பட முடியும். அதை விடுத்து சாதியத்தை ஒரு பேசு பொருளாகவே கொள்ளாத தமிழ்த் தேசியம் சாதியத்தை வெற்றிகொள்ளுமென்பது மடமைத்தனம். புத்தராலும் மார்க்ஸியத்தாலும் சாதிக்க முடியாததைக் கேவலம் பாஸிசம் சாதித்துவிடுமென்றா எஸ்.பொ நம்புகிறார்!

தமிழகத்தில் தலித் இலக்கியத்திற்கு முக்கிய இடமொன்று உருவாகியுள்ளது. ஆனால் உங்களால் டானியலை பருமனாக்கிய அளவுக்கு அரசியலாக்க முடியவில்லையே ஏன்?

பதில் மிகவும் எளிமையானது. உங்களுக்கு ஒரு ஜோதிபா பூலேயும் அயோத்திதாஸரும் அம்பேத்கரும் பெரியாரும் இருந்தார்கள். எங்களுக்கென்று யாருமில்லையே.

நாங்கள் கே.டானியலை தலித் இலக்கிய முன்னோடி என்று நிறுவுவதை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ டானியல் இப்போது உயிருடன் இருந்தால் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். டானியல் தனது இறுதிக்காலம் வரை கொம்யூனிஸ்டாகவே வாழ்ந்தவர். அவர் சாதிய ஒழிப்பிற்காகத் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துப் போராடிய போதிலும் அவர் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கவேண்டியிருந்தது. அவர் அங்கம் வகித்த சீனச் சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி ஈழத்துச் சமூக அமைப்பின் பிரதான முரணாகச் சாதியத்தை அடையாளம் காண வில்லை.

தவிரவும் இந்துமத ஒழிப்பையோ தலித்துகள் பவுத்த மதத்தில் இணைவதையோ அவர்கள் ஆதரிக்கவு மில்லை. கட்சியின் தலைமை வெள்ளாளர்களிடமே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். டானியல் கட்சியில் நிம்மதியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. அவர் நான்கு தடவைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நீக்கங்களை டானியலின் சாதிய விடுதலை முன்னோக்கும் கட்சியின் வர்க்க விடுதலை முன்னோக்கும் இடைவெட்டிக் கொண்ட புள்ளிகளாகத்தான் நாம் கருத வேண்டியிருக்கிறது.

டானியலின் எழுத்துக்களிலிருந்து அவரும் மரபு மார்க்ஸியர்களைப் போலவே சாதியத்தை நிலமானிய சமூக அமைப்பின் விளைவாகவும் சாதி வர்க்கப் புரட்சி யுடன்தான் முடிவுக்கு வரும் என்றும் கருதிக் கொண்டிருந்தார் என்றுதான் உணர முடிகிறது. இது சாதியம் புலிகளால்தான் முடிவுக்கு வரும் என்ற கருத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மேலானது என்றாலும் இன்றைய தலித் அரசியலுக்குப் பொருந்தாத பார்வை. இதைத்தான் எங்களிடம் பெரியாரும் அம்பேத்கரும் இருந்திருக்கவில்லை என்று சொன்னேன்.

இங்கேதான் டானியலை அரசியலாக்க முடியாத பிரச்சி னையிருக்கிறது. டானியலும் அவரது தோழர்களும் விட்ட இடத்திலிருந்து நாங்கள் தொடங்கலாமே யொழிய அவர்களின் அரசியலை அடியொற்றிச் செல்வது முடியாத காரியம். இதில் காலக் குழப்பம் எதுவுமில்லை. புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் டானியல் காலத்தி லும் தலித் விடுதலை அரசியலுக்கு வழிகாட்டிகளாக ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய தலித் விடுதலை அரசியலுக்கும் வழிகாட்டிகளாக யிருக்கிறார்கள்.

பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?

பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு.

பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக் கிறது. இலக்கிய அரசியல் மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வு முறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத் துவம் பெற்றுவிட்டன. எனவே இப்போது என்ன யிருந்தாலும் பின்நவீனத்தவம் நமது சூழலுக்குப் பொருந்தாது என முனக ஆரம்பித்திருக்கிறார்கள்.

நவீனத்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மை பன்மைகளின் நிராகரிப்புகளுக்கு எதிராகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் ஓர்டி அறிதல் முறைமை நமது சூழலுக்குத் தேவையில்லை என்று சொல்வதில் ஏதாவது அறிவுநாணயம் இருக்க முடியுமா? பின்நவீனத்துவம் அறிதல் முறைகளின் தொகுப்பு என்பதை மீறி பின்நவீனத்துவம் ஒருடி விடுதலை மார்க்கம் விடுதலை அரசியல் வேலைத்திட்டம்டி எல்லா ஒடுக்குமுறைகளுக்கு மான தீர்வென்றெல்லாம் யாரும் சொல்லவில்லையே. பின்நவீனத்துவம் கடவுளுமல்ல அபினுமல்ல.

சமீபகாலமாய் பெண் எழுத்துக்கள் குறித்து ஆபாசம் விளம்பரம் தேடுகின்ற உத்தி என்றெல் லாம் பேசப்படுகின்றதே சக படைப்பாளியாய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எத்தனை நேர் காணல்களில் எத்தனை பத்திரிகைகளில்தான் இந்தத் தேய்ந்து போன கேள்வியையே கேட்டுக்கொண்டி ருக்கப்போகிறீர்கள்? நானே பத்திரிகைகளில் மூன்றாவதோ நான்காவதோ தடவையாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஆபாசம் விளம்பரம் தேடும் உத்தியென்றெல்லாம் எவன் சொன்னான்? அப்துல் ரகுமான் சிநேகிதன் பழனிபாரதி பொன்னீலன் போன்ற வர்களின் உளறல்களுக்கெல்லாம் இன்றைய நவீன இலக்கிய விமர்சனப் பரப்பில் ஏதாவது மதிப்பிருக்கிறதா?

சில வருடங்களுக்கு முன்பு பெண்ணிய எழுத்துகள் குறித்து எனக்கு ஒரு விமர்சனமிருந்தது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் உடலரசியல்டி காதல் குடும்ப மதிப்பீடுகளைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார் கள் என்ற கருத்தை ஒரு நேர்காணலில் கூட நான் சொல்லியிருந்தேன். ஆனால் இன்று அணங்கு பனிக் குடம் போன்ற இதழ்களையும் livingsmile.blogspot.com போன்ற இணையங்களையும் படித்துப்பாருங்கள். பெண்ணிய அரசியல் உடல் அரசியல் என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் பரந்துபட்ட அரசியல் இலக்கிய கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுக்கிறார்கள்.

புனைவு அ-புனைவு நாடகம் ஆவணப் படங்கள் நேரடி அரசியல் என அவர்கள் ஆர்த்தெழுந்திருக்கும் இந்தக் காலகட்டம் தமிழில் பெண்ணிய வெளிப்பாடுகளின் திருப்புமுனைக் காலகட்டம் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இவர்களுக்குப் பார்ப்பன சாதிப் பின்புலம் கிடையாது. உண்மையில் இவர்கள் தங்கள் தலைமுறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களை விடத் தீவிரமாக இயங்குகிறார்கள். விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள்.

சுகிர்தராணியும் மாலதி மைத்ரியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் காலச்சுவட்டோடு அவர்கள் நின்று பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் இந்தத் தடவை தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன் என்ன யாரைப் பார்த்தாலும் காலச்சுவடு பூச்சாண்டி¨Âயே காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் கூண்டோடு அச்சப்படுமளவிற்கு அது என்ன சிறப்பு அதிரடிப்படையின் ஆயுத முகாமா? அது மாதத்திற்கு அய்யாயிரமோ பத்தாயிரமோ விற்கும் ஓர் பத்திரிகை! காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப்படுத்தியது. தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் களமாய் இருக்கிறது.

அது சுந்தர ராமசாமியின் காலந்தொட்டே இடதுசாரி எதிர்ப்பைக் கடைப்பிடிக்கிறது. பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்களை வெளியிடுகிறது. சமயத்தில் ஒரு மது விலக்குப் பிரச்சாரப் பத்திரிகை போல எழுதுகிறது என்றெல்லாம் எனக்கு நீண்டகாலமாகவே காலச்சுவட்டின் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றனவே தவிர இதில் பதற்றப்படுவதிற்கு எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காட்டில் துட்ட மிருகங்கள் ஆயிரமிருந் தாலும் பூனைக்கு எலிதான் எதிரி என்பது மாதிரி யிருக்கிறது உங்களின் காலச்சுவடு மீதான அணுமுறை.

பெரியாரிய இஸ்லாமிய இடதுசாரி எதிர்ப்பு என்பதெல்லாம் குட்டி பிஜேபி நிலைப்பாடுதான். இப்படியான அதிவலதுசாரிப் பத்திரிகையோடு கலகப் பிரதிகளையும் இந்துத்துவ எதிர்ப்புப் பிரதிகளையும் எழுதுவதாகச் சொல்பவர்களால் எப்படி இணைந்திருக்க முடியும்?

உங்கள் கொள்கைப்பற்று வரவேற்கத்தக்கது என்றாலும் கூட நீங்கள் தமிழ் இதழியல் பதிப்புச் சூழல்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே மிகச்சில மூத்த எழுத்தாளர்களையும் மு.க.கனிமொழியையும் தவிர்த்து மற்றவர்களுக்கான பிரசுர வாய்ப்புக்கள் இன்னும் சிக்க லாகத்தானிருக்கின்றன. நமது தோழமைக்குரிய எல்லா எழுத்தாளர்களும் நானும்கூட குமுதம் விகடன் குழும இதழ்களில் எழுதிக்கொண்டுதானிருக்கிறோம்.

எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நமது கருத்துக் களைச் சமரசமில்லாமல் சொல்வதென்பது வேறு வாய்ப்புகளுக்காகவே சமரசம் செய்துகொண்டு வாய்ப்பளிப் பவர்களின் அல்லக்கைககளாகச் செயற்படுவதென்பது வேறு. அல்லக்கைகளை விட்டுவிடுவோம். காலச்சுவட்டில் எழுதிக்கொண்டிருக்கும் மாலதியும் சுகிர்தராணி யும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் நீங்களும் உடன்படுகிறீர்கள். காலச்சுவட்டுக்காக அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவில்லை.

இலக்கியத்தைப் பொருட்படுத்தாத தமிழ்க் கூட்டு மனநிலையைக் கருத்தில் வைத்துத்தான் நாம் தனி எழுத்தாளர்களை மதிப்பீடு செய்ய முடியும். இந்த இலக்கிய மறுப்புச் சãகப் படுகுழியிலிருந்து அரவத்தையோ அல்லது கயிற்றரவையோ பிடித்துத்தான் ஏற வேண்டியிருக்கிறது.

புலம்பெயர்ச் சூழலில் பெண் படைப்பாளிகள் பெரிதாக உருவாகாத காரணங்கள் என்ன?

அப்படிச் சொல்லிவிட முடியாது. அய்ந்தரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள்? மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்கப் பெண் எழுத் தாளர்களாக ஒரு இருபது பேர்கள் இருப்பார்களா? அப்படிப் பார்த்தால் அய்ந்து இலட்சத்திற்கும் குறைவாகயிருக்கும் புலம் பெயர்ந்த எங்களிடையேயிருந்தும் ஆழியாû, பிரதிபா தில்லைநாதன், நிரூபா, Èஞ்சினியென்று நான்கு பேர் உருவாகித் தானேயிருக்கிறார்கள். பெண் படைப்பாளிகளென்றில்லை புகலிடத்தில் ஆண் படைப்பாளிகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் கவனிக்கத்தக்க எழுத் தாளர்களாக நான்குபேர்தானேயிருக்கிறார்கள். இதற்கு மேலும் குறிப்பிடக்கூடிய படைப்பாளிகள் உருவாகாததற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன.

புகலிடச் சூழலில் தமிழர்கள் செறிவற்று வாழ்வதால் தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் படைப்பு மனநிலையைத் தக்க வைத்திருப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. புகலிடப் படைப் பாளிகளில் யாருமே கல்வித்துறை சார்ந்தவர்களல்ல. சீவியத்திற்காக இரவுபகலாக வேறு துறைகளில் உழைத்துக்கொண்டு இலக்கிய வாசிப்புக்கும் இலக் கியப் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதும் கடினம். இதைத் தவிர நேரடியான அரசியல் வேலைகளிலும் புனர் வாழ்வுப் பணிகளிலும் அவர்கள் தங்களது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கிறார்கள்.

இவை எல்லா வற்றிற்கும் மேலாக புகலிட எழுத்தாளர்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் இருக்கிறார்கள். எழுதுவதாலும் பத்திரிகைகள் வெளியிட்டதாலும் புகலிடஎழுத்தா ளர்கள் பலதடவைகள் புலிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிலாளர் பாதை பத்திரிகையை விற்ற தோழர்கள் பாரிஸ் வீதிகளில் வைத்துப் புலிகளால் இரண்டுதடவைகள் தாக்கப்பட்டார்கள். மனிதம் தாயகம் போன்ற பல பத்திரிகைகள் புலிக் குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பிரத்தியேகமான சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் புகலிடத்திலிருந்து எழுத வேண்டியிருக்கிறது.

கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?

ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள் தொழில் செய்கிறார்கள் கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே. அரசும் அரசியலதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் மதத்தலைவர்களும் சிங்கள மக்களைப் பவுத்தத்தின் பெயரால் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அணி திரட்டப் பலவருடங்களாகவே முயன்றுவருவது உண்மைதான்.

ஆனால் எப்படிப் பரந்துபட்ட தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லையோ அது போலவே சிங்கள மக்களும் இந்த யுத்தத்தை வெறுக்கி றார்கள். தமிழ்த் தேசிய - சிங்கள இனவாத சக்திகளின் தடுப்பரண்களையும் மீறி சுனாமி அனர்த்தத்தின் போது அந்த மக்கள் ஒருவர் மீதான மற்றவரின் வாஞ்சையை மறுபடியும் நிரூபித்துக் காட்டினார்கள். சுனாமி நிவாரண நிதியாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்று அரசும் புலிகளும் சண்டை யிட்டுக் கொண்டிருந்தபோது சத்தமேயில்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சிங்கள மக்கள் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற கருத்தாக்கத்தை உலகுக்கு வழங்கிய பிரான்ஸிலிருந்து பேசுகிறீர்கள். பிரான்ஸ் ஈழத் தமிழர்களை கருப்பர்களை இஸ்லாமியர்களை எப்படி நடத்துகின்றது?

பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனார்டி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நமக்குப் பிரஞ்சுக்காரர்கள் கேளிர்தான். ஆனால் நாம் பிரஞ்சுக்காரர்களுக்குக்டி கேளிரா என்பதுதான் பிரச்சினையே! மூன்றாம் உலகநாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும்வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டுவந்த தேசிய இனச்சிக்கல்களா லும், இனக்குழு மோதல்களாலும், வெள்ளையர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலகநாடுகளில் War lord¸¨Ç உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடி வரும் மூன்றாம் உலக மக்களை வரவேற்பதற்காக அய்ரோப்பிய அரசுகள் தமது எல்லைகளில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”என்று வரவேற்பு வளைவுகளை வைத்திருப்பதில்லை.

அவர்கள் எல்லைகளில் கொழுத்த வேட்டை நாய்களையும் இனவெறி பிடித்த பொலிஸ் குண்டர்களையும்தான் வைத்திருக்கிறார்கள். அய்ரோப் பாவின் எல்லைகளுக்குள் நுழைய முற்படும் ஈழ இஸ்லாமிய கறுப்பு சீன அகதிகள் நாள்தோறுமே கிழக்கு அய்ரோப்பாவின் பனிப்பாலைகளில் நடந்து வருகையில் விரைத்தும் போலந்தின் ஆறுகளில் மூழ்கியும் இறக் கிறார்கள். அத்திலாந்து சமுத்திரத்தில் படகுகளோடு ஜலசமாதி அடைகிறார்கள். மீறியும் மேற்கு அய்ரோப்பிய எல்லைகளைத் தொடுபவர்களில் கணிசமானோர் உடனடியாகவே அவர்களின் சொந்த நாடுகளுக்குக் கொலைக்களங்களுக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்ட மான ¦ƒÉ¢Å¡ 25 ƒ¥¨Ä 1952 அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும்போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறுமாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயி ருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளÅ¢லான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சாய்வுச் சிந்தனையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஸ்டாலினிஸ எதிர்ப்பாளர்களுக்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான மற்றைய காரணங்கள்.

இந்த மூன்று காரணிகளும் இன்றைய அய்ரோப்பியச் சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்த மற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் அய்ரோப் பிய முதலாளியம் அபரிமித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற்சங்க உரிமைகள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற் சாலைகளையும் நகர்த்தியது. இப்போது Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடி கட்டிப் பறக்கின்றன.

மேற்குநாடுகளில் தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டதாலும் ஆட்குறைப்பாலும் அய்ரோப்பியத் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக் காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில் லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக் காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொள்கின்றன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலக நாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும்தான் தேவையே யொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப் படும் கூலித் தொழிலாளர்கள் தேவையில்லை.

இன்று பிரான்ஸில் மட்டும் 300000 நிராகரிக்கப்பட்ட Sans Papiers என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத் தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள் போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டி ருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. பிரான்சுக்கு அகதிகளாக வருபவர் களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள்.

ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக பிரான்ஸிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு கடந்த இருபது ஆண்டுகளில் அகதிகளாகப் பிரான்சுக்கு வந்து சேர்ந்த முசுலீம் மக்களும் சேர்ந்தபோது பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்கு? அவர்கள் அகதிகளுக்கு மூடிய கதவுகளில் முசுலீம்களின் பெயரால் ஒருபெரிய பூட்டையும் இப்போது தொங்க விட்டிருக்கிறார்கள்.

எதிர்வரும் அதிபர்டிதேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான ஹிவிறியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக் கும் இன்றைய உள்துறை அமைச்சரான சாக்கோஸியின் குரல் ஒரு நியோ நாஸியின் குரல் போலவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் பிரான்ஸின் முதன்மையானதும் உடனடியானதுமான பிரச்சினையாக குடியேற்ற வாசிகளையும் அகதிகளையும்தான் குறிப்பிடுகிறார். சென்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லியனல் ஜோஸ்பனை முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பச்சை இனவாதியான லூ பென்.டி லூ பென்னின் பெருகிவரும் செல்வாக்கும் சாக்கோஸி போன்றவர்கள் நாட்டின் அதிஉயரடி பீடத்தில் அமருவதும் நம்மை நெருங்கிவரும் அபாயங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

;ó¾¢Ãõ, ºÁòÐÅõ, º§¸¡¾ÃòÐÅõ என்று முழங்கியபடியேதான் இவர்கள் வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் வகைதொகையில்லாத கூட்டுப் படுகொலைகளை நடத்தி முடித்தார்கள். சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்று சொல்லியபடியேதான் கடல் கடந்த மாகாணங்கள் என்ற பெயரில் நான்கு நாடுகளையும் பதினொரு தீவுகளையும் இன்றுவரை பிரஞ்சுக் கொலனிகளாக வைத்து சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதெல்லாம் அய்ரோப்பியர்களுக்கு மட்டும்தான். “ஓர் அய்ரோப்பியனைக் கொல்வது ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வதாகும். அது ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக்கட்டுவதாகும்: அங்கே கிடப்பது ஒரு பிணம் þங்கே இருப்பது ஒரு சுதந்திர மனிதன்” என்று சார்த்தர் சும்மாவா சொன்னார்?

பார்ப்பனர்களே இல்லாத ஈழம் - புலம்பெயர் சூழலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பை முன் வைத்துப் பேசுவதற்கான முகாந்திரங்கள் என்ன?

சிங்களவர்களையே கண்ணால் பார்த்திராத நீங்களெல்லோரும் சிங்கள எதிர்ப்புப் பேசுகிறீர்களே அதுபோல் நான் நிச்சயமாகப் பேசவில்லை. ஈழத்துச் சூழல் பார்ப்பனர்களே இல்லாத சூழல் என்று சொல்வது சரியாகாது. அவர்கள் அற்பசொற்ப தொகையி லிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைமுறை பார்ப்பனிய வாழ்க்கை முறையாகவேயிருக்கிறது. அவர்கள் பார்ப்பனர்களாகத்தான் வாழ்கிறார்கள். இன்றும் பார்ப்பனர்கள் ஈழத்தில் முற்று முழுவதுமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் பொருளியலிலும் நேரடி ஆதிக்கசக்திகள் இல்லைதான். ஆனால் இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அவர்கள்தான் உச்சத்திலிருக்கிறார்கள். பார்ப்பனியம் என்பது வெறுமனே சாதியடுக்கில் உச்சத்திலிருப்பது மட்டுமல்ல சாதியத்தை வடிவமைத்துக் காத்து வருவதும் அதுதான் என்ற புரிதல் எனக்கிருக்கிறது.

இன்னொரு முக்கியமான விசயமுமிருக்கிறது. இந்திய ஆளும்வர்க்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சனையையை தனது நலன்களது நோக்கிலேயே ஆரம்பம் முதலே அணுகிவருகிறது. அது அதற்காக அமைதிப்படையின் காலத்திலே எங்கள் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது. சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் சித்திரவதைகள் செய்து புதைத்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்களை அங்கயீனம் செய்தது. இந்திய ஆளும் வர்க்கம் என்பது யார்? இந்திய அரசின் பொரும்பாலான உயரதிகாரிகளும் படைத்தளபதிகளும் இந்திய அரசின் கொடுமைகளை இன்றுவரை நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகச் செல்வாக்குமிக்கவர்களான இந்து ராம் போன்றவர்களும் யார்? அவர்கள் பார்ப்பன- பனியா நலன்களை மட்டும் கருத்திலே கொண்ட சாதிப்பற்றாளர்கள் சனநாயக விரோதிகள். இந்தியப் பார்ப்பனர்களின் அதிகார விருப்புகளும் ஆதிக்க எல்லைகளும் இந்தியாவுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஈழம் வரைக்கும் தனது விஷ நாவை எறிந்துதான் வைத்திருக்கிறது. அது அரசிய லில் என்றாலும் சரி! பண்பாட்டில் என்றாலும் சரி! இலக்கியத்தில் என்றாலும் சரி!

சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்ட தென அசோகமித்திரன் சொல்கின்றாரே?

அவர் அதை மட்டுமா சொன்னார்? சங்கராச்சாரியார் மீது விசாரணை தொடங்க முன்னமே பத்திரிகைகள் சங்காரிச்சாரியரைக் கொச்சைப்படுத்திவிட்டன என்றார். தமிழகத்தில் பார்ப்பனர்களின் நிலைமை நாஸிகளின் கைகளில் அகப்பட்ட யூதர்களைப் போலாகிவிட்டது எனச் சொன்னார். சிறுபத்திரிகையொன்று நடத்துவதற்காக அவரின் வீடேறிக் கதை கேட்கப்போன தோழர்களை பார்ப்பனர்களைத் திட்டத்தானே பத்திரிகை தொடங்குகிறீர்கள் எனத் திட்டித் துரத்திவிட்டார். இப்போது சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விðடதெனச் சாபமிட்டிருக்கின்றார். அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல தமிழக ஈழத்து ஆதிக்கசாதி எழுத்தாளர்கள் பலருக்கு எண்பதுகளிற்குப் பிந்திய சிறுபத்திரிகைகளின் போக்குகள் உவப்பில்லாமல்தான் போய்விட்டன.

அமைப்பியல்வாதம் பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. ‘கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்’ என்றார் சுந்தர ராமசாமி. ‘சமூக விரோத எழுத்துக்கள்’ என்றார் யமுனா ராஜேந்திரன். கொஞ்சம் புத்திசாலிகளான ஆதிக்கசாதி விமர்சகர்கள் ‘இவர்களுடைய எழுத்துக்கள் புரிவதே யில்லை’ என்றார்கள். இப்படி இவர்களால் அழுக்காறு கொள்ள முடிந்ததே தவிர இவர்களால் இந்தப் புதிய சிந்தனைகளைக் கோட்பாட்டுத் தளத்திலோ புனைவுத் தளத்திலோ எதிர்கொள்ள முடியவில்லை.

முக்கியமாக இந்தப் புதிய சிந்தனைமுறைமைகள் குறித்த அறிமுகங்களும் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சிறு பத்திரிகைகளில்தான் முழுவதுமாக முன்னெடுக்கப் பட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளும் கோட்பாடுகளும் இலக்கியத்தளத்தில் தலித் பெண்ணிய விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிகளை முன்னிறுத்த தலித் பெண்ணிய விளிம்புநிலைப் பிரதிகள் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பேசுபொருட்களாயின. புதிய புதிய எழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் சிறப்பான இலக்கியப் பிரதிகளை எழுதத் தொடங்கினார்கள். பார்ப்பன எழுத்தாளர்களின் பீடங்கள் ஆட்டங் காணத் தொடங்கின. எண்பதுகளுக்குப் பிந்திய சிறுபத்திரிகை இயக்கத்தில் அவர்களுக்கு இடமேதுமில்லை. இந்த வயிற்றெரிச்சலோடுதான் அசோகமித்திரன் சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டது என்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் காலம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் சாபமிடுவார்கள்.

ஒரு இலக்கியவாதியாகவும் செயல்பாட்டாள ராகவும் இருக்கும் தங்களுக்கு பிரான்சின் மீதான விமர்சனங்களை எழுதியோ பேசியோ வெளிப் படுத்திவிடுகிறீர்கள். புலம்பெயர்ந்து பிரான்சில் அடைக்கலம் கண்டுள்ள மற்றவர்கள் இவ்விமர் சனங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார் கள்? அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம் அங்கிருக்கிறதா?

முதலாளிய அமைப்புமுறையை நடத்திச் செல்வதற்கு அவசியமான அளவிற்குப் பிரான்ஸின் ஆட்சியாளர்கள் முதலாளிய சனநாயகத்தை அனுமதித்திருக்கிறார்கள். அகதிகளுக்கான அமைப்புகளும் வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களும் போர் எதிர்ப்பு இயக்கங்களும் G நாடுகளுக்கான எதிர்ப்பு இயக்கங்களும் பிரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போராட்டங்களை இந்தியப் பொதுவுடமைக் கட்சிகளின் தொழிற்சங்கங்களின் போராட்ட வடிவங்களோடு நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். அந்த ரேஞ்சுக்கு மேல் எதுவுமில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் பொதுவுடமை இயக்கங்களாவது அற்ப சொற்ப வெற்றிகளைச் சாதிக்கின்றன. பிரான்ஸிலோ ஒரு மாலைநேர ஒன்றுகூடல் மத்தியதர வர்க்க இளைஞர் களின் சாகசம் என்பவற்றை மீறிப் போராட்டங்கள் வெகுசனங்களின் கவனயீர்ப்பையோ குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையோ அண்மைக்காலங்களில் பெறுவ தில்லை.

ஈராக்கின் மீதான அமெரிக்காவின் யுத்தம் குறித்தோ சதாம் உசேனின் படுகொலை குறித்தோ ‘ப்ச்’ என்ற இதழ் வெடிப்பைத் தாண்டி இன்னொரு சத்தம் பிரான்ஸிலிருந்து எழவில்லை. எங்காவது அறிவுத்துறையினர் மத்தியிலிருந்தோ பல்கலைக் கழகங்களின் மண்ட பங்களிலிருந்தோ ஏதாவது ஈனசுரம் எழுந்திருக்கலாம். ஆனால் அது என் காதுகளிலோ அல்லது பாரிஸ் தெருக்களிலோ சதுக்கங்களிலோ விழவில்லை. 2005 ஒக்§¼¡பரில் இரண்டு வடஆôபிரிக்க இளைஞர்கள் பொலிஸாரால் துரத்தப்படும்போது மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்தபோது கறுப்பின இளைஞர்களாலும் அரபு இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான அரச எதிர்ப்புப் போராட்டத்தின்போது அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. போராட்டக்காரர்கள் ஒளிந்திருப்பதாகக் கூறிக் காவற்துறை ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்ணீர்ப்புகைக் குண்டு களை வீசியது.

மூவாயிரத்துìகும் மேலான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் எனக் கருதப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அய்ம்பது வருடங்களிற்குப் பின் குறிப்பிட்ட நகரங்களில் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வந்தன. சுருக்கமாகச் சொன்னால் சட்டங்களை மீறாமல் சட்டங்களை எதிர்த்துப் போராடலாம் என்பதுதான் பிரான்ஸின் கண்கட்டி சனநாயகம். இந்த பெயரளவிலான சனநாயகத்திற்குக் கூட ஆபத்து வருவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் சனநாயக அமைப்பே இல்லாத போதும் அங்கே முதலாளியம் வேகமாக வளர்ந்து வருவதால் முதலாளிய வளர்ச்சிக்குச் சனநாயக அமைப்பு இன்றியமையாததுதானா என்ற திசைகளில் முதலாளித் துவ அறிவுஜீவிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

சிங்கள பேரினவாதத்தை அரச வன்முறை மூலம் நிலைநிறுத்துகிற இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு புறம். சாதிய மேலாதிக்கத்திலும் முஸ்லிம் வெறுப்பிலும் ஏகாதிபத்திய ஆதரவிலும், மாற்றுக் கருத்துக்களை,அமைப்புகளை சகித்துக்கொள்ளாத அ-ஜன நாயகப் போக்கிலும் சிக்குண்டிருக்கும் விடுதலைப் புலிகள் மறுபுறம். இவ்விரு கருத்தோட்டங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை மிக வலிமையாக தங்களது கொரில்லா, ம், வேலைக் காரிகளின் புத்தகம் ஆகியவை தெரிவிக்கின்றன. எனில் இலங்கைக்கு எத்தகைய சமூகத்தை மாற்றாக முன்மொழிகிறீர்கள்?

இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகின்றனர். இருதரப்புகளுக்கும் முட்டுக்கொடுத்து நிற்கும் சிங்களப் பேரினவாத மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் சிங்கமும் புலியும் தின்றதுபோக எஞ்சும் மிச்சம் மீதிக்காக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள். இந்த யுத்தம் மக்களின் யுத்தமல்ல. இந்த யுத்தத்திற்கும் வெகுசனங்களின் நலன்களுக்கும் எதுவித நேர்மறை யான தொடர்புகளுமில்லை.

அரசு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பயங்கரவாதத்தோடு யுத்தம் செய்வதாகச் சொல்கிÈது. புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களின் இந்த யுத்த சன்னதத்திற்குள் கொல்லப்படுபவர்களும் காணமற் போனவர்களும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் யார்? ஏழைச் சிங்களக் கிராமப்புற இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். புலிகளோ மும்முரமாகப் பிள்ளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைக் கொலைகாரப் புலிகளுக்கு தாரைவார்த்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம். இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்திற்கு ஒளிந்து திரிந்த காலம் போய் இப்போது புலிகளுக்கு ஒளிந்து திரிகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இளையவர்கள் வெளியேறுவதற்கும் மணம் முடிப்பதிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அர்த்தமற்ற யுத்தம் முப்பது வருடங்களாகத் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சாதித்த நன்மைகள் என்ன? தமிழர்களாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் முஸ்லீம்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர்ட புலிகளால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். இருபது வருடங்களாக அரசும் புலிகளும் விட்டுவிட்டுத் தொடரும் பேச்சுவார்த்தை களால் விளைந்த நன்மைகள் என்ன? அரசின் சிறைகளில் காலவரையற்ற தடுப்புக் காவல்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். போதாதற்கு 1980ளில் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பெயர்பெற்ற ஸ்தலமாயிருந்த பூசா தடுப்பு முகாமை மீண்டும் திறக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வடபகுதியிலிருந்து புலிகளால் கொள்ளையிடப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லீம்களால் இன்னும் வடபுலத்தில் மீளக் குடியேற முடியவில்லை.

இன்று நமக்குத் தேவையாயிருப்பது தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் அய்க்கியம்தான். ஆனால் இந்த அய்க்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சிங்கள் தமிழ் இனவாதிகள் மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் கவனமாயிருக்கிறார்கள். இலங்கை உழைக்கும் மக்களின் அரசியல் அய்க்கியம் மட்டும்தான் பேரினவாத அரசையும் பாஸிஸப் புலிகளையும் தோற்கடிக்கும். அந்த அய்க்கியம்தான் இலங்கையின் இறைமைவெளிகளில் அத்துமீறி நுழையும் சர்வதேச வல்லாக்க சக்திகளையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து நிற்கும். அந்த அய்க்கியம்தான் தீவின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் தீர்வையும் வழங்கும். இன வாதமும் யுத்தமும் தமிழ் சிங்கள முதலாளிய அரசியலாளர்களின் நலன்களிலிருந்தே உயிர் வாழுகின்றன என்ற புரிதலோடு இடதுசாரி அரசியல் இயக்கங்களின் வழியே தான் நாம் இந்தத் திசைவழியை நோக்கி நகரமுடியும்.

உண்மையில் இந்த அரசியல் வழியில் முன்கை எடுக்க வேண்டியவர்கள் சிங்கள இடதுசாரிகளே. அவர்களின் செயற்திறன்தான் பெரும்பான்மை இனத்தின் மீது சிறுபான்மை இனங்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழ்ச்சூழலைப் பொறுத்தளவில் பாரம்பரிய இடது சாரிக் கட்சிகளின் துரோகங்களாலும் பேரினவாத்தின் அடக்குமுறைகளாலும் நம்பிக்கையிழந்து சில தசாப்தங்களாகவே இனவாத அரசியல் பரப்புரைகளுக்குள் மூழ்கி யும் யுத்தத்தின் வடுக்களை அனுபவித்தும் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை இன அய்க்கியத்தையும் இடதுசாரி அரசியலையும் நோக்கித் திருப்புவதைக் கற்பனை செய்வதுகூட சிரமாமாய்த்தானிருக்கிறது. என்னுடைய இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் இன்னொரு தமிழரைக் கண்டுபிடிப்பது அதைவிடச் சிரமம். ஆனால் ஒரு கருத்து எவ்வளவு தூரத்திற்கு அதன் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல அந்தக் கருத்தின் நியாயமும் தார்மீகமும்.

சாதிய ஒடுக்குமுறையின் பிரிக்கவியலாத பகுதியே பெண்ணிய ஒடுக்குமுறையும். எனில், போராளிக்குழுக்களில் பங்கேற்றுள்ள பெண்கள் குறித்து இயக்கங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள மதிப்பீடு எவ்வாறுள்ளது? அவர்களால் இயக்கங்களின் அதிகாரம் பொருந்திய முக்கியப் பொறுப்புகளுக்கு வர முடிந்திருக்கிறதா?

ஆயுதந்தாங்கிய இயக்கங்களில் மட்டுமல்லாது அரச படைகளிலும் கூடத்தான் பெண்கள் உலகம் முழுவதும் இயங்கிவருகிறார்கள். ஆயுதம் தாங்கிக் களத்தில் நிற்பதென்பது வேறு பெண்ணிய விடுதலையென்பது வேறு என்பதை முன்நிபந்தனையாக வைத்துக்கொண்டு ஈழப் போராட்ட இயக்கங்களில் பெண்களின் நிலையைக் குறித்துப் பேசுவோம்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களிலிருந்து எழுபதுகளில் தொடக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவை தமிழீழ விடுதலை இயக்க காலங்களிலிருந்தே பெண்களுக்கு ஈழப் போராட்டத்தில் பங்கிருக்கிறது. ஊர்மிளா, சி. புஸ்பராணி, கனகராணி, அங்கயற்கண்ணி திலகவதி, கல்யாணி, சங்கானையம்மா, யோகராணி போன்ற பலர் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டார்கள். சிறை சென்றார்கள் வதைபட்டார்கள். ஆனால் அமைப்புகளின் தலைமை களிலோ முடிவெடுக்கும் அதிகாரங்களிலோ இவர் களுக்கு எந்த இடமும் வழங்கப்படவில்லை.

இரண்டாம் கட்டமாக 1983 எழுச்சியுடன் இன்னொரு தொகைப் பெண்கள் ஆயுதப் போராட்டத்தோடு இணைந்தார்கள். குறிப்பாக அப்போது ஈபிஆர்எல்எப் புளொட் ஆகிய அமைப்புகள்தான் பெண்களைப் பெருமளவில் அமைப்புகளாகத் திரட்டின. புளொட் அமைப்பின் மத்திய குழுவில் உஷா இடம் பெற்றிருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால் பெண்களுக்கு முக்கியத் துவத்தை எந்த இயக்கமுமே கொடுத்திருக்கவில்லை. அப்போது இயக்கங்களுக்கு வந்திருந்த பெண்களில் சிலர் இயக்கத்தின் தலைமைப்பீட உறுப்பினர்களுக்கு மனைவிகளானதுதான் மிச்சம் என்று கசப்புடன் புஷ்ப ராஜா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார்.

1986களில்தான் விடுதலைப்புலிகள் அமைப்பு பரவலாகப் பெண்போராளிகளை உள்ளீர்க்க ஆரம்பித்தது. கிடுகிவேலிக் கலாசாரத்துக்குள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று விடுதலைப் புலிகளின் அமைப்பில் முக்கியப் படையணிகளாகத் திகழ்கிறார்கள். அவர்கள் கிடுகுவேலிக் கலாசாரத்திலிருந்து பாஸிச கலாசாரத்துக்குள் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள். புரட்சிகர இயக்கங்களில் மட்டுமல்ல எதிர்ப்புரட்சி அமைப்புகளிலும் பெண்களும் சிறுமிகளும் திரட்டப்படுவது உலகத்திற்கு ஒன்றும் புதிதல்ல. யோவேறி முசோலினியின் NRAகூடத்தான் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் திரட்டப்பட்டனரடி. உலகம் முழுவதும் பல War lord À¨¼Â½¢¸Ç¢ø பெண்கள் திரட்டப்பட்டுத் தானிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு கலாச்சார அடிப்படைவாத அமைப்பு என்பதை நான் பல்வேறு தருணங்களில் விளக்கியிருக்கிறேன். தமிழ்க் கலாசாரப் பெருமிதம் சங்க காலப் பெருமிதமும் கொண்டவர்களவர்கள். யாழ்ப்பாணச் சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படும் கசடுகளை மயிரளவும் தவறாமல் தாங்கள் கடைபிடிப்பதாக அவர்கள் பெருமையடிப்பவர்கள். அவர்கள் பாலியல் தொழிலாளர்களைக் வீதிகளிலே கொலை செய்யும் காட்டுமிராண்டித்தனங்களைப் பார்டித்தாலே அவர்களது கலாச்சார அடிப்படைவாத வெறி தெட்டத் தெளிவாகத் தெரியும். ஏறக்குறைய இருபதாயிரம் சிவப்பு ரோஜாக்கள் கமல்†¡ºýகள் எங்கள் நாட்டில் கைகளில் துப்பாக்கிகளுடன் திரிகிறார்கள்.

இந்தக் கலாச்சார அடிப்படைவாதமும் ஆண் முதன்மைவாதமும் பண்பாட்டு மீட்புவாதமும் அமைப்பிற்குள் இருக்கும்வரை நவீன பெண்ணிய சிந்தனைகளும் அமைப்பிற்குள் வரப்போவதில்லை. அவை வராமல் பெண் ஆளுமைகள் அமைப்புக்குள் தீரடிமானகரமான சக்திகளாக வரப்போவதுமில்லை. உண்மையில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் களங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் கலாச்சாரத்தையும் சுமந்து கொண்டுதான் நகரவேண்டியிருக்கிறது.

ஈழத்தில் நிலவும் போர்ச்சூழல், வாழ்வாதரங்களை இழந்து நிராதரவாகுõ அவலம், உயிரின் நிலையற்றதன்மை போன்ற காரணிகளால்தான் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளில் பெரும்பாலோர் தங்களது சமகால அரசியல் பிரச்னைகளை மையப்படுத்தி தாம் வாழும் காலத்தை பிரதிபலிக்கிற படைப்புகளை காத்திரமாக முன்வைக்கின்றனர் என்றொரு கருத்து இங்குள்ளது. இங்கும் கலாச்சார நடவடிக்கைகள் மதவெறியர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு சுதந்திரமடைந்த நாட்டின் குடிமக்களுடைய சகல ஜனநாயக உரிமைகளும் பெயரளவிலேயே உள்ளன. ஊடகங்களின் அரசியல் அவற்றை நியாயப்படுத்துவதாக இருக்கிறது. உலகமயமாக்கல் பின்னணியில் மக்களின் காலடி மண்ணிலிருந்து வாழ்வாதாரங்கள் யாவும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன. தொடரும் விவசாயிகளின் தற்கொலை… போலிசோ ராணுவமோ தனது பதக்கங்களுக்காக என்கவுண்டரில் போட்டுத் தள்ளாத வரைதான் மக்களின் உயிர் வாழும் உரிமை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதை பேசிக்கொண் டிருக்கும் இந்த கணத்திலும் இந்த நாட்டின் பல பாகங்களிலும் சாதிய/ பாலின ஆதிக்கத்தின் பெயரால் படுகொலைக்கும் வன்தாக்குதலுக்கும் ஆளாகி துன்புற்று மாயும் உயிர்களை இனி மேல்தான் கணக்கெடுக்க வேண்டும். இந்த நுட்பமான வன்முறைகளால் பின்னப்பட்டிருக்கும் சூழலை புறக்கணித்து, வாழும் சமூகம் குறித்த பிரக்ஞையற்று தன்மீதான கழிவிரக்கம் சுய புலம்பல் உள்மனக் கிளர்ச்சிகளையே விதந்தோதி கொண்டாடவேண்டிய உன்னதப் படைப்புகளென்றும், அதற்கிசைவான இஸங்களையே துதிபாடி துய்ப்பவர்களாகவும் வாசிப்பு இன்பம், படைப்பு இன்பம் என்று பிதற்றியபடியுõ திரியும் அனேகத் தமிழ் படைப்பாளிகளின் பொதுப்புத்தியை எவ்வாறு ஊடறுப்பது?

அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் கண்டு மவுனமாயிருப்பதைவிட அல்லது நீங்கள் சொல்வது போல சூடு சுரணையேயில்லாமல் இருப்பதைவிட அதிகாரங்களையும் அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தி எழுதுபவர்களதான் பெரும் ஆபத்தானவர்கள். எங்களது சூழலில் அ.இரவி, கி.பி. அரவிந்தன் வாசுதேவன், யேசுராஜா, ஐங்கரநேசன் என ஒரு பெரும் கும்பலே பப்ளிக்காகப் பாஸிசத்தை ஆதரித்து எழுதி வருகிறார்கள். அ.முத்துலிங்கம் போன்று சமகால அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளை எழுதுபவர்களுமிருக்கிறார்கள். “சுத்த” இலக்கியத்திற்காக நடத்தப் படும் காலம் போன்ற பத்திரிகைகளும் வெளிவருகின்றன. எனவே ஈழ எழுத்தாளர்களைக்கூடப் பொதுமைப் படுத்தி சுரணையான அதிகாரங்களுக்கு எதிரான எழுத்தாளர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் அதேவேளையில் எந்த அதிகாரங்களிற்கும் பணிந்துவிடாமல் “சாகிறேன் பந்தயம் பிடி” என்று சொல்லிக்கொண்டே அதிகார மையங்களை விடாப்பிடியாக எதிர்த்துவரும் எழுத்து மரபும் இல்லாமலில்லை. ஆனால் இந்த மறுத்தோடிகள் மிகவும் சொற்பமானவர்கள்.

போருக்கு முந்திய சூழலும்கூட ஈழத்து இலக்கியச் சூழலில் மஹாகவி, மு.தளையசிங்கம், ஏ.ஜே. கனகரட்ணா போன்ற மேட்டுக்குடியினரின் இலக்கியச்செல் நெறிக்கும் கே. டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன்,தெணியான்,சுபத்திரன் போன்று ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து தோன்றியவர்களின் இலக்கிய செல்நெறிக்குமிடையில் துல்லியமான வேறுபாடுகளிருந்தன. டானியலிடமோ சுபத்திரனிடமோ வழு வழுத்த ஒரு சொற்கூடயிருக்காது. நான் குறிப்பிட்ட மேட்டுக்குடியினர் அரசியலில் நெளிவுசுழிவாக வாழ்ந்த வர்கள். ஆனால் டானியலும் மற்றவர்களும் தங்கள் வாழ்வையும் எழுத்தையும் மக்கள் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். எல்லாம் தெரிந்த ஏ.ஜே. கனக ரத்னா எந்த அரசியல் கட்சியிலும் இருக்காதது அவர் களுக்குப் பெருமைக்குரிய விடயமென்றால் நான்கு தடவைகள் கட்சியைவிட்டு நீக்கப்பட்ட பின்பும் கே.டானியல் மறுபடியும் மறுபடியும் கட்சியில் போய்த் தன்னை இணைத்துக்கொண்டதுதான் எங்களுக்குப் பெருமைக்குரியது.

இந்த மரபுதான் இன்னும் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சூழல்களிலும் தொடருகிறது. ஜோன் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகமும் கொலம்பியா பல்கலைக்கழகமும் ஆண்டுக்குச் சிலபல ஈழத்துத் தமிழர்களை புலமையாளர்களாக வெளித்தள்ளுகிறது. இவர்களில் ஒருவரின் குரலையாவது தமிழ்ச் சூழலில் நீங்கள் கேட்டதுண்டா? முனைவர் பட்டம் பெற்ற கையோடு அவர்கள் மேற்கத்திய நிறுவனங்களிடமும் என்ஜிஓ க்களிடமும் தங்களை ஒப்புக்கொடுத்துவிடுகிறார்கள். ஈழப் போராட்டத்தின் அவலங்கள் அவர்களைப் பொறுத்தவரையில் பட்டங்கள் பெறுவதற்கான ஆய்வுப் பொருட்கள் மட்டுமே. அதிகார மையங்களுக்கு எதிரான நெற்றியடியான நேரடியான பிரதிகளை விளிம்புகளின் குழந்தைகள் மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக எழுத்தாளர்களிடமும் இந்த விதிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன்.

(நன்றி: புதுவிசை)

May 18, 2007

விவாதங்களைக் கோரும் இரு கட்டுரைகள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 11:52 am

(1) தலித் இலக்கியமும் இன்றைய சூழலும - இமையம்
(2) நம் தந்தையரைக் கொல்வது எப்படி? -
மாலதி மைத்ரி


தலித் இலக்கியமும் இன்றைய சூழலும
இமையம்

சமூகச் சூழலும் வாழ்க்கைமுறையும்தாம் ஓர் இலக்கியப் படைப்பின் அடிப்படை ஆதாரங்கள். வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டதல்ல இலக்கியம். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட காலகட்ட இயக்கத்தையும் வாழ்க்கை முறையையும் இலக்கியப் படைப்பாக மாற்றுவது என்பது சமூகச் செயல்பாடு. பல்வேறு சமூகங்களின் பல்வேறு காலகட்ட நடப்பியல்களையும் வாழ்க்கை முறைகளையும் இலக்கியங்கள்தாம் பதிவுசெய்கின்றன. பிறகு அவை வரலாறுகளாக மாற்றம் பெறுகின்றன. அப்படி உருவாக்கப்படும் இலக்கிய வரலாறுகளின் நம்பகத்தன்மையைக் குறிப்பிட்ட படைப்பாளிகளின் சமூக அக்கறை, சமூக ஈடுபாடு, வாழ்வனுபவம், சமூகத்தைப் பார்த்த விதம், பதிவுசெய்த விதம் ஆகியவற்றோடு படைப்பாளியின் படிப்பு, மொழி குறித்த அறிவு, எழுத்துப் பயிற்சி என்று பலவும் சேர்ந்து உருவாக்குகின்றன. இவைகளே ஒரு படைப்பு, காலம் கடந்து வாழ்வதற்கும் உருவான வேகத்திலேயே உயிரை விடுவதற்குமான காரணங்களாகவும் இருக்கின்றன.

தமிழ் மொழியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான, ஒவ்வொரு விதமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. நடைமுறைக் காலத்தில் தலித் இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன. மார்க்சியம், பெண்ணியம், இருத்தலியல், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல், கட்டுடைத்தல் என்று இயங்கிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியச் சூழலில், நிறப்பிரிகை பத்திரிகையைச் சேர்ந்த ரவிக்குமார், அ. மார்க்ஸ் போன்றவர்கள்தாம் முதன்முதலில் தலித் இலக்கியம் குறித்துப் பேசியவர்கள், எழுதியவர்கள். மார்க்சியவாதிகள், மார்க்சிய இயக்கங்கள் பொதுவாகத் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்; ஆனால் சாதிய உள் முரண்பாடுகள் குறித்துப் பேசுவதில்லை; சாதிய உள் முரண்பாடுகள் ஒழியாமல் சாதியம் ஒழியாது என்ற வாதத்தை அவர்கள் நிறப்பிரிகையில் தொடங்கிய அதே காலத்தில்தான் அரசே அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. அதே காலத்தில் தலித் இலக்கியம் கர்நாடகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. பணியின் காரணமாகக் கர்நாடகத்தில் வாழ்ந்த தமிழக எழுத்தாளர்கள் கர்நாடக இலக்கியப் போக்குகள் குறித்துத் தமிழகத்தில் பேசினர். அதே காலகட்டத்தில்தான் வட தமிழகத்தில் திருமாவளவனும் தென் தமிழகத்தில் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தனர். இப்படிப் பல காரணிகள் பல முனைகளிலிருந்து உருவாகித் தமிழ் மொழியில் தலித் இலக்கியத்தை உருவாக்கின. இந்தப் போக்கு உருவாவதற்கு முன்னமே தலித் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளைப் பூமணி, சிவகாமி போன்றவர்கள் உருவாக்கியிருந்தனர்.

தமிழில் தலித் இலக்கியம் உருவாக ஆரம்பித்த 1985-1992 காலகட்டத்தில், தலித் இலக்கியம் என்று ஒன்று உண்டா, தனியாக தலித் இலக்கியம் என்று ஒன்று தேவையா, தலித் இலக்கியத்தின் வரையறைகள் என்ன, தலித் இலக்கியத்தின் அடிப்படையான கருதுகோள்கள் எவையெவை, தலித் இலக்கியத்தை யாரெல்லாம் எழுதுவது, பிறப்பால் தலித்தாக இல்லாதவர்கள் தலித் வாழ்வை இலக்கியப் படைப்பாக எழுதினால் அந்தப் படைப்புக்குப் பெயர் என்ன, அரசியல் களத்தில் சாதிரீதியாகத் தமிழ்ச் சமூகம் சிதறுண்டு கிடக்கும் நிலையில் இலக்கியத்திலும் அந்நிலை வேண்டுமா என்று கேட்கப்பட்ட நூற்றுக்கணக்கான கேள்விகள் இன்றைக்குச் சாரமிழந்து போய்விட்டன. அதற்குக் காரணம் இன்றைய சமூகச் சூழல்தான்.

இன்றைய சூழலில் தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகளில் மட்டுமல்ல, உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியமாக்கப்படுகின்றன. இவ்வகை இலக்கியங்களுக்குப் போதிய கவனமும் வரவேற்பும் கிடைக்கவே செய்கின்றன. அதே நேரத்தில் உலகெங்கும் ஒரே பண்பாடு, பொருளாதாரம், சந்தை, வாழ்க்கைமுறை என்ற வன்முறைக் கலாச்சாரத்தால் உலகெங்குமுள்ள சிறுசிறு இனக் குழுக்கள் தங்கள் பண்பாடு, அடையாளம், பூர்வ கலாச்சாரங்கள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைமுறைகள் இலக்கியப் படைப்புகளாக மாறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

தலித் வாழ்க்கை என்பதும் தலித் இலக்கியம் என்பதும் நவீனத்துவம், இருத்தலியல்வாதம், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடோ தத்துவமோ அல்ல; தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை அல்ல, கதை அல்ல; பெரும் திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்க நெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக, புராணிக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப் படையில் ஒரு வாழ்க்கை - வாழ்க்கை முறை.

தலித்துகளின் வாழ்க்கை, நிலம் சார்ந்தது; உழைப்புச் சார்ந்தது; கலைகள் சார்ந்தது. இன்றைக்கு உயிரோட்டமான மொழியைக் கொண்டிருப்பவர்கள் தலித்துகளே. நிகழ்த்துகலைகளின் பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் தலித்துகளே. தலித்துகளின் மொழி கலைக் குரிய மொழி. தங்களுடைய பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் நிலம் சார்ந்தும் நிலத்தோடு சேர்ந்த சூழல் சார்ந்தும் உருவாக்கியவர்கள். நிலத்தோடு வாழ்ந்து, அறிவும் நாகரிகமும் சாகசமும்செய்து வாழும் இனம் தலித் இனம். இந்த வாழ்க்கைமுறையிலிருந்துதான் தலித் இலக்கியம் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது வேறு.

எழுத்தாளனின், குறிப்பாக தலித் எழுத்தாளனின் கம்பீரம் எது, பலம் எது, பலவீனம் எது, கற்றுக்கொள்ள வேண்டியது எது, நிராகரிக்க வேண்டியது எது என்று அறிவித்துச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய சூழல் உருவாக்கியுள்ளது. இது எழுத்தாளனுக்குச் சூழல் தந்திருக்கும் சவால். இந்தச் சவாலைக் குறிப்பாக தலித் எழுத்தாளர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், எதிர்கொள்வார்கள்? இதுவரை தமிழில் வந்துள்ள படைப்புகளைப் பார்க்கும்போது எந்தச் சவாலையும் அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் படைப்பு ரீதியான சவாலைக்கூட அவர்கள் எதிர்கொள்ளவில்லை என்பதும் தெளிவாகும். இருபது, இருபத்தி ஐந்து ஆண்டுக் காலம் கடந்துவிட்ட நிலையில் சிறந்த தலித் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று பெரிய எண்ணிக்கையில் வராததே இதற்குச் சான்றாகும். தலித் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது மட்டுமே இலக்கியப் படைப்பாகாது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு பல கோட்பாடுகளை உருவாக்கலாம். ஆனால், எந்த ஒரு கோட்பாடும் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்க முடியாது. சூழலுக்கேற்ப, சூழலைப் பயன்படுத்திக்கொள்ள எழுதப் படும் படைப்புகள், படைப்பாளிக்கு முன்னரே உயிரை விட்டுவிடும். இதுதான் தமிழில் நடந்துகொண்டிருக்கிறது. தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் மட்டுமே அது தலித் படைப்பாகிவிடுமா? தலித்துகள் பயன்படுத்தக்கூடிய வழக்குகளை ஒரு படைப்பில் ஆங்காங்கே பயன்படுத்தினால் அது தலித் படைப்பாகி விடுமா? தலித்தின் ஊளையும் முரட்டுத்தனமான கோபமும் மட்டுமே தலித் படைப்பா?

பொதுவாக மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொடுப்பவன் வியாபாரி; எழுத்தாளன் அல்ல - முக்கியமாக தலித் எழுத்தாளன் அல்ல. இன்று தமிழ்ச் சூழலில் மட்டுமின்றி இந்திய, உலகச் சூழலில் இலக்கியச் சந்தையில் விலைபோகக்கூடியதாக இருப்பது ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களே. நவீன இயந்திரத்தின் தேவைகளும் வியாபார நோக்கத்தின் தந்திரங்களும் இலக்கியப் புத்தக வெளியீட்டைப் பரவலாக்கியிருக்கின்றன. உலகச் சந்தையும் வியாபாரப் போட்டியும்தாம் இதற்கு முக்கியக் காரணங்கள். தலித் எழுத்தாளருக்கு வாய்ப்புகள் தேடிவருகின்றன. தலித் படைப்புகளை வெளியிடுவதில் போட்டியும் இருக்கிறது - தற்குறித்தனமாக, படைப்புக்குரிய ஒழுங்கோ அழகியலோ இல்லாமல் எழுதினால்கூட. இதற்குக் காரணம் தலித் இலக்கியத்தை வியாபாரப் பொருளாக மாற்றும் நுண் அரசியல்தான். இந்த அரசியலைப் புரிந்து கொள்ளாமல், எழுதப்பட்ட வேகத்திலேயே நூலாக்கம் பெறுவது தவறா, வாய்ப்புகளை தலித் எழுத்தாளர்கள் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு என்று கேட்பது சரியல்ல. தலித் எழுத்தாளர்கள் நிறைய எழுதலாம், அவை உடனுக்குடன் புத்தகமாகவும் வரலாம், விற்கவும் செய்யலாம். ஆனால், அதற்கு மேல் என்ன? தலித்துகளின் எழுத்துக்கள்மீது அறிவுபூர்வமான விவாதங்கள், செயல்பாடுகள், பயிற்சிகள் இதுவரை தமிழில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா? தலித் படைப்புகள் உணர்ந்து படிக்கப்பட்டிருக்கின்றனவா? அவ்வாறு இல்லையெனில், தலித்துகளின் புத்தகங்கள் விற்பதால் என்ன பயன்? யாருக்கு லாபம்?

தலித்துகளின் வாழ்க்கை வெளிப்பாடு என்பது வலியும் ரணமும் கண்ணீரும் நிறைந்தது. இதைத்தான் இன்றைய சந்தைச் சூழல் கோருகிறது. தலித்துகளின் ஏக்கங்களை, இழிவுகளை, சில்லறைத்தனங்களை, காயத்தை, அசிங்கமான பகுதிகளை மட்டுமே இன்றைய சந்தை கோருவதேன்? தலித்துகளின் இப்படியான பகுதிகளை மட்டுமே தலித் எழுத்தாளர்கள் ஏன் உற்பத்திசெய்கிறார்கள்? இதுதான் அரிய வாய்ப்பு என்கிறார்களா? இதைப் பயன்படுத்திக்கொள்ளத்தான் தலித் எழுத்தாளர்கள் துடிக்கிறார்களா? வாழ்வின் சகல விஷயங்களையும் தாழ்வு மனப்பான்மையுடன் பார்ப்பது என்பது நோய்க்கூறு கொண்ட மனத்தின் செயல்பாடன்றி வேறென்ன? தேய்ந்துபோன பொது மொழியை, படிப்பின் மூலம் கிடைக்கப் பெற்ற சாரமற்ற மொழியை, ஊடகங்களின் செத்துப்போன மொழியை தலித்துகளின் மொழியாகக் கட்டமைப்பதும் மேட்டிமையோடும் மறுபுறம் இறைஞ்சும் தோரணையிலும் எழுதுவதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமா?

தலித்துகளின் படைப்புகளை வெளியிடுவதும் அதற்காகப் போட்டியிடுவதும் வெறும் வியாபாரத் தந்திரம் மட்டுமல்ல; நவீன இயந்திரத்தின் தேவை மட்டுமல்ல. தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், படித்தவர் படிக்காதவர் என்ற வித்தியாசமற்ற சமூகத்தின், சிக்கலான முடிச்சுகளைக் கொண்ட உழைப்புச் சுரண்டலை, பொருளாதாரச் சுரண்டலைச் செய்கிற சமூகத்தின், தொழிலால் வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் ஒதுக்கிவைத்த, ஒதுக்கிவைக்கும் நம் சமூகத்தின் இன்னொரு முகம் இது. இதற்குப் போட்டி போட்டுக்கொண்டு போவது என்பது தலித் எழுத்தாளர்கள் செய்யும் வரலாற்றுக் குற்றமாகும்.

தலித்துகளின் வாழ்க்கை என்பது கையேந்துதல், கூப்பாடு, ஒப்பாரி, அழுகை, அசிங்கம் மட்டும்தானா? தலித்துகளின் வாழ்க்கையில் சிரிப்பு, சந்தோஷம், விளையாட்டு, கலைகள் இல்லையா? தலித்துகளுக்கென்று பண்பாடு, வரலாறு, மொழி, ஒழுக்க நெறிகள், கூட்டு வாழ்வு எனச் செழுமையான பகுதிகளே இல்லையா? இப்பகுதிகளைத் தலித் எழுத்தாளர்கள் ஏன் எழுதுவதில்லை? இவற்றை ஏன் இன்றைய சந்தை கோருவதில்லை?

ஓர் இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் கலாச்சாரம்தான் என்றால், தலித் எழுத்தாளர்களின் நோக்கம் தலித் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் அதன் செறிவான பகுதிகளை, கூறுகளைப் பூரணமாக உள்வாங்கி, அவற்றை இலக்கியப் படைப்பின் மூலம் அடுத்தடுத்த காலகட்டத்துக்குக் கடத்துவதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் உலகத் தரத்துக்கு மட்டுமல்ல, இந்திய, தமிழ்த் தரத்துக்குக்கூடத் தலித் இலக்கியம் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதும் ஊளையையும் கோஷத்தையும் கோபத்தையும் பதிவுசெய்வதும் தமிழில் தலித் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவாது.

கேரளாவில் 29.12.2006 அன்று Integrating Dalit Culture and Politics of South India என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரை.

(நன்றி: காலச்சுவடு)

——————- ————————————————————-
நம் தந்தையரைக் கொல்வது எப்படி

மாலதி மைத்ரி

தந்தைவழி ஆட்சியின் கொடூரத்துக்குள் காலம் காலமாய் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் நாம். நம் நலனுக்காக என்று கூறி அடிமைத்தனத்தின் நஞ்சை பாலாடையில் புகட்டுபவர்கள் நம் தந்தையர். ஆதிக்கத்துக்கு அடிபணியும் வித்தையை கற்பிக்கும் பயிற்சியாளரும் இவர்தான். இதுதான் வாழ்வின் பேறு என போதிக்கும் மதகுருவும் இவ்வாழ்வொழுங்கு முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்கும் காவல்காரரும் இவரே. இந்தக் காவல்துறையின் துணை ஊழியராக இருக்க தாய் நிர்பந்திக்கப்படுகிறாள். தாய்க்கு பெண் என்ற அடையாளம்கூட தற்காலிகமாக மறுக்கப்படுகிறது. தாய் மகளை கண்காணிக்க வேண்டும், மகள் தாயை கண்காணிக்க வேண்டும், உளவுபார்க்க வேண்டும். இருவரும் ஒரே வலியையுடையவர்கள் என்றாலும் எதிரெதிராக வலியை செலுத்திக் கொள்ளும்படி ஒரேக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டவர்கள். ஒரு ஆண் தந்தை, கணவன் என்ற இரட்டை உரிமைகொண்டு மகள், தாய் என்ற இரண்டு அடிமைகளுக்கு எஜமானனாக இருக்கிறான். சமூக ஒழுக்க வரையறைகளும் விதிகளும் மீறப்பட்டால் தண்டனை விதிக்கும் நீதிபதியாகவும் அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறான். குடும்பம் என்பது ஒரு சிறுசிறையாகவும் அதில் தந்தை என்பவன் சிறை அதிகாரியாகவும் இருக்கிறான்.

ஒரு தந்தைக்கு தன் மகளுடன் ரத்தம் சம்மந்தப்பட்ட உறவு மட்டும் போதுவதில்லை. அவளை சமூகத்துக்கு நல்ல அடிமையாக உருமாற்றித் தரும் நல்ல மேய்ப்பன் என்ற அங்கீகாரமும் தேவைப்படுகிறது. பலியாடுகள் தாங்களே பலிபீடங்களை தேர்ந்தெடுப்பதற்குக் காதல் என்ற பெயரும், குடும்பம் பலிபீடத்துக்குக் கொண்டு நிறுத்துவதை திருமணம் என்ற பெயரும் அளிக்கப்படுகிறது. இக்குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்துக்குப் போகும் பெண் அவள் ஏற்றுக்கொண்ட அல்லது அவள் மீது திணிக்கப்பட்ட ஆணுக்கு அவள் உடல் வெளியையும் புழங்குவெளியையும் உடமையாகக் கொடுக்கிறாள். இந்த உடமைப்பொருள் இனி இன்னொருவனின் ஆயுள் காவலில் நீடிக்கும். இந்த ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொண்டு தொண்டூழியம் செய்வதற்கு ஏற்ப ஒரு பெண்ணைப் பழக்கவே இவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்கிறான் ஒரு தந்தை.

குடும்பம் என்பது என்ன? இனத்தொடர்ச்சி அறுபடாமல் தொடருவதற்கான ஒரு அமைப்பு தானே என்று மிக எளிமையாகத் தோன்றலாம். அது மட்டுமே அதன் கடமை இல்லை என்பதுதான் யதார்த்தம். தன் ரத்தம், தன் சாதி, தன் மதம், தன் இனம் என்பவற்றுக்குள் வேறு மற்றும் பிற என்பவை நுழையாமல் காவல் புரியும் ஒரு சுயநல அமைப்பு. இந்தியச் சமூகத்தில் தீண்டாமையை பயிற்றுவிக்கும் குருகுலமாக குடும்பதைப் பாதுகாப்பது சமூக ஆணின் கடமையாகிறது. இந்தப் பயிற்சியை அறிந்தும் அறியாமலும் பெற்றுக்கொண்ட பெண்களும் குழந்தைகளும் இதே வன்முறையை செலுத்துகிறவர்களாக செயல்படுவதுதான் இந்திய சமூகத்தின் அச்சமூட்டும் ஒரு அவலம்.

பாமாவின் “எளக்காரம்” மற்றும் “தீர்ப்பு” என்ற இரு கதைகளிலும் இந்த அவலம் அச்சமூட்டும் வகையில் நம் முகத்தில் வந்து மோதுகிறது. ஊர்ச்சாதிக் குழந்தைகளின் பிஞ்சு ரத்தத்தில் தீண்டாமை நஞ்சை குடும்பத்தினர் ஊட்டச்சத்துபோல் ஊட்டி வளர்க்கிறார்கள். அக்குழந்தைகள் பள்ளிகளில் தம்முடன் படிக்கும் தலித் குழந்தைகளின் மீது தீண்டாமை வன்கொடுமையை செலுத்துகிறார்கள். இதை ஆதிக்க சாதி ஆசிரியர்கள் கண்டிக்காததோடு அங்கீகரிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சமூக யதார்த்தத்தை ஒரு ஆவணம் போல் விளக்குகிறார். இந்தச் சமூக அவலத்துக்கும் கொடுமைக்கும் காரணமாக அமைவது குடும்பத்தினால் சமூக ஒழுங்கு என்ற பெயரில் கற்பிக்கப்பட்ட மனித நேயமற்ற மன அமைப்பு.

இது சமூக ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குவதுடன் நியாயப்படுத்தவும் செய்கிறது. இந்த அமைப்பில் எந்த மாற்றமும் நெகிழ்வும் நிகழவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறது குடும்பம். ஒரு குடும்பத்தின் கடமை தனது சாதிக்குள் அடங்கி நடக்கும் அடிமைகளை உருவாக்குவதும் தமக்குக் கீழ் உள்ளவர்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க குணமுடையவர்களை உருவாக்குவதுமென இரண்டு வகையில் நடக்கிறது. சாதிக் கலப்போ சாதி அடுக்குமுறையைக் கலைக்கும் நகர்வோ ஒரு பெண் மூலம் நிகழ முடியும் என்ற நிலையில் பெண்ணுடைய உடம்பும் மனமும் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு சாதித் தூய்மை பாதுகாக்கப்படுகிறது. இதை மீறும் சாத்தியம் ஏற்படாத வகையில் ஒரு பெண்ணின் மீது எல்லா விதமான வன்முறையையும் செலுத்தி அடக்கி ஒடுக்குவதன் மூலம் சமூகம் ஒரு பெண்ணொடுக்குதல் சமூகமாக உருவாகிறது. இதைச் செயல்படுத்தும் பிரதிநிதியாக தந்தை நியமிக்கப்படுவதும் அந்தப் பணிக்கு சன்மானமாக பல உரிமைகள் சலுகைகள் வழங்கப்படுவதும் நடந்துவருகிறது.

குடும்பத்தில் உள்ளவர்களின் அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாதவனாக இருந்தாலும், சமூக ஒழுங்குகளின் காவல்காரன் என்ற உரிமையை ஒரு ஆண் விட்டுக் கொடுப்பதில்லை. இந்த காவல் புரியும் ஒரே ஒரு அதிகாரமே கடைசிவரை ஆணுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கிவிடுகிறது. இந்த காவல் கண்காணிப்பு உரிமை சமூக, குடும்ப நிகழ்வுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் கூடுதல் சலுகையையும் கூடுதல் பங்கு அளவையும் ஆணுக்கு நிரந்தரமாகப் பெற்றுத்தந்து விடுகிறது. இந்த கூடுதல் பங்கு பெண்ணைவிட எல்லாவற்றிலும் ஆணுக்குக் கூடுதல் இன்பத்தையும் வலிமையையும் கொடுப்பதை நியாயப்படுத்துகிறது. தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள முடியாத அளவுக்கு பலமற்றவளாக பெண்ணை மாற்றிவிட்டு, பிற இனம் மற்றும் சமூகத்திடமிருந்து அவளைப் பாதுகாக்கும் பெரிய பணியை ஆணிடம் வழங்கியதன் மூலம் அரசு, அரசியல் அனைத்திலும் ஆணை மையமாக்கி விடுவதுடன் பேரதிகாரம் உடையவனாகவும் உருவாக்கிவிடுகிறது. அச்சம் என்ற ஒன்றால் பீடிக்கப்பட்ட பெண் எப்பொழுதும் தனது அடிமைத்தனத்தை பாதுகாப்பு என்று நம்பி இரட்டை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சமூக உளவியல் வரலாற்று அடிப்படையில் தொடர்ந்து வருகிறது.

எனவே ஒரு ஆணின் சமூக உரிமைகள் கடமைகள் என்பவை எந்த நிலையிலும் பெண்ணுக்குச் சமமாகவோ கீழாகவோ இருந்துவிட நேர்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கற்பு, தனிமனித ஒழுக்கம் போன்ற சமூக விதிகளை ஆண் மீறும்போது அது அவன் சுதந்திரத்தின் அடையாளமாகவும் ஆணின் சாகசமாகவும் பெருமைப்படுத்தபடுவதுண்டு. பெண்ணைவிட எல்லா விதத்திலும் மேலானவன் உயர்ந்தவன் என்ற மன அமைப்பில் ஒரு துணிச்சலை இச்சமூகம் வழங்குகிறது. சமத்துவம், சமநீதி என்பவை முதலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் அமையவேண்டியது என்பதைப் பற்றி பொதுவான சமூக அரசியல் இயக்கங்கள் அக்கறைக் கொள்வதில்லை. இதற்குத் தனியான கருத்தியலும் இயக்கமும் போராட்டமும் தேவைப்படுகிறது. சாதி, வர்க்கம், இனம் போன்றவற்றுக்கு இடையில் சமத்தும், சமநீதி என்பவை மையப்படுத்தப்படும் அளவுக்கு பாலின ஒடுக்குமுறை என்பது ஒரு மிகமுக்கியமான பிரச்சனையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. சமூகம் என்ற அமைப்பு மட்டுமின்றி சமூக மாற்றம் பற்றிய கோட்பாடுகளும் ஒரு கட்டம் வரை ஆணை மையமாகக்கொண்டே இருந்து வந்துள்ளது. பெண்ணியம், பெண் விடுதலை என்ற மிகத் தனித்த அரசியல் உருவாகும் வரை வரலாற்றின் மிகப்பெரிய புரட்சிகர கருத்தியல்கள்கூட பெண்ணின் இடம்பற்றி சரியான கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஒரு ஒடுக்கப்பட்ட பிரிவாக பெண் இன்றுவரை இருக்க நேர்ந்திருக்கிறது. இந்தியச் சூழலில் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்படும் நிலையில் தலித் பெண்கள் வைக்கப்பட்டுள்ளனர். தலித் பெண்கள் குடும்ப வன்முறைக்கும், சாதிய வன்முறைக்கும், போலீஸ் போன்ற அதிகார நிறுவனங்களின் வன்முறைக்கும் தொடர்ந்து ஆளாகவேண்டிய மிகக் கொடுமையான நிலையில் இருக்கின்றனர். பிற சாதிப் பெண்கள் மீதான சமூக வன்முறை என்பதும் பாலியல் வதைகளும் அவர்களின் சாதியின் அடிப்படையில் நடப்பதில்லை. ஆனால் தலித் பெண் என்பதாலேயே அவர்கள் மீதான சாதிய, பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தலித் பெண் என்ற ஒரே அடையாளம் பல சமயங்களில் அச்சமூகப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிடுகிறது. அதை விடவும் தலித் அல்லாத சமூகத்தினர் அந்த வன்முறையை மிக இயல்பான ஒன்றைப்போல புறக்கணித்து விடும் நிலையும் இங்கு இருக்கிறது.

கிராமியச் சூழலில் மிகச்சிறு வயதில் பாலியல் கொடுமைக்குள்ளாகும் பெரும்பான்மையான பெண்கள் தலித் பெண்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். இதைப் பற்றிய பிரக்ஞையும் எதிர்ப்புணர்வும் தலித் அரசியல் மூலமே முதன் முதலில் உருவானது. (வன்கொடுமை என்பது பாலியல் சார்ந்தது மட்டுமில்லை என்றாலும் இந்தியச் சமூகங்களில் இதுவே மிக உச்சகட்ட குறியீட்டு வன்முறையாக உணரபட வேண்டி யுள்ளது. சொற்கள், சைகைகள், வசைகள், நடத்தப்படும் முறைகள் என எத்தனை வகையான வன்முறைகள் இந்தியக்கிராமச் சூழலில் தலித் பெண்கள் மீது தினமும் செலுத்தப்படுகின்றன. என்று எண்ணிப் பார்க்கும்போது இந்திய அறம், அன்பு என்பதைப்பற்றிய கேவலமான பொய்கள் நமக்குப் புரியவருகிறது.)

தலித் அரசியல் உருவான அதே சூழலில் தலித் பெண்ணியமும் உருவாக வேண்டிய தேவை இதன்மூலம்தான் உணரப்படுகிறது. எந்த ஒரு பொதுவிடுதலையும் பெண் விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்று சொல்லிவருவது மிக மோசமான ஆணாதிக்க அரசியலின் அடையாளம். இப்படி இல்லாமல் தலித் அரசியலிலும் தலித் இலக்கியத்திலும் தலித் பெண்ணியம் என்ற ஒரு பிரக்ஞை உருவாகிவுள்ளது மிக ஆக்கப்பூர்வமானது. இந்திய அரசியலில் தலித் அரசியலின் உருவாக்கத்திற்கு எவ்வளவு முக்கியத்துவமும் தேவையும் உள்ளதோ அதே அளவுக்கு தலித் பெண்ணியத்திற்கும் தேவையும் முக்கியத் துவமும் உண்டு. ஒருவகையில் தலித் பெண்ணியம் என்பதே இந்திய மாற்று அரசியலின் மிகமிக அடிப்படையான முதல்கட்ட இயக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. இந்த தலித் பெண்ணியப் பார்வை எல்லா அரசியலுக்கும் வழிகாட்டு நெறியாகவும் வழி மாறும்போது கேள்வி கேட்கும் நெறியாகவும் இருக்ககூடியது. இதனை மறுக்கும் அல்லது வெறுக்கும் எந்த ஒரு சமூக அரசியல் கோட்பாட்டையும் புரட்சிகர கோட்பாடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தப் பார்வை தமிழ் தலித் பெண் எழுத்துக்களை வாசிக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எனக்குள் உறுதிப்படுகிறது. ஒவ்வொரு தலித் பெண் எழுத்தும் எனக்குப் புதியப் புதிய எதிர்ப்பு புரிதல்களை, மாற்று அழகியல் மற்றும் அரசியலை நினைவூட்டிக்ù காண்டே இருக்கிறது. வேறு எந்த எழுத்துக் களிலும் காணப்படாத அளவுக்கு இந்திய யதார்த்தம் என்பது வலிமையாகவும் ஆழமாக வும் இவர்களுடைய எழுத்துக்களில் இயல்பாகப் பதிவாகிவிடுகிறது. மிக எளிமை யான ஒரு வாக்கியம்கூட எனக்கு மிக நீண்ட வரலாற்றுக் கொடுமைகளை நினைவூட்டி எதிர் அரசியல் பற்றிய கேள்விகளை எழுப்பிவிடுகிறது. அழகியல், கலை இலக்கியம், அறம், ஒழுக்கம் என்பவை பற்றிய மிக அடிப்படையான சிக்கல்களை இவை வெளிப்படுத்திவிடுகின்றன.

பாமாவின் ஒரு சிறுகதையை இங்கு வாசிப்போம், கதையின் தலைப்பு “எளக்காரம்”

“பள்ளிக்கொடத்த பூரா கூட்டிப் பெறுக்கி அள்ளுறது நம்ம பிள்ளைகதானாம். அந்த பிள்ளைக வந்து அலுங்காமெ குலுங்காமெ படுச்சுட்டுப் போவாகளாம்.” என்கிறாள் சின்னபொண்ணுவுடன் படிக்கும் பெண்ணின் தாய். அவளே தொடர்ந்து சொல்கிறாள்.

“எங்க வீட்டுக்காரம் போயி கேட்டதுக்கு, நம்ம பிள்ளைகதாஞ் சுத்தமா நல்லாக் கூட்டுதுகளாம். அந்தப் பிள்ளைகளுக்குச் சரியாக் கூட்டத் தெரியலைன்னு பசப்பி உட்டுடாக.”

“இது நல்ல வேலதாண்டி. அப்ப நம்ம பிள்ளைக நல்லா கூட்டிக்கிட்டே இருக்கட்டும்; இந்தா நம்ம வயக்காட்டுகள்ள ரணபாடுபட்டு வேல செய்ய அவுக ஒக்காந்து சொகமா திங்கறாகள்ள, அது கணக்காதான்.” என்கிறாள் சின்னப்பொண்ணுவின் அம்மா பரிபூரணம். இந்த எளிமையான ஒரு உரையாடல் இந்தியச் சமூகத்தின் மிகப் பழமையான கருத்தியல் வன்முறையை நம் முகத்தில் வந்து அறையும்படி உணர்த்தி விடுகிறது.

இந்த ஆண்டு உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக்கூடாது என்று போராடிய மேல்சாதி வெறியர்கள். உங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு நாங்கள் என்ன தெருக்கூட்ட போக வேண்டுமா என தெருப் பெறுக்கும் போராட்டம் நடத்தினார்கள். உயர்கல்வி கற்று நாங்கள்தான் உயர்பதவிக்குப் போக வேண்டும். நீங்கள்தான் தெருக் கூட்ட வேண்டும் என்று தங்களின் சாதிவெறியை வெளிப்படையாகக் காட்டினார்கள். இது இன்றைய சமூக எதார்த்தம். இந்தச் சாதிவெறியை பள்ளிக்கூடங்கள் கற்றுத் தருவதைத்தான் பாமாவின் “எளக்காரம்” கதை பேசுகிறது. மிக எளிமையான இந்தக் கதை மிக சிக்கலான வலிகளை நமக்கு ஞாபகப் படுத்துகிறது.

பாமாவின் மற்றொரு கதையான “பொன்னுத்தாயி” இந்தியக் குடும்பம் பற்றிய மயக்கங்களையும் மாயைகளையும் உடைக் கிறது. பொன்னுத்தாயி என்ற பெண் தன் குடிகாரக் கணவனுடன் வாழப்பிடிக்காமல் தனது நான்குக் குழந்தைகளையும் அவனிடத் திலேயே விட்டுவிட்டு தாய்வீட்டுக்கு வந்துவிடுகிறாள். தன்னுடன் வந்துவிடும்படி கணவன் தகராறு செய்கிறான். அப்போது ஏற்பட்ட சண்டையில் அவளது மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. அத்துடன் காவல் நிலையம் சென்று முறையிட்டு தன் கணவனுக்குத் தண்டனை வாங்கித் தருகிறாள். ஊர் அவளை இதற்காக இழிவாகப் பேசுகிறது. குழந்தைகளை விட்டுவந்த அவளை பாசமற்றவள் என்று குற்றம்சாட்டுகிறது. என்றாலும் தனது கணவனை பிரிந்து தனித்து வாழ முடிவு செய்துவிட்ட அவள் தன் தாலியை அறுத்து எறிந்துவிடுகிறாள். அதைவிற்றே தனக்கென்று ஒரு சிறு பழ வியாபாரத்தைத் தொடங்குகிறாள். இக்கதையில் தாய்மை, தாலி, குடும்ப வன்முறையை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற விதி என்பவை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவள் சிந்தும் ரத்தமும் அவள் எடுக்கும் முடிவும் மறுக்க முடியாத உண்மைகளாக உறைந்துவிடுகின்றன. இப்படி ஒரு கதை நிகழ்வை தலித் பெண்ணியப் பார்வையில் மட்டும்தான் எழுதவும் புரிந்துகொள்ளவும் முடியும்.

“ஒத்த” என்ற பாமாவின் மற்றொரு கதை இல்லாமல்லி என்ற பெண்ணைப் பற்றியது. சிறுமியாக இருக்கும் போது பன்றிக்கடித்து அவளது வலது மார்பு ஊனமாகிவிடுகிறது. வளர்ந்த பிறகு ஒற்றை மார்பகத்தோடு இருக்கும் அவளை ஊரார் “ஒத்த” என்று கேலியாகக் கூப்பிடுகிறார்கள். அவளுக்கு அதனால் திருமணமும் நடக்கவில்லை. அவளின் முப்பது வயதில் வயற்காட்டில் புல்லறுத்துக்கொண்டிருக்கும்போது ஒரு மேல்சாதிக்காரன் கேவலப்படுத்தி பேசு வதுடன் அவள் ஒற்றை மார்பைத் தொட முயற்சிக்கிறான். அப்பெண் அறிவாளால் அவனைத் தாக்க அவனது ஒருகண் குருடாகிவிடுகிறது. “இப்பிடிச் செஞ்சாத்தான் பெயல்களுக்குப் புத்தி வரும்”. என்று ஒரு பாட்டி சொல்கிறார். இச்செய்தி ஊர்முழுக்க பரவியபின் அப்பெண்ணை யாரும் ஒத்தை என்று கேலி செய்வதில்லை.

ஒரு தலித் பெண்மீது பாலியல் வன்முறை செலுத்துவதை தினசரி செயல்போல் மிகச்சாதாரணமாக ஒரு மேல்சாதி ஆண் நடந்துகொள்வதை நேரடியான எளிய மொழி நடையில் இக்கதை விளக்குகிறது. அதற்காக கிராமத்தில் பெரிய எதிர்ப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்ற குறிப்பும் தரப்படுகிறது. இந்த தனிப்பட்ட எதிர்த்தாக்குதல் மட்டுமே ஒரு எதிர்ப்பாக இருக்கிறது. கண் தாக்கப்படுதல் ஒரு சிறிய எதிர் வன்முறை அடையாளமாக வைக்கப் படுகிறது. இவை மேலோட்டமாக ஒரு சம்பவத்தைச் சொல்வதுபோல் தலித் சமூகத்தின் மொத்த வலியையும் கூறிவிடுகிறது. இந்த எளிமை சார்ந்த உரையாடல் வழியாக மிகப்பெரிய வரலாற்று வன்முறைகளை நினைவூட்டுவதுதான் தலித் எழுத்துக்களின் தனிப்பட்ட வலிமையாகக் கொள்ள முடிகிறது. அதிலும் தலித் பெண்படைப்புகள் இரட்டை வன்முறையின் பல்வேறு அடுக்கு களையும் மிகத் தீவிரமாகப் பேசுகின்றன.

பாமாவின் “கருக்கு” “சங்கதி” “வன்மம்” என்ற மூன்று நாவல்களும் தலித் சமூகத்தின் வாழ்வியல், சமூகவியல் அவலங்களை விரிவாகப் பதிவு செய்கின்றன. கதை சொல்லும் மொழி தலித் வட்டார வழக்கில் அமைந்து ஒரு பொது மொழிநடைக்கு எதிர் கதைக்கூறலை உருவாக்குகிறது. கருக்கு, சங்கதி இரண்டு நாவல்களும் =தன்வாழ்க்கை+ கதைகளாக அமைந்து ஒரே சமயத்தில் தலித் மற்றும் பெண் என்ற இரு அடையாளங்களின் சிக்கல்களை நேரடியாகவும் ஒரு கால கட்டத்தின் பின்னணியிலும் பேசுகின்றன. அதே சமயத்தில் தலித் பெண்ணியப் பார்வை கொண்ட படைப்பாளரின் எண்ணங்களை யும் பதிவு செய்கின்றன. தலித் சமூகத்தின் வாழ்க்கைமுறை, கிராமத்தின் சாதிய அமைப்புமுறை, அவற்றுக் கிடையிலான முரண்பட்ட வன்முறை நிறைந்த உறவுகள் அதற்குள் நிகழும் தனிமனித வாழ்வு என்பவை ஒரு பெண்ணின் நினைவு வழியாகக் சொல்லப்படுகின்றன.

இந்நாவல்களின் சொல்லும் முறை தமிழ் நாவல்களின் பழகிய வடிவத்திலிருந்து முற்றிலும் மாறி நேரடித்தன்மையும் கடுமை நிறைந்த பேச்சும் கொண்டவையாக உள்ளன. நாசுக்கான உரையாடல்கள் என்ற தமிழின் கதைச் சொல்லும் மரபு அரசியல் நோக்கத்தோடு மீறப்பட்டுள்ளது. இந்த மீறல் தலித் வாழ்வின் இருப்பையும் இயக்கத்தையும் தீவிரமாக அரசியல்படுத்தும் உத்தியாகச் செயல் படுகிறது. இந்த நாவல்களின் வாசிப்பின் ஊடாக எத்தனையோ கேள்விகளும் தலித் வாழ்வின் வரலாற்றுப் பதிவுகளும் அடுக்கடுக் காக வெளிப்படுகின்றன. தீண்டாமை கொடுமையிலிருந்துத் தப்பிக்க எண்ணி மதம்மாறிய தலித்துகள் அங்கும் தலித் கிருத்துவர்கள் என்ற பெயருடன் அதே அளவு கொடுமையை அனுபவிக்கும் சமூக அவலம் இவர் நாவல்களின் பின்னணியாக அமைந்துள்ளது.

தலித் சமூகத்தின் தினசரி வாழ்க்கைக்கான போராட்டங்கள் ஒருபுறம், தங்கள் உயிரை பாதுக்காத்துக்கொள்ள வேண்டிய போராட்டம் ஒருபுறம், தங்களுக்கான அடையாளத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய போராட்டம் ஒருபுறமென பலகட்ட போராட்டங்களுக்கு இடையே ஒரு பெண்ணாக இருத்தல் என்பதின் பயங்கரத்தை கருக்கு, சங்கதி என்ற இரண்டு நாவல்களும் ஒரு அடங்கிய தொனியில் அதே சமயம் மிகத் தீவிரமாகப் பதிவு செய்கின்றன. தலித் வாழ்க்கையில் திணிக்கப்பட்ட வறுமை மற்றும் பயம் என்ற வலிகளுக்கிடையேயும் மனித உறவுகளின் மென்மை, எளிய மனங்களின் சிறு சிறு சந்தோஷங்கள், கனவுகள் அனைத்தும் கூட மனதை பற்றும் வகையில் பதிவாகியுள்ளன. மற்ற கதை கூறல்களைப் போல இல்லாமல் இவை ஒவ்வொன்றுக்கும் கூடுதல் அரசியல் அர்த்தமும் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. ஒடுக்குதலை பதிவு செய்யும் அதே வேளையில் அதிலிருந்து விடபடவேண்டும் என்ற ஏக்கமும் கனவும் தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது. தலித் பெண்ணியப் பிரக்ஞைதான் இந்த நினைவூட்டும் மொழிக்கு அடிப்படையாக உள்ளது.

“எங்க ஊரு ரொம்ப அழகான ஊரு.” என்று தொடங்கும் =கருக்கு+ நாவல் “நாய்க்கமார்க கிட்டதா நெலமே இருக்குது. ஒவ்வொரு நாய்க்கமாரு காடுகளும் பல மைல்களுக்கு பரவிக்கெடக்கும்.” எனக்கூறி காடு, மலை, கழனி, கம்மாய், குளம் என்று பரந்து கிடக்கும் வெளியில் வெறும் கூலிகளாக மட்டும் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்களைப் பற்றி பேசுகிறது. இவர்களுக்கான புழங்கும் வெளி, பொது வெளி இரண்டையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. தலித்துகளின் மீது நடத்துப்படும் தாக்குதல்களும் சுரண்டல்களும் இல்லாத ஒரு இடத்தை, உலகை கதைசொல்லி வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் தீண்டாமை காற்றுபோல் எல்லா வெளியிலும் இயல்பாகப் புழங்கிக் கொண்டிருக்கிறது. சமூகத்தின் சகல அமைப்புகளும் சாதியின் பெயரால் நடத்தும் அவமரியாதையும் கொடுமைகளையும் வன்முறைகளையும் கண்டு முடங்கிவிடாமல் திமிறி எழுகிறார். விடுதலையைத் தேடி கன்னியாஸ்திரியாக மாறுகிறார்; பிறகு தனது அடையாளத்தை மீட்டுடெடுக்க கன்னியாஸ்திரி மடத்திலிருந்தும் வெளியேறுகிறார். இம்முடிவு இவரின் சுதந்திர பிரகடனமாகப் பதிவாகிறது.

“சங்கதி” நாவலோ ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட இனமான பெண்களைப் பற்றியது. இந்நாவலும் கதைசொல்லியை முன்வைத்து பாலின ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறது. தலித் பெண் என்ற அடையாளத்தை நேரடியாக முன் வைத்துக் கூறப்படும் இவ்வாழ்க்கைக்கதை பல்வேறுவிதமான பெண்களையும் அவர் களின் வாழ்க்கைப்பாடு களையும் அவர்களுக் குள்ளாகவே ஏற்படும் தவறான புரிதல் களையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. தலித் சமூகத்துக்குள்ளேயே பெண்கள் விடுதலை நோக்கி நகர்வதை கசப்புடன் எதிர்கொள்ளும் நிலை பற்றியும் துயரத்துடன் கூறுகிறது. பெண்கள் கல்வி பெறுவதையோ சிந்திப் பதையோ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் அறியாமை பற்றியும் முறையிடுகிறது. சாதிக் கலப்பு ஏற்படுவதன் தேவை சில இடங்களில் சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் கதையின் இலக்கு தனித்த அடையாளமுடைய சிந்திக்கும் பெண்ணைப் பற்றியதாக அமைந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட இரு சாதிகளுக்குள் நேரும் வன்முறையை துயரத்தோடு பதிவு செய்யும் நாவல் =வன்மம்+. ஒரே வகையான ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இரண்டு தலித்சாதிகள் அரசியல், சமூக விழிப்புணர்வு இன்றி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளவதும் அதற்குப் பின்னணியில் ஆதிக்கசாதியினரின் திட்டமிட்ட தூண்டுதல் இருப்பதும் பதிவு செய்யப்படுகிறது. சாதி மோதல் வன்முறையின் போது அதிகமாக பாதிக்கப்படுகிறர்வர்களாக பெண்கள் இருப்பது தெளிவாக விவரிக்கப்படுகிறது. காவல்துறை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் பெண்களை வீடு புகுந்து தாக்குவதும் இழிவு படுத்துவதும் ஒரு தேசிய நடைமுறையாக மாறிவிட்ட கொடுமை ஒரு உதாரண ஆவணமாக பதிவு செய்யப் பட்டுள்ளது. இரு தலித் சாதிகளுக்கிடையில் நேரும் மோதலில் பலர் இறந்துவிட, சடலங்களை பெற்றுக்கொள்ளச் செல்லும் பெண்களை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்கிறார்கள். இந்த ஒரே சித்தரிப்பே தலித் பெண்கள் விலங்குகளுக்கும் கீழான ஒரு நிலையில் நடத்தப்படுவதை அதன் கொடூரத்தோடு விவரித்துவிடுகிறது. தலித் பெண்களைப் பற்றி பாமாவின் நாவல்கள் விவரிக்கும் முறை அவர்களின் சில தனிப்பட்ட வலிமையான பண்புகளை சொல்லிச் செல்கிறது. உழைப்பு என்பதோடு சமூகச் செயல்பாட்டுப் போராட்டங்களில் அதிகமாக பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பதும் தாக்குதல் போன்றவற்றைக்கூட நேரடியாக எதிர்கொள்கிறார்கள் என்பதும் இவருடைய எழுத்துகளில் பதிவாகிறது. எந்தவொன்றைப் பற்றியுமான பெண் களுடைய கருத்து இவர் எழுத்துக்களில் முதன்மை பெறுகிறது.

“பழயன கழிதலும், ஆனந்தாயி” என்ற இரு நாவல்கள் மூலம் தலித் பெண்பார்வை பற்றிய விரிவான விவாதத்தைத் தொடங்கிவைத்த சிவகாமி, தமிழில் எழுதிவரும் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர். தலித் அரசியலிலும் தலித் பெண்ணியத்திலும் தொடர்ந்து பங்களித்து வருபவர். இயக்க நடவடிக்கைகளில் நேரடியாக செயல் படுகிறவர். இவருடைய எழுத்துக்களில் தலித் சமூகத்திற்குள் பெண்கள் நடத்தப்படும் முறைபற்றிய கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பழையன கழிதல் நாவலில் தலித் அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு ஆணின் கீழ் அவனது குடும்பத்துப் பெண்கள் படும் கொடுமையை ஈவு இரக்கமின்றி சித்தரித்துள்ளார். பெண்ணின் பார்வையிலிருந்து அடக்கமுடியாத கோபத்துடன் இந்தக் கடுமை பீறிட்டு வெளிப்படுவதை காண முடிகிறது. சாதி என்பதைக் கடந்த ஆண்மையின் அதிகாரக் கடுமை பழியன கழிதல் நாவலில் மிக விரிவாகப் பேசப்படுகிறது. காத்தமுத்து என்ற அரசியலில் ஈடுபடும் ஊர் பெரிய மனிதர் ஆதிக்க சாதியினரின் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் அதே வேளையில் தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் துரோகம் செய்தல், பழிவாங்குதல், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றைச் செய்கிறார்.

இதனை ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து கதைசொல்லி அதிக கோபத்தோடு விவரித்துச் செல்கிறார். இதன் மூலம் தலித் அரசியலுக்கு இருக்க வேண்டிய பெண்ணியப் புரிதலை வலியுறுத்தவே செய்கிறார். முதல் பார்வையில் ஒரு தலித் அரசியல்வாதியை கொடூரமான வனாக சித்தரிப்பது போன்ற தோற்றத்தை இந்நாவல் தந்தாலும் அடிப்படையான மாற்றத்தையும் கருத்தியல் தெளிவையும் இந்நாவல் முதல் தேவையாக வலியுறுத்துகிறது. இது பெண் என்ற பார்வையின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கிறது.

சிவகாமியின் “ஆனந்தாயி” நாவலோ தலித் பெண்களின் துயரம், கொடுமை அனைத்தை யும் அச்சமூட்டும் வகையில் விவரிக்கும் ஒரு எழுத்து. நிலையான நீடித்த ஒரு துயரம், ஆறுதலே இல்லாத ஒரு தொடர்வலி என இந்த நாவல் மனதை பிழியும் வகையில் நீண்டு செல்கிறது. இந்தத் துயரம் தலித் சமூகத்தின் நீண்ட வரலாற்றுத் துயரக் குறியீடாகவும் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுகிறது.

ஆனந்தாயியின் கணவன் பெரியண்ணன் கேள்விமுறையற்று வீட்டுக்கே பிறப் பெண்களை அழைத்துவந்து அவர்களுடன் உடலுறவு கொள்கிறான். இதனால் எழும் சச்சரவுகளில் ஆனந்தாயி தினம் தினம் அவனிடம் அடிப்பட்டு செத்துச் செத்துப் பிழைக்கிறாள். லெட்சுமி என்ற பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்திவரும் இவன், காலப்போக்கில் அவள் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவளை தனக்கே உடமையாக்க வேண்டி வீட்டுக்கே அழைத்துவந்து வைத்துக்கொள்கிறான். இதனால் எழும் குடும்ப சண்டைகள் அடிதடிகள் என தொடரும் வாழ்க்கையிலிருந்து லெட்சுமி தப்பிக்க நினைக்கிறாள். இந்த நரகத்திலிருந்து விடுபட்டால் போதுமென்று பழக்கமாகும் ஆண்களுடன் சில முறைகள் ஓடிப் போகிறாள். அவள் எங்கு சென்றாலும் பெரியண்ணன் அவளைத் தேடி இழுத்துவந்து கொடூரமாக அடிக்கிறான்.

ஒவ்வொரு முறையும் அவளைத் தேடி கண்டுப்பிடிக்கவே தனது சொத்தையெல்லாம் விற்றுத் தீர்க்கிறான். அவள் ஓடிப்போகும் ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. ஆனந்தாயி இவனை திருமணம் செய்துகொண்ட நிர்பந்தத்துக்காக இவனிடம் வதைபடுகிறாள் என்றால் லெட்சுமி அவனிடம் அடைக்கலம் வந்த பாவத்துக்காக இவனிடம் கொடுமைப் படுகிறாள். ஆனந்தாயியின் மகள் கலாவுக்கு தாயைப் போலவே ஒரு வாழ்க்கை அமைந்து விடுகிறது. அவர்கள் இருவருமே தங்கள் கணவன்மாரிடம் எந்நேரமும் உதைபட்டு சாகும் நிலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இவர்கள் பேச்சற்ற பெண்கள். தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் தப்பித்து சென்று இந்த உலகின் எந்த மூலையிலும் ஒளிந்து கொள்ள சக்தியற்றவர்கள். ஒரு ஆண் தான் ஒரு ஆண் என்ற காரணத்தைக்கொண்டே பெண்களின் மீது எல்லாவித வன்முறை யையும் செலுத்தும் உரிமை எடுத்துக் கொள்ளவதை இந்த நாவல் மிகக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறது.

இந்த வன்முறை சாதிப் பிரிவுகள் தாண்டி நிகழ்வதும் நியாயப்படுத்தப்படுவதும் இவ்வளவு கடுமையாகப் பதிவாவதற்கு சிவகாமியின் பெண்ணியப் பார்வையே காரணமாக இருப்பதை அவரது எழுத்துக்கள் ஒவ்வொன்றிலும் உணர முடிகிறது. இந்த பெண்ணியப் பார்வை ஏற்கனவே நினைவில் இல்லாதவற்றை நினைவுக்குக் கொண்டுவரும் புதிய கதைகூறலை சாத்தியமாக்குகிறது.

இந்த நினைவு ஏற்கனவே இருந்த இலக்கிய வரலாற்று மறதிகளை உடைத்து ஒவ்வொரு பேச்சையும் அரசியலாக்கும் செயலைச் செய்கிறது. இவரின் இரண்டு நாவல்களுமே தந்தை என்ற ஆண் பாத்திரத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது. தலித் அல்லாத சாதிகளின் அதிகாரத் தந்தையையும் தலித் சமூகத்துக்குள் உள்ள அதிகாரத் தந்தையையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் கொடூரத்தை இவருடையப் பெண்கள் அனுபவிக்கிறார்கள். சாதிகளை நிலைநிறுத்தும் தந்தை அதிகாரம், சாதிக்குள் பெண்ணின் இடத்தை வரையறுக்கும் தந்தை அதிகாரம் இரண்டையும் எதிர்கொள்வதற்கான அரசியல் தலித் பெண்ணிய அரசியலின் பேச்சாக தலித் பெண் எழுத்துக்கள் இருக்கின்றன.

தற்போது பெண்விடுதலை, பெண்ணியம் என்ற குரல் எழும்போது அதை முடக்க எல்லா பக்கங்களிலிருந்தும் மிரட்டல்கள் விடப்படுகின்றன. பெண் விடுதலையின் அடிப்படையுடன் தலித் பெண்ணியம் சேரும்போது உண்மையான ஆண் அதிகாரம், தந்தையதிகாரம் என்பவற்றின் பிரதிநிதிகள் யார் என்பது எதிர்நிலையில் அடையாளப் படுத்தப்பட்டுவிடும். இந்த அடையாளப் படுத்தலின் அரசியலும் மறதிக்கு எதிரான அரசியலும் ஒரு வன்முறையுடன் தான் எழுத்தில் தொடங்கவேண்டியிருக்கிறது.

இந்த அரசியலின் தொடர்ச்சியை கோட்பாட்டு வகை எழுத்தில் அரங்க மல்லிகாவிடமும் கவிதை எழுத்தில் சுகிர்தராணியிடமும் காண முடிகிறது. வெளிப்படையான பேச்சு. மௌனத்தைக் கலைக்கும் தொந்தரவுகள். மறதியை உடைக்கும் நினைவுகள் என அமைதியை குலைக்கும் எழுத்துக்கள் இனி நிறைய தலித் பெண் படைபாளர்களிடமிருந்து உருவாக இருக்கிறது. அதற்கான அழுத்தமும் வலியும் தற்போதுதான் உணரப்பட்டு வருகிறது. சுகிர்தராணியின் இக்கவிதை இம்மாற்றத்தை முன்மொழிவதாக இருக்கிறது.

மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்
தசைகளை முற்றாகப்
பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்
என் வீடும்
கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி
பறையொலி பழகும்
விடலைகள் நிறைந்த
என் தெருவும்
ஊரின் கடைசியில் இருப்பதாக
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்
நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
முதலில் இருப்பதாக.

(நன்றி:அணங்கு)

May 17, 2007

துவிதம் - ஆழியாள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 3:40 pm

வலியும் வலியறிதலும் விரிந்தவெளி

-யாழ்மதி

துவிதம் - ஆழியாள், வெளியீடு: மரு Mathubashini - 20 Dulverton Street, Amaroo, Canberra ACT 2914, Australia.

காலைகளால் இவ்வுலகம் நிரம்பி வழியும் காலமிது. உடல்சிதறி, குருதி பீறிட்டுப்பாய மரண ஓலங்களும் இழப்புகளும் பொங்கிப் பெருக் கெடுக்க வெடிச்சத்தங்கள் அதிகாரத்தின் கொக்கலிப்பாய் நீளும் காலமிது. அடர்ப்பச்சை வனங்களும் அதன் பெருவெளியெங்கும் மேவித்திரியும் உயிரினங்களும் அதனூடாகக் கலந்து கரைந்துபோன பூர்வகுடிகளின் வாழ்வும் மொழியும் கொன்று அவைகளின் புதைமேட்டில் கேளிக்கை நடனமிடும் காலமிது. நமது வித்தும் வேரும், திசையெட்டும் தழைத்த சீர்மையும், மரபும் வெடிவைத்துத் தகர்க்கப்படும் காலமிது. ஞாபக அடுக்குகளில் எஞ்சியிருக்கிற நிலப் பரப்பின் நினைவுகளும் திட்டமிட்டு பிடுங்கி எறியப்படுகிற உணர்வுக் கொலைகளின் காலமிது.

சட்டென கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சி நம் நினைவில் வருகிறது. குருதியாற்றில் உடல்கள் மிதந்து செல்கின்றன. நரிகளின் ஊளையிடல், கழுகுகளின் மலர்ந்த முகம், பேய்களின் குதூகலம் யாவும் காட்சிகளாய் எதிரே நிகழ் கின்றன. “மூளைகளால் கூந்தல் கிளப்பித் தேய்த்து குருதித் தடாகத்தில் கூட்டமாகப் பாய்ந்து மூழ்கி நீந்தி விளையாடுங்கள்’ என்று காளி பேய்களிடம் கூறுகிறாள் (கலிங்.508). உலகின் காளியாக தன்னை முன்னிறுத்திக்கொள்கிற அமெரிக்கா முதலிய ஆதிக்க நாடுகளும் தம் கைக்கூலிப் பேய்களை நோக்கி இன்றும் அப்படித்தான் கூறுகின்றன. அந்தப் பேய்கள் இயற்கையையும் கிராமியத்தையும் விளிம்பையும் பெண்ணையும் கொன்று அதன் சிதிலங்களைப் பந்தாகத் தூக்கி வீசி விளையாடுகின்றன. இவ்வாறான கொலை களின் காலத்தில் நம் மனத்தில் துயரமும், இழப்பும், அழுகையும், இயலாமையும், ஏக்கமும் ஒருசேரத் தெறிப்பதைக் காணமுடிகிறது.

உறவுகள், நட்பு, மண்வாசனை, மரங்கள், கடலின் கரிப்புச்சுவை, மீன்களின் மொழிகள் போன்றவற்றை இழந்த இழப்பு; பல்வேறு நாடுகளுக்குச் சிதறிச் செல்ல நேர்ந்த புலம்பெயர் வாழ்வின் சொல்லொனாத் துயரம்; தன் பூர்வீகத்தை, மொழியை, இயற்கையை தனது நாட்டிலேயே இழந்துத் தவிக்கும் அவுஸ்திரேலியப் பழங்குடி மனத்தின் தவிப்பு போன்றவை குருதிக்கறை படிந்த வலியோடு தோற்றம் கொள்கிற ஆழியாளின் கவிதைகள் இயற்கை சார்ந்த பிரபஞ்சம் தழுவிய தனது பரவசத்தின் குதூகலத்தோடும், பெண் முதன் மையின் கொண்டாட்டத்தோடும் உயிர்த் தெழுகின்றன.

ஈழத்தில் தொடர்ந்து நிகழ்கிற போர்ச் சூழலின் பெருங்கொடூரத்தைப் பலகவிதைகள் பேசு கின்றன. போரில் சிதறுண்டு இறந்தவர்களுட னான தன் நினைவுகளை ஒரு பாலம் “சின்னப்பாலம்’ எனும் கவிதையில் பகிர்ந்து கொள்கிறது. “பிணங்கள் பாலத்தினருகே விளைந்து கிடக்கின்றன. தன்னூடாகக் கடந்து போனவர் களை அது நினைவில் பதிந்துகொள்கிறபோதும்,

ஊறி வெடிப்புற்றுச் சிதிலமாய்த் தொங்கும் தசைகளை
ஒட்டவைத்து
அடையாளம் காண்பதற்குள்
தலை கிறுகிறுத்துப் போய்விடும்.

என்று கவிதை அமைகிறது. பாலம் இத்துயரின் கிறுகிறுப்பில் “என்னை மட்டும் தனிக்கவிட்டு / இந்த மனிதர் எங்கு போயினர் / எங்கு போயினர்” என்று தன் மக்களைத் தேடி பெருங்குர லெடுத்து அழுகையில் வாசக மனத்துள் உதிரம் கொட்டுவதைத் தவிர்க்க இயலாது. இவை போலவே இனவாதி, ஞாபக அடுக்குகள், பேச்சுவார்த்தை போன்ற கவிதைகள் அமைந் துள்ளன.

போர்ச்சூழலின் காரணமாக புலம்பெயர் வாழ்வு மேற்கொண்டு பதினைந்து ஆண்டு களுக்குப் பிறகு விமான நிலையத்தில் சந்திக்கும் இளவயது பழங்காதலரின் நினைவுகளை “விமான நிலையச் சந்திப்பு’ கவிதை தருகிறது. புலம்பெயர் வாழ்வில் அடையாளம் என்பது எப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்பதைச் சுட்டுகிற “அடையாளம்’ கவிதை

ஆதிக்குடிகளிடம் / திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில் / அப்பாடா!
பழையபடி நான் கறுப்பியானேன்.

என்று முடிகிறபோது தன்னை ஒரு அவுஸ்திரேலிய ஆதிக்குடியாக உணர்கிற தாய்மையும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான கலகமும் ஒருசேர வெளிப்படுவதைக் காண முடிகிறது.
அடுத்த முக்கிய அம்சமாக அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் வாழ்கிற வாழ்வனுபவம், வெள்ளை அதிகாரத்தால் அவுஸ்திரேலிய மண்ணின் பழமை அழிக்கப்பட்ட துயர நிலையை அங்குள்ள பூர்வ குடிகளின் மனத்தவிப்பில் இருந்து வெளிப்படுத்துதல் போன்றவை.

அவுஸ்திரேலியப் பருவகாலமொன்றில் இலையுதிர்க்கும் நெடுமரக்காடுகள் பேசுகின்றன. கடைசி இரு நூற்றாண்டுகளின் மேல்

அரிதாரம் நீலம் பூசி
நட்சத்திரங்கள் ஓர் அறை
அள்ளி அதில் தெளித்து
உச்சிக்கம்பத்தில் பறக்கவிட்ட
வெள்ளை விளைநிலம் இது.

என்றும் சரித்திரகாலத் தொல்நினைவுகளை பசுபிக்கடலில் புதைக்கும் தேசமாகவும் மாறிப் போன துயரை “அவுஸ்திரேலியப் பருவகாலம் ஒன்று’ என்ற கவிதை பேசுகிறது. அவுஸ்திரேலிய நிலப்பரப்பை பூமிக்குஞ்சாகவும் அதை வானமான கழுகு தனது அக்குஞ்சைத் தவறவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. விரைந்து செல்கிற நெடிய நிழலிடம் தன் குஞ்சின் மொழியில் கேட்க, அதுவோ

சொந்தமொழி
ரத்தத்தின் சிவப்பில் தெறிக்கும்போது
வந்தமொழி பேசிச் செரித்து
தானோர் அந்நிய நிழலான
கதை பகிரத் தொடங்கிற்று.

என்று “வேற்றுவெளி’ என்ற கவிதை முடிகிறபோது அவுஸ்திரேலிய பழங்குடிகள் தம் மரபு மொழி, இயற்கையாவற்றையும் இழந்து தவிப்பில், கோபத்தில் இருக்கிற சூழலையும், வந்த மொழியாகிய ஆங்கிலம் பேசி அந்நியராகிப் போன துயரையும் பதிவு செய்கிறது. அத்துடன் பூர்வீக வாழ்வின் குருதிச் சிவப்பையும் புலம்பெயர் வாழ்வின் அந்நியச் சூழலையும் பதிகிற இன்னொரு பரிமாணத்தையும் கொண் டுள்ளது. பழங்குடிகளுக்குச் சொந்தமான இயற்கையைப் பறித்த குற்றவுணர்ச்சி அபோக்களாகிய அவுஸ்திரேலியப் பழங்குடிகளைக் காணதவரையில் தோன்றாது என்பதாக “குற்றவுணர்ச்சி’ எனும் கவிதை அமைகிறது.

2003இல் நிகழ்ந்த ஈராக் போரின் போது ஏற்பட்ட இழப்புகளின் குவிமையமாக “கி.பி.2003 இல் தைகிரீஸ்’ எனும் கவிதை அமைந்துள்ளது. எண்ணெய்க் கிணறுகள் பற்றியெறிகிற காட்சியை “உலகத்துக் கடவுளரெல்லாம்’ ஒருசேர வந்தாற் போல, சோதிப் பெரும் பிரகாசமாய் இருந்தன. செவிப்பறைகள் அதிர்ந்து நோகும்படியாக அசரீரியாய் குண்டுகளின் வெடியோசையும் நிரம்பி வழிகிறது. உயர்ந்த தனது மெசப்பத் தோமிய நாகரீகத்தை உடைய தைகிரீஸ் நதி தனது கைகளை உயர்த்திப் பிடித்திருக்கிறது.

சுருங்கிய வெறுங்கைகளே
வெம்பி அல்லாடிச் சொல்லப்
போதுமானதாய் இருந்தன
வேண்டாம் போர் என்று

இப்படி அமெரிக்காவின் கொடுங்கோன்மை யின் பேரிழப்பில் தைகிரீஸ் நதியின் துயரக்காட்சி தாய்மையின் அழுகையாய் அமைந்துள்ளது.

இப்படி எங்கும் மரணங்களும் துயரமும் நிகழ்ந்து கொண்டிருக்க, மரணம்தான் துயரங் களில் இருந்து விடுபடும் வழி என்பதுபோல உலகியல்சார் எல்லாவிதமான வரையறை களையும் உடைத்துக்கொண்டு “மரணம்’ என்ற கவிதை அமைந்துள்ளது.

“தமிழ்மொழி வாழ்த்து என்ற கவிதை மிக நிதர்சனமாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் மொழியை வெறும் உன்னதம் பேசி சமூகம், மொழிகுறித்த அக்கறையற்றுப் பாடுகிற பழம் போக்கிலிருந்து வேறுபடுகிறது. தமிழ் மகள் தனது மொழியின், தேசத்தின், மக்களின் துயரங்களை, இழப்புகளைக் கண்டு வேதனையில் பாடுகிறாள்.

வார்த்தைகளைக் கடந்த / அவ் இசை
ஞாபக அடுக்குகளில் படிந்த
இழப்புகள் அனைத்தினதும்
ஒற்றை மெட்டாக அமைந்திருந்தது.

என்று தமிழ்மகள் ஆன்ம வேதனையில் பாடுவதாக அமைகிறது “தமிழ் மொழி வாழ்த்து’ என்ற கவிதை. போலித் தமிழ்பேசி பிழைப்பு நடத்துபவர்களைக் கண்டும், நவீன காலச்சூழலில் தமிழுக்கு நேர்ந்த நெருக்கடிகளைக் கண்டும் தமிழ்மகள் பாடும் கவிதையாகவும் இதைக் கொள்ளலாம்.

அடுத்த மிக முக்கிய அம்சமாக, அனைத்து விதமான அதிகாரங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் எதிரான குரல். இது சூரிய வெடிப்பாக அமைந் துள்ளது “நோட்டு அளத்தல்’ என்ற கவிதையில் மகாபலிச் சக்ரவர்த்தியை விசுவரூபமெடுத்து வென்ற வாமணன் அதிகாரத்தின் ஆதிக்கத்தின் குறியீடாக்கப்பட்டு விளிம்பிற்குத் தள்ளப்படு கிறான். இது தாய்மை, பெண் முதன்மையின் உலகம். பெண்தான் உண்மையில் விசுவரூப தரிசனத்தைத் தரமுடியும் என்பதாக

தொடுவானக் கடல் உடுத்து
நுரைமுகில் என் முந்தானை அசைவாக
சூரியப் பொட்டிட்டுப்
புறப்பட்டேன் உலாப்போக
கால்களில் / தேய்ந்த காலணியாய்
வாமணன்.

என்று பெண் முதன்மையின் வெளி பிரபஞ்ச வயமானதாக மாற்றப்படுகிறது. இப்படியாகப் பல்வேறு தளங்களில் விரியும் ஆழியாளின் கவிதைகளுள் இயற்கையின் வார்ப்புகள்,

மணலாற்றுக் கம்பிச் சுருள்களில்
மடங்கிச் சுருண்டு துளிர்த்ததைப்போல்
உறைகுளிரில் விரியும் குறுணிப்பூக்கள்
வெயில் ஏற தீப்பிடித்து எரியும் கரும்பச்சை மரங்கள்
இவ்வாறு மிக நுட்பமாய் அமைந்துள்ளன.

ஆழியாளின் “துவிதம்’ என்ற இத்தொகுப்பு பூர்வீகத்தின் வலியும் புலம்பெயர் நிலத்தின் வலியும் என்கிற இருமையும் சேர்ந்து உலகம் தழுவிய பிரஞ்சம் தழுவிய பெரும் வெளியாய் விரிந்து செல்வதைக் காணமுடிகிறது. அந்த வகையில் கவிதைகளில் வெளிப்படும் இயற்கை வார்ப்புகளும், புனைவும், கவிதை மொழியின் கனமும், உள்ளடக்க நுட்பமும் கச்சிதமாக அதே சமயம் இயல்பாக அமைந்துள்ளன. இவ்வாறான பல்வேறு அம்சங்களில் அமைந்த இத்தொகுப்பு நவீனத்தமிழ் கவிதைப் பரப்பில் / புலம்பெயர்ந்த தமிழ்க் கவிதைப் பரப்பில் மிக முக்கியமான கவனத்தைப் பெறும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

நன்றி: அணங்கு (டிசெம்பர் -பெப்ரவரி 2007)

May 5, 2007

நிலம் உடல் மனம்

Filed under: ரமேஷ்-பிரேம் — டிசே தமிழன் @ 7:49 pm

~ரமேஷ்-பிரேம்

தொன்மங்கள் இல்லாத இனமோ, குழுவோ தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டிருத்தல் என்பது சாத்தியமற்றது. தன் நிலம் பற்றி, தன் இனம் பற்றி, தன்னைச் சூழ்ந்துள்ள தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற இயற்கை வடிவங்கள் பற்றி, தன் வெளி மற்றும் காலம் பற்றி, இன்னும் விரிந்த பொருளில் தன்னைச் சூழ்ந்துள்ள பேரண்டம் பற்றி எல்லாம் ஒவ்வொரு இனத்திற்கும் தொன்மங்கள் தேவை. தொன்மம் அற்ற சமூகத்திற்கு வரலாறும் இல்லாமலேயே போகும். வரலாறு அற்ற சமூகத்தில் அடையாளம் என்பது பெரும் சிக்கலாகப் போகும். அடையாளம் என்பது, வேறொன்றுமல்ல மனத்தின் திசை வடிவம், இயக்கமுறை, யாராக இருந்து, யாரை நோக்கி, யாருக்காக சிந்திப்பது, எதுவாக இருந்து, எதனை அறிந்து, எதுவழியாக, எதுவாக மாற உணர்வு கொள்வது என்பவை அனைத்துமே ‘தான்’ என்பதும்; தான் என்ற அடையாளமும் வரையறுக்கப்பட்டபின்பே இயலக் கூடியது. இந்த அடையாளம் எப்போதும் தனி மனிதர் சார்ந்ததோ ‘அகம்’ அல்லது ‘உள்ளுணர்வு’ சார்ந்ததோ அல்ல. கூட்டுத் தன்மை உடையது. தனி மனிதர், தனி ஒரு மனம் என்பதெல்லாம் உள்ளங்கையில் அள்ளிய நீர் போன்றதுதான். அது வேறொரு பெருநீர் பரப்பின் அக்கண வடிவம். அதே அக்கண வடிவமும், அதுவான நிலையும் அடையாளம் மற்றும் ‘தனது நிலை’ மற்றும் நிகழ்வு நிலை’ என்பவற்றைப் பொருத்தது. இந்த அடையாளத்தை, பாத்திரத்தை, பாவனையை ஒவ்வொருவருக்கும் வழங்குவது அவர் ‘வாழ நேர்ந்து’விட்ட வரலாறு, சமூகம், நம்பிக்கைச் சூழல் என்பவையே. இவற்றைச் சுருக்கமாக இனச்சூழல் என்று வைத்துக் கொள்ளலாம். இனம் என்றவுடன் நமக்கு மொழியும், சமயமும், வழக்காறுகளும், நம்பிக்கைகளும், இன விதிகளும் கூடவே நிலமும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் நமக்குள் பதிவாகி உள்ள முறை அல்லது வடிவமைப்பு என்பதுதான் தொன்மம். தொன்மம் என்பது புனைவோ, கற்பனையோ, பொய் மொழியோ அல்ல; அது ஒரு சமூகம் தன்னைப் பற்றியும் தன்னைச் சூழ்ந்த இயற்கை மற்றும் செயற்கை பற்றியும்; தன் வாழ்தல் மற்றும் மறைதல் பற்றியும், புரிந்து கொண்டமுறை; புரிதல்களுக்கு அடிப்படையாக அமைந்த மொழிக் கட்டமைப்பு.

ஒவ்வொரு சமூகமும் தனது வரலாற்றை, நினைவை, கனவை தொன்மத்திலிருந்தே தொடங்குகிறது, தொடங்க முடியும். அதே வகையாய் பிறரைப் பற்றிய தொன்மத்தையும் அது உருவாக்கி வைத்துக் கொள்கிறது. இயற்கை என்பது இயல்பில் என்னவென்று அறியவே முடியாததாக உள்ள நிலையில் மனிதர் வாழும் இடம் ‘பண்பாடு’ என்றும், ‘கலாசாரம்’ என்றும் கூறப்படும் இடம்தான். இயற்கையும் பண்பாடும் என்ற இணை இருமைகளை இணைக்கும் ஒரு மனிதச் செயல்பாடுதான் தொன்மத்தில் தொடக்கம் பெறுகிறது. இருவேறு இனங்கள், இருவேறு குழுக்கள், இருவேறு தேசங்கள் எதிர்ப்படும் பொழுது முதலில் சந்தித்துக் கொள்பவை, அவற்றின் தொன்மங்கள்தான். ஒரு இனம் மற்ற இனத்தால் அடிமை கொள்ளப்படும் பொழுது அங்கு ஒரு தொன்மம் நிலைகுலைக்கப்படுகிறது. அது மற்றொரு தொன்மத்தின் ஆதிக்கம் நிறைந்த அதிகாரம் நிறைந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. இரண்டுக்குமிடையிலான ஊடாட்டமும் இடையீடுகள் இடையூறுகள் இடையுறவுகளும் கூடி இன்னொரு வகையான தொன்மத் தொகுதியை உருவாக்கிவிடுகிறது. இதுவரை உருவான எவ்வகை மனித அறிவும் தனது தொன்மம் பின்புலத்தை முடிக்க மறுத்து உருவானதில்லை; உருவாகவும் இயலாது. ஏனெனில், மொழியின் அடிப்படைத் தன்மையே தொன்மம் சார்ந்தது; ஒருவகையில் மொழி என்பதே தொன்மம்தான். அதற்கு ‘காரணகாரிய’ நியாய வாத அடிப்படைகள் இல்லை; எப்படியோ தோன்றிவிட்ட ஒரு அதிசயம் அது. ஆனால் ‘மனிதர்’ என்ற நிலையையே அதுதான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது; இன்னும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொன்மத்தால் அமைந்த தொன்மமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மொழிகளின் மூலம் உருவாக்கப்பட்ட ‘மனித நிலை’ எந்த ஒரு எல்லை வரையிலும் ஒரு தொன்மத்தன்மை கொண்டதாகவே இருக்கும்.

ஆனால், தன்னைப் பற்றி தான் உருவாக்கிக் கொண்ட தொன்மத்தில் ஒரு இனம் அல்லது குழு இடப்படுத்தப்பட்டிருப்பதற்கும் தன்னைப் பற்றி பிற இனம், பிற குழு உருவாக்கிய தொன்மத்தில் இடப்படுத்தப்படுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட சமூகங்களின் தொன்மங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பொய்யானவை எனத் தீர்ப்பளிக்கப்பட்டு திரிந்து போவதும், வேறு வகையில் மற்ற தொன்மங்களின் பகுதியாகி விடுவதும் கவனத்துக்குரியவை. தமது நிலம், மொழி, தொன்மம் என ஏதாவதொன்றைத் தகவமைத்துக் கொள்ளாத, தங்க வைத்துக் கொள்ளாத இனம் உண்மையில் அழிந்துபோன இனமாகவே இருக்கும். அழிந்து போன இனங்களில் இருந்து மீண்டும் ஒரு அடையாளம் கட்டமைக்கப்படும் சாத்தியம் அமையும் என்றால், அது உருமாறிய தொன்மத்திலிருந்துதான் தொடக்கம் பெறும். இனங்களை அழித்தலில் நிலம் பறிக்கப்பட்டு தமதாக்கப்படும், ஆனால் மொழியும், தொன்மமும் அடையாளமழிக்கப்படும். இனங்களை அழித்தவர்களும் அழிப்பவர்களும் மொழியையும் தொன்மத்தையும் அழிப்பதன் மூலம் நிலத்தைத் தமதாக்கிக் கொள்கின்றனர். மீந்து நிற்கும் மக்கள் இனமற்ற இனங்களாய், வேறு இனமுற்ற இனங்களாய் திரிக்கப்படுகின்றனர். இந்தத் திரிபுதான் அவர்களைத் தமது நிலத்திற்குள்ளாகவே நிலமற்றவர்களாக மாற்றிவிடுகிறது.

ஆப்பிரிக்க மண்ணில் கருப்பின மக்களைப் போலவும், இந்திய மண்ணில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரைப் போலவும். நிலம் அற்ற வாழ்வு என்ன பொருளுடையது. நிலம் அற்று மனிதருக்கு உடல் உண்டா? உடல் அற்று மனிதருக்கு மனம் உண்டா? மனம் அற்றுப்போன மனிதர் என்பது ஒரு மனிதரற்ற நிலையல்லவா? தொன்மமும் நிலமும்; உடலும் மனமும் பிணைந்துதான் மனிதர் நிலை என்பது தோன்ற முடியும் என்னும்போது தொன்மங்கள் அனைத்தும் நிலம் சார்ந்து அமைந்து விடுகின்றன. நிலமற்ற, நிலமிழந்த மக்களின் நிலமோ அவர்களின் தொன்மங்களுக்குள் மீந்து நின்றுவிடுகின்றன. நிலமற்ற பின்னும் அவர்களின் வாழிடம் அவர்களின் தொன்மங்களில்; மீந்து நிற்கும் தொன்மங்களில் பதுங்கி நிற்கும் நிலத்தினில் உள்ளது அந்த நிலமே அவர்களின் உடலையும் மனதையும் கட்டமைத்துத் தருகிறது. திசை நோக்கி வணங்குதலும், ஒரு நிலத்தைத் தமது புனித நிலமாகத் தொழுதலும், உடலையும் மனதையும் கட்டமைத்து இயக்கும் கூறுகளாக முடிகிறது. நிலம் சில சமயங்களில் நிலம் கடந்த வேறு உலகமாக கற்பனை வடிவம் கொள்கிறது. நிலம் இழந்த மனம் கூட வேறு ஒரு ‘புனித நிலம்’ ‘மறு உலகம்’ என்ற நிலப்பரப்பைச் சுற்றிச் சுற்றி வருகிறது; அதற்கேற்ப தனது உடலை வடிவமைத்துக் கொள்கிறது. நிலம் என்பது இவ்வகையாய் தொன்மமாக மாறுவதும், தொன்மம் மறுவகையில் நமது நிலத்தைச் சுட்டி நிற்பதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்த செயலாகின்றன. தொன்மம் இன்று நிலமும், நிலமின்றி தொன்மமும் நிகழமுடியாத இடத்தில நிலத்தொன்மமும், தொன்ம நிலமும் உருவாகி விடுகின்றன. இவை இரண்டும் சேர்ந்து உடலையும் மனதையும் உருவாக்கித் தருகின்றன. நிலத்திலிருந்து உருவான உடல் மனதை உருவாக்கித் தருகிறது. பிறகு மனம் உடல் வழியே தனக்கான நிலத்தை உருவாக்கிக் கொள்கிறது. மனம் உருவாக்கும் இந்த நிலம்தான் அது வாழும் இடம், அதன் இன நிலம், வாழ்வதற்கு, தான் உருவாவதற்கு மூலமான நிலத்திற்காக தனது வாழ்வை, உடலைத் தர தயாராக உள்ள நிலைதான் எந்த ஒரு இனத்திற்குமான மனத்தகவமைப்பாக மாறுகிறது. தனது நிலம், பிற நிலம் என்ற எல்லை நிலைகளில் கொலை செய்யவும், கொல்லப்படவுமான ஒரு மனத் தகவமைப்பு எவ்வளவு புராதனமானது? எத்தனை தொன்மையானது. இதனைத்தான் தமிழின் தொன்மை இலக்கியங்கள் அகம், புறம் எனப் பிணைத்து அடையாளப்படுத்தின. இன்பம் என்பது இரண்டையும் இணைக்கும் ‘புலன் வழியாக’ அடையாளம் காணப்பட்டது. உண்மையில் புறம் என்பது நிலமும்_அகம் என்பது மனமுமாக நிற்கும்போது உடல் என்பது இருவகைச் செயல்பாடுகளாக பாவனை கொள்கிறது; ஒன்று போர், மற்றது காதல்; போரில் கொல்லுதல் கொல்லப்படுதல் நிகழ்கிறது; இரண்டும் இன்பமே. வெற்றி அல்லது வீரமரணம் இரண்டுமே புகழ், இசை, பேரின்பம். காதலில் புணர்ச்சியும் பிரிவும் நிகழ்கிறது. இரண்டுமே இன்பம், ஏனெனில் அங்கு காதல் உறுதி செய்யப்படுகிறது. இறப்பும் வாழ்வும் இணையும் இடம் ‘புகழ்’ என்றாவதுடன், புகழ், இசை என்பது மாறாததும் மறையாததும், இறப்பற்று நிலைக்கும் புகழாக, பெருமையாக விரிந்த வடிவம் கொள்கின்றன.

‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுந்துப் பரவும் கடவுளும் இலவே’’

(பகைவரைத் தடுத்து அவர் யானையைக் கொன்று தானும் இறந்த வீரனின் நடுகல் அல்லாமல் வேறு கடவுள் இல்லை.

_ மாங்குடி கிழார், புறநானூறு : 335)

பகைவரைத் தன் நிலத்திற்குள் நுழைய விடாமையும், தன் நிலத்தைக் கவர வரும் எதையும் அழிக்கும் வேகமும், அதற்கெனத் தன் உயிரை விடுவதற்கான மனஉறுதியும் ஒரு உடலைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்கிறது. அந்த மரணம், மரணமிலாப் பெருவாழ்வாகப் பொருள்படுகிறது. அந்த உடலின் அடையாளமான ‘கல்’ ஒரு இனத்தின், நிலத்தில் வழிபாட்டுக்குரிய கடவுளாகி விடுகிறது. இந்தக் கடவுள், கல், பரவுதல் என்பவைதான் அச்சமூகத்தின் வழிபடுத்துத் தொன்மங்கள். இத்தொன்மம்தான் அச்சமூகத்தின் இன்பம், துன்பம், இசை, வசை, வாழ்வு, சாவு என்பவற்றை வரையறை செய்தவை.

****************************
தமிழின் தொன்மை இலக்கியங்கள் என இன்று நம்முன் மீந்து நிற்கும் தொகை நூல்கள் என்பவை தொல் தமிழ்ச் சமூகங்கள் அனைத்தின் சமூக மனப்பதிவுகளையும் கொண்டவை அல்ல என்றாலும், சில பொதுக் கருத்துக்கூறுகளை, பொது நம்பிக்கைகளைப் பதிவு செய்து வைத்திருப்பவை. இலக்கியம் என்பது எப்போதும் ஒரு வகைக் கோட்பாட்டாக்கத்தை, அறம் உரைத்தலைத் தமக்குள் கொண்டிருக்கும்; அது அனைத்திற்கும் இறுதியில் ஒரு அறம், விதி அல்லது அறிவுறுத்தல் என்பதைக் கொண்டே தன்னை வடிவமைத்துக் கொள்ளும். இன்றுவரையும் எந்தக் கலை, இலக்கிய, அழகியல் படைப்பும் இந்த விதிமுறையிலிருந்து விலகிவிட்டதோ விலகிவிட முடிந்ததோ இல்லை. ஆனால், ஒரு அறம், விதி, அறிவு மற்றொரு சூழலில் மற்றொரு சமூகத்திற்கு அறமாக, விதியாக, அறிவாக இருக்க வேண்டிய தேவையோ நியாயமோ இருப்பதில்லை. அது பலவிதிகளின், பல அறங்களின், பலவித அறிவுகளின் ஊடாட்ட களமாக, மோதல் இடமாக; சில சமயங்களில் உரையாடல் தளமாக இருக்க முடிகிறது. இன்று உள்ள எல்லா இலக்கியச் சொல்லாடல்களும் ஏதோ ஒரு வகையில் இந்த அறம், விதிகள், அறிவுகள் பற்றிய கேள்விகளை ஏதோ ஒரு வகையில் கையாண்டு கொண்டே இருக்கின்றன. தமிழின் தொன்மை இலக்கியங்களும் ஏதோ ஒரு வகைகளில் மனித மனம், இருப்பு, அறம் மற்றும் வாழ்தலின் அடிப்படை இலங்கு நெறிகள் பற்றிய கேள்விகளைக் கையாள்வதுடன் பதிலுரைக்கவும் முயற்சிக்கின்றன. அவை மீண்டும், மீண்டும் நிலம், உடல், மனம் என்ற கருதுகோள்களை கருத்தமைவுகளை, இருப்புநிலைகளை மற்றொரு வகையில் மெய்மைகளை வரையறுக்கவும் அப்படி வரையறுக்கும் முயற்சியில் ஏற்படும் இடைவெளிகளை வேறு அழகியல்களால் நிரப்பவும் முயன்றுகொண்டே உள்ளன. அவை கையாலும் சிக்கல் மற்றும் மெய்மை என்பவை என்றுமே மனித சமூகங்களை, மனித மன இயந்திரவியலைத் தாக்கிக் கொண்டே இருக்கும் ஒரு தீவிரமான கேள்வி அது; வாழ்வு_மறைவு, இன்பம்_துன்பம், பொருளுடைய நிலை_பொருளின்மை, அறம்_அறமின்மை, அழிவு_அழிவற்ற நிலை என்று தொடரும் நீண்ட எதிர்வுகளின் ஊடாட்டம் அவற்றிற்குள் உள்ளது. இந்திய மெய்யியல்கள் பலவும் ஏதேதோ வகையில் கையாண்டு பதிலுரைக்க முயற்சி செய்த கேள்விகளை தமிழின் பன்மை மரபுகளும் கையாண்டுப் பதிலுரைக்க முயற்சி செய்துள்ளன.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம்மாய்ந்தனரே.

(புறம். 165)
(நிலையற்ற உலகில் நிலைத்திருக்க விரும்பினோர் தமது புகழை இங்கு விட்டு தாம் மறைந்து போயினர்)

நிலையின்மையே நிலைத்ததாகிய இவ்வுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் வழி என்பது தனது வாழ்வை பொருள்படுத்திக்கொள்வதற்கான வழியாக இங்கு அர்த்தம் பெறுகிறது. நிலைத்தல் நிலையின்மை என்ற இருபெரும் எல்லைகளுக்கு இடையில் மனித மனத்தை நிலைப்படுத்தும் எத்தனிப்பில்தான் அனைத்து மெய்யியல்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அறம் என்ற கேள்விக்குப் பதிலுரைக்க இந்த நிலைப்புள்ளியே தகுந்த இடம். பொருளின்மையை உணர்ந்த மனம் அறத்தைத் தேர்ந்தெடுக்க என்ன தேவை இருக்கிறது. இருக்கவேண்டும் என்று பதிலுரைக்கின்றன. இந்திய மாற்று மரபுகள், தமிழின் தொன்மை மரபுகளும் இதற்கு ஏதோ சில வகைகளில் விடைகூற முயற்சிக்கின்றன. அந்த விடை கூறும் முயற்சியில் அவை கண்டடைந்த இணைப்புகள்தான், அகம், புறம் என்ற கோட்பாட்டு வடிவங்கள். இவை கோட்பாடுகளா என்று கேட்பவர்கள் சற்றே தள்ளியிருக்கட்டும், அகம், புறம் என்ற புரிதல் மனம், சமூக அறம் என்பவை பற்றிய ஒருவகை கோட்பாட்டாக்கங்களே. இவை நிலம், உடல், மனம் என்ற இணைப்புகளைக் கொண்டு எதையோ விளக்க முயற்சிக்கின்றன.

*****************************************

முதல் பொருளாகிய இடமும் பொழுதும் என்பதிலிருந்து தொடங்குவோம். காலம், வெளி என்ற இருபெரும் ஆதி கூறுகள் இவை; நிலமும் பொழுதுமாக இங்கு வடிவம் பெருகின்றன. அனைத்திற்கும் அடிப்படையான மர்மங்கள் இவை. நிலம், வெளி என்பவை இயற்கை வெளி என்பதிலிருந்து பண்பாட்டு வெளியாக, சமூக வெளியாக, அரசியல் வெளியாக சமய வெளியாக, சடங்கு வெளியாக, தனி மனித மற்றும் கூட்டு மனித வெளியாக, குடும்ப வெளியாக மாறிமாறி மனித மயப்பட்டு அடுக்கடுக்காக உருவம் கொள்கிறது. காலமும் கூட மனித மயப்பட்டு சிறு பொழுது பெரும்பொழுது என்று பிரிவுற்று மேலும் சமூக காலம், வரலாற்றுக் காலம், தனித்த உடல் சார்ந்த காலம் என வகை பிரிந்து பின்னலுறுகிறது. இந்தப் பின்னலாக்கம் மனித உடல் சார்ந்த அறிதலால், புலன் சார்ந்த புரிதலால் ஏற்படுவது. இந்த முதற்பொருள்களாகிய நிலமும் பொழுதும் வகை பிரிவதன் மூலம்தான் வேறுபட்ட உடல்களைத் தோற்றுவித்து சமூக வெளியாக, பண்பாட்டு வெளியாக மனித காலத்திற்குள் வடிவமைக்கின்றன. இதற்கு அடிப்படையானவை கருப்பொருள்கள், தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பூ, பறை, பண், நீர், தொழில் இவற்றில் இயற்கை சார்ந்த சமூகச் சூழலும் மனிதரால் படைக்கப்பட்ட சமூகச் சூழலும் அடங்கும். இதன் விரிவாக வாழிடம், ஊர், வீடு, கருவிகள், அரசு என்பவையும் சேரமுடியும்; இவை அனைத்தும் ‘உடல்’ என்ற பகுதியாகக் கூடியவை. இவை அனைத்தும் சேர்ந்தே மனதைத் தோற்றுவிக்கின்றன. மனம் என்பதின் மாறுபாடுகள் கருப்பொருள் மற்றும் முதற்பொருள்களின் மாறுபடு இணைப்புகளால் தோற்றம் கொள்கின்றன. நிலம், காலம், சமூகப்பொருள் சூழல் என்பவை இணைந்து உருவாகும் மனநிலையே ‘மனித நிலை’ என்பதைத் தோற்றுவிக்கிறது. மனம் என்பது தனித்ததல்ல என்பதை இந்த இணைப்பு நிலை விளக்கி விடுகிறது. நிலம் உருவாக்கிய உடலும், உடல் உருவாக்கிய மனமும் என்ற நிலை தவிர்க்கமுடியாத வகையில் மனதால் புரிந்து கொள்ளப்படும் உடல், உடலுக்கு அடிப்படையான நிலம் என்ற உறவமைப்பைத் தோற்றுவிக்கும் பொழுது மனம் நிலத்தை வரையறை செய்யும் வினை தொடக்கம் பெறுகிறது. மனதால் அடையாளப் படுத்தப்படும் ‘நிலம்,’ மனதால் எல்லைப்படுத்தப்படும் ‘நிலம்’, மனதால் வடிவமைக்கப்பட்ட நிலம்; இந்நிலம்தான் ‘மனிதநிலை’ ‘மனித இருப்பு’ என்ற அனைத்திற்கும் அடிப்படையாகி விடுகிறது. நிலம் இழத்தல் என்பது உடலையும் மனதையும் இழத்தல் என்பதாகப் பொருள்படுகிறது. நிலம் அற்ற நிலையில் ‘மனித நிலையும்’ ‘மனித அறமும்’ சாத்திய மற்றுப்போகிற நிலையும் இதனால்தான் ஏற்பட்டு விடுகிறது.

****************************

நிலம் காத்தல் என்ற நிலையும், நிலம் கவர்தல் என்ற நிலையும் எதிரெதிர் திசை சார்ந்தவை. ஆயினும் ‘போர்’ என்பதை ‘அறம்’ என்பதற்குள் அடக்கும் தமிழ்க் கோட்பாடு, இறப்பு என்பதை இருவகைப்படுத்துகிறது; வீரமரணம், இழிமரணம், வெற்றி என்பது இரண்டாம் நிலையிலேயே வைக்கப்படுகிறது. ‘குழந்தை இறந்து பிறந்தாலும் வெறும் ஊன் மண்டம் பிறந்தாலும் ஆள் இல்லையென வாளால் வெட்டிப் புதைத்தலை மறக்காத’ நிலை மறம் என்பதன் அடையாளமாகிறது. யானையும், குதிரையும் மனித உடல் மீது குறியீடாகத் தளப்படுத்தப்பட்டு அழித்தலின் ஆற்றல் நிறைந்த மனித உடல் கட்டமைக்கப்படுகிறது. போரில் யானையும், குதிரையும் மனித வடிவம் பெருகின்றன. மனித மனதின் செயல்பாடு கருவிகளாகின்றன. கோட்டைகள் தகர்க்கப்படுகின்றன, அரண்கள் அழிக்கப்படுகின்றன அகழிகள் தூர்க்கப்படுகின்றன, ஊர் தீயிடப்பட்டு வானம் புகையால் மூடப்படுகிறது, காடுகளும் வயல்களும் அழிக்கப்படுகின்றன. கொல்லப்பட்ட உடல்களோ எண்ணற்றவை, பருந்தும் கழுகும் வானமெங்கும் வட்டமிட்டு ஊனைத் தின்கின்றன. நரியும், பேயும் மனித உடல்களைக் கொண்டாடிப் புசிக்கின்றன, வயல்களில் எருக்கு விதைக்கப்படுகிறது, வெற்றி பெற்றோர் கள்ளுண்டு களியாட்டம் ஆடுகின்றனர். தோற்றவர்களும் கூட வீர மரணத்தால் விண்ணுலகடைந்து பெருமைப்படுகின்றனர். ‘உயர்ந்தோர் நாட்டு உடம் பொடும் சென்மார்’ என்ற நிலையை அடைகின்றனர். இந்த நிலையை விளக்க மற்றொரு உலகம் என்பது பயன்படுகிறது. இந்நிலம் நீங்கினும் வேறு உலகத்தில் உனது புகழ் நிலவும் என்பது காலம் கடந்து மொழியில் வாழும் நிலையைக் குறிக்கிறது. நிலம், உடல், மனம் என்பவற்றை இணைக்க இங்கு மொழியே முதலும் கடைசியுமாக தேவைப்படுகிறது. மொழியில் வாழும் நிலையை ‘ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே (புறம் 359) என்ற தொடர் விளக்குகிறது.உடல் புகழப்படுதலும், அதுவே இன்பத்தின் இருப்பிடம் என்று கூறப்படுதலும் ஒருவகையில் வலியானது, அது உடல் அழிதல் பற்றிய, மரணம் பற்றிய அச்சத்தை மிகுத்து, வாழ்தலை மனம் சார்ந்த இருப்பை தொடர் வலியாக்கி விடுகிறது, அப்படியெனில், உடலைவிட ஆயத்தமாதலில் இறப்பு பற்றிய அச்சம் நீக்கப்படுகிறது. பிற்கால பக்தி மரபில் உடலை விடுதல், உயிரை விடுதல் என்பது பேரின்பமாக இறைவனுடன் கலத்தலாக அர்த்தப்பட்டதற்கு முன்பு நிலத்துடன் கலத்தல் என்ற நிலையை போர் சார்ந்த மனத் தகவமைப்பு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த மனத் தகவமைப்பு நிலத்தையும் பெண்ணையும் ஒன்றாகப் பொருள்படுத்தும் நிலையில், ஆண்மை என்பதை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. பெண்மை இனத்தின் மைய இடத்திலிருந்து நீக்கப்பட்ட தன் தொடக்க]மும் இதுவாகவே அமைந்து விட்டது. நிலம், பெண் என்ற இருமை இணைப்புகளைப் புரிந்து கொள்ளும் பொழுது, உடல், மனம் என்பவை போர், காதல் என்பவற்றால் பிணைக்கப்படுதலையும் புரிந்து கொள்ள இயலும், இது வேறு வகைச் சிக்கல்.

(தொடரும்….)

நன்றி: தீராநதி

May 4, 2007

வலிகளை ஆவணப்படுத்துதல்

Filed under: திரைப்படம் — டிசே தமிழன் @ 10:10 am

-Provoked & Bordertownஐ முன்வைத்து-

பெண்கள் மீதான வன்முறை காலங்காலமாய் நடந்தேறிக்கொண்டேயிருக்கிறது. இனங்களின் கலாசாரங்களையும், குடும்ப விழுமியங்களையும் கட்டிக்காக்கவென்று கட்டியெழுப்பப்பட்ட மதங்களோ, கலாசார நிறுவனங்களோ இவ்வாறான விடயங்களில் அதிகளவு குறுக்கீடு செய்யவிரும்புவதில்லை. தொடர்ச்சியாக உடல்/உளரீதியான சுரண்டலகளுக்கு ஆளாகும் பெண்கள் மனப்பிறழ்வுக்கு உள்ளாபவர்களாகவும் தற்கொலையை நாடுபவர்களாகவும் அதிக சந்தர்ப்பங்களில் மாறிப்போகின்றார்கள். அண்மைக்காலமாய் ரொரண்டோ சபவேகள் எங்கும் பெண்கள், சிறுவர்களுக்கான வன்முறைக்கெதிரான (violence against women and children) விழிப்புணர்வு பதாதைகள்/விளம்பரங்கள் பரவலாகத் தென்படத்தொடங்கியுள்ளன. வளர்ச்சியடைந்த பெருநகரங்களில் ஒன்றான ரொரண்டோவில் கூட இவ்வாறான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்பதை திடீரென்று முளைக்கும் இவ்விளம்பரங்கள் நமக்கு சாட்சியப்படுத்தியபடியிருக்கின்றன.

Provoked என்கின்ற இத்திரைப்படம், கிரண்ஜிட் என்ற இலணடனில் வசித்த பஞ்சாபி பெண்ணுக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களாய் தனது கணவருடனும், இருகுழந்தைகளுடன் வசிக்கும் கிரண் தனது கணவனை ஓரிரவில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றார். தீக்காயங்களினால் இறக்கும் கணவரைக்கொன்ற குற்றத்திற்காய் கிரணிற்கு பன்னிரண்டு ஆண்டுகால ஆயுட்தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தை கிரண் செய்ய அவரை உந்தித்தள்ளியது எதுவென ஆராய்கின்றபோது அவரது கணவனின் உடல்/உள வன்கொடுமைகள்தான் காரணம் என்று தெரியவருகின்றது. எனினும் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் பேச முடியாத, தன் உடற்காயங்களை வெளிப்பார்வைக்குக் காட்டத்தயங்குகின்ற கீழைத்தேய மனதுடைய கிரணால் தனது வழக்கறிஞர்களின் ஊடாக இதுகுறித்த விவாதத்தை நீதிமன்றத்தில் நடத்த முடியாமல் போகின்றது. மேலும் கிரணிற்கு தனது கணவரைத் தான் தீயிட்யெரித்து கொலைசெய்துவிட்டேன் என்ற குற்றவுணர்வு இன்னும் உறுத்துகிறது.

provokedGood
ஜெயிலில் பிற பெண்களால் கிரண் bullying ற்கு (தமிழில் என்ன?) ஆரம்பத்தில் உட்பட்டாலும், பிறகு சில நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்கிறார். ஜெயிலில் இருக்கையில், ‘இப்போதுதான் எனது இரவுகள் நிம்மதியாகக் கழிகின்றன’ என்கின்றபோது அவரது திருமணவாழ்வு அவருக்கு எத்தகை வலியைத் த்ந்திருக்கின்றது என்பது பார்ப்பவருக்கு புரியவரும். இதற்கிடையில் கிரணை இந்தக் கொலையைச் செய்வதற்கு உந்தித்தள்ளியது எதுவென South Asian Black Sisters என்ற அமைப்பு ஆராயத் தொடங்குகின்றது. அவரது கணவர் நிகழ்த்திய உடல் மீதான வன்முறை/பாலியல் பலாத்காரங்கள் தான் இத்தகைய முடிவுக்கு வர கிரணை provoke செயதது என்ற பிரச்சாரத்தை இலண்டன் சமூகத்தில் அவர்கள் மேற்கொள்ளத்தொடங்குகின்றார்கள். அதன் நீட்சியில் கிரணின் வழக்கை மேன்முறையீடு செய்ய விரும்பும்போது ஜெயிலில் இருக்கும் பெண்ணொருவரின் சகோதரர் முறையிலான வழக்கறிஞர் ஒருவரின் உதவி வாய்க்கிறது. அவர் இங்கிலாந்து இராணிக்கு சட்ட நுணுக்கஙளை சொல்லவல்லபர் என்பதால் இவ்வழக்கு இன்னும் பரவலான கவனத்தைப் பெறுகிறது. இறுதியில் attempted murder என்ற நிலைய்லிருந்து manslaughterற்கு வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கு முடிவதற்குள் -நான்கு வருடங்கள்- கிரண் ஜெயிலிற்குள் தண்டணை பெற்றுவிட்டபடியால் அத்தோடு அவர் விடுதலை பெறுகின்றார்.

கிரணைப்போன்ற கதைகள் -துணைவர்களால துன்புறுத்தப்படுகின்ற சம்பவங்கள்- பல இடங்களில் ‘சாதாரணமாய்’ நடந்துகொண்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தின் தீர்ப்பே பிற கதைகளிலிருந்து இதை வித்தியாசப்படுத்துகின்றது. ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்று நமது கீழைத்தேயமரபுகள் போதித்துக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு பெண் தன்னை விடுதலை செய்வதற்காய் கொலை செய்திருக்கின்றார் என்பது சற்று ‘அதிர்ச்சியானது’தான். புலம்பெயர் நாடுகளில் நமது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பவை. மேலும் எம்மைப்போன்ற கீழைத்தேயங்களிலிருந்து வருகின்றவர்களுக்கு இருக்கும் கண்காணிப்புச்சுவர்கள் இவை குறித்த திறந்த விவாதங்களைப் பெண்கள் தொடக்கி வைக்க அவர்களுக்கு தடைக்கற்களாகவும் இருக்கின்றன.

இப்படத்தில் கிரணாக, ஜஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் வெளியுலகம் அவ்வளவு தெரியாத, ஆங்கிலம் தெளிவாகப் பேசமுடியாத பெண்ணாக இருந்து பிறகு ஜெயிலில் ஆங்கிலம் கற்று தெளிவாகச் சிந்திக்கும் பெண்ணாக மாறுவது என நல்லதொரு நடிப்பை ஜஸ்வர்யா தந்திருக்கின்றார். ஜெயிலிற்குள் வருகின்றபோது, பொதுவில் வைத்து ஆடைகளைக் கழற்றி ஜெயில் உடுப்புகள் அணியவேண்டும் என்ற நிலை வரும்போது, ‘எங்கள் கணவருக்கு முன்னாலேயே ஆடைகள் மாற்றக் கூச்சப்படுபவர்கள் நாங்கள்’ என்று ஜஸ்வர்யா பதட்டப்படுவது, உடல் குறித்த நமது சமூகத்தின் கண்காணிப்பு அரசியலை மறைமுகமாய் காட்சிப்படுத்துக்கிறது. நந்திதா தாஸ் south asian black sisters என்ற பெண்கள் அமைப்பின் செயற்பாட்டாளாராய் வருகின்றார். எனினும் அவர் தனது நடிப்பை வெளிப்படுத்துவத்றகான் காட்சிகள் மிகக்குறைவாகவே இத்திரைப்படத்தில் இருக்கின்றது. மது அம்பட்டின் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.ஆரின் இசையும் புலம்பெயர்ந்த மேற்கத்தைய நாட்டில், கீழைத்தேயவரின் வாழ்வு முறையை இன்னும் நெருக்காமாய்க்காட்டுகிறது.

இங்கே கிரண் கொலையைத்திட்டமிட்டுச் செய்யப்படவில்லை என்று - அந்தக்கணத்தின் வன்முறையின் கொடூரத்தில் உந்தப்பட்டு செய்யமுயன்றார்- என்பதே கிரணிற்கான தண்டனையைக் குறைக்கின்றது. கொலை நடந்த சந்தர்ப்பத்தில் எப்படியான மனநிலையில் கிரண் இருந்தார் என்ற ஒரு பொலிஸின் சாட்சியே கிரணிற்கான முக்கிய சாட்சியாக இருக்கின்றது. அவ்வாறு நிரூபிக்கப்படாதவிடத்தில் கிரணிற்கு ஒரு கொலையைச் செய்தவருக்கான தண்டனையே வழங்கப்பட்டிருக்குமென்பது நினைவில் கொள்ளக்கூடியது.

(2)

இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தான், போர்டர் ரவுண் (Bordertown) என்ற ஜெனிபர் லோபஸ் (Jennifer Lopez), அன்ரோனியோ பாண்டரஸ் (Antonio Banderas) நடித்த படத்தைப் பார்த்திருந்தேன். மெக்ஸிக்கோ-அமெரிக்க எல்லையில், மெக்ஸிக்கோ சுதந்திர வர்த்தக வலயத்தில் (Free Trade Zone) அமைந்திருக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் கொலை செய்து புதைக்கப்படும் உண்மைச் சம்பவங்களை அடையாளப்படுத்துகின்றது. சுதந்திர வர்த்தக வலயத்தில் இருக்கும் அந்நிய நாட்டு நிறுவனங்கள் (அமெரிக்க நிறுவனங்கள்) குட்டிச் சர்வாதிகாரிகள் போலச் செயற்படுகின்றன. தமக்கான தனிப்பட்ட சட்டதிட்டஙகளை கொண்டு, இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் இத்தொழிற்சாலைகள், இளம்பெண்களை வேலைக்கு எடுப்பதில் முக்கிய கவனம் எடுப்பதோடு, (அப்போதுதான் அவர்கள் ஓய்வில்லாது வேலை செய்து தமது நிறுவங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்) இரவு நேரங்களில் வேலை முடிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றன.

இவ்வாறு வீடுதிரும்பும் வழிகளில் பல பெண்கள் காணாமற்போகின்றார்கள். அப்படியொருநாள் வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்ச்சியிற்கு உள்ளாக்கப்பட்டு அரையுயிருடன் தப்பும் ஒரு பூர்விக குடிப்பெண்ணின் மூலம் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரத்தொடங்குகின்றன. ஆனால் இந்த உயிருள்ள சாட்சியைக் கொலைசெய்ய பலர் தீவிரமாக முயற்சிக்க, அந்தப்பெண் ஒரு பத்திரிகையின் உதவியை நாடுகின்றார். அதே சமயம், இவ்வாறு பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் பெண்களின் செய்தியறிந்து சிகாகோவிலிருக்கும் ஒரு பத்திரிகை, செய்திகள் சேகரிப்பதற்காய் தமது நிருபரை (ஜெனிபர் லோபஸை) மெக்சிக்கோவிற்கு அனுப்புகிறது. சுதந்திர வர்த்தக வலயங்களில் நடக்கும் கொடூரங்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பார்வையினூடு கட்டுரைகளாக எழுதி ஜெனிபர் தனது பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்புகிறார். இந்தக்கதைகள் வெளியுலகத்திற்கு வந்தால்தான் பாதிக்கப்பட்ட அந்தப்பெண்ணின் எதிர்கால வாழ்வு காப்பற்றப்படும் என்ற நிலையிலும், அமெரிக்க பத்திரிகை நிறுவனம் அந்தக்கட்டுரைகளை பிரசுரிக்க மறுக்குகின்றது. கோபம் கொண்டு நிருபர் (ஜெனிபர்) வினாவுகின்றபோது, பத்திரிகை உடபட எல்லாமே பெருநிறுவனங்களால் ஆளப்படுபவை; அவற்றிற்கு எதிராய் எதையும் எழுதிவிடமுடியாது என்ற காரணம் கூறப்படுகிறது. இதற்கிடையில் மெகிசிக்கோவில் ஜெனிபருக்கு உதவியாக இருக்கின்ற பத்திரிகையாளர் (அன்ரோனியோ பண்டர்ஸ்) கொல்லப்படுகின்றார். இனி அமெரிக்கப் பத்திரிகையில் தனக்கு வேலை வேண்டாம் என்று தனது வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு வருகின்ற ஜெனிபர் தனது நண்பரின் மெக்ஸிக்கோ பத்திரிகையில் இணைந்து வேலை செய்யத் தொடங்குகின்றார்.

இறுதியில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் மனித உரிமைகள் அமைப்பால் பாதுகாக்கப்பட்டு, அவரைப் பாலியல் வன்புணர்ந்து கொலைசெய்ய முயன்ற சில கொலைகாரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். எனினும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபடி இருக்கின்றன. இந்தக்கொலைகள் நடப்பதை ஏதோவொருவகையில் அமெரிக்கப் பெருநிறுவனங்களும், மெக்ஸிக்கோ அரசும் அங்கீகரிக்கின்றன என்ற குறிப்புகளை விட்டபடி திரைப்படம் நிறைவுறுகிறது. வறுமையான கிராமப்புறங்களிலிருந்து வரும் பெண்கள் பாலியல் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டு நூற்றுக்கணக்கில் அடையாளங்கள் இல்லாது மறைக்கப்படுவது குறித்து எவருக்கு அக்கறையிருக்கப்போகின்றது? அரசுக்கு தமது கெளரவம் வெளியுலகில் கெட்டுவிடக்கூடாது என்ற கவலையும், பெரு நிறுவங்களுக்கு இவ்வாறான செய்திகளால் தமது இலாபம் பாதிக்கப்படும் என்ற பதட்டம் வருவதும் ‘சாதாரண’மானதே.

bDGood

உழைப்பவர்களை மனித இயந்திரங்களாக்கி ஓய்வுநேரங்களையும் மனித விழுமியங்களையும் மூன்றாமுலக நாடுகளில் விழுங்கி ஏப்பமிட்டுக்கொண்டிருக்கும் உலகமயமாதலின் விளைவுகள் குறித்து விரித்து ஆராய வேண்டிய அவசியம் இங்கு தேவையில்லை. இப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஈழத்தில் இருந்தபோது, ‘இலங்கை வளநாட்டை பொருளாதாரத்தால் உயர்விக்க அமைக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயங்களையும், வந்திறங்கிய நிறுவங்களையும்’ பாடப்புத்தகங்களில் வாசித்த குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியில் படித்த காலங்களில் எங்களோடு பஸ்ஸிலும், நடந்தும் வருகின்ற சுதந்திர வர்த்தக வலயத்தில் உழைப்பவர்களுக்கு இருக்கும் நெருக்கடிகள்/சுரண்டல்கள் குறித்து நிதானமாய் இப்போது யோசித்துப்பார்க்கமுடிகின்றது. அதைவிட made in Sri Lanka, made in Bangaladesh என்று வருகின்ற ஆடைகளை அணியும்போது எத்தனைபேரின் உழைப்பு மிகக்கேவலமாய் சுரண்டப்பட்டிருக்கும் என்பது குறித்தும் கவலைப்படவேண்டியிருக்கிறது.

இப்படத்தை எடுக்கும்போது மெக்ஸிக்கோ நாட்டின் கண்காணிப்பு அதிகளவு இருந்தது என்று இப்படம் எடுத்தவர்களின் குறிப்பு கூறுகின்றது. அதைவிட அமெரிக்கா பெருநிறுவங்களை இதை எப்படி உன்னிப்பாய் கவனித்திருக்கும் என்பது குறித்துக் கூறத்தேவையில்லை. தமது நடிப்புத் தொழில் இவ்வாறான ஒரு படத்தில் நடிப்பதால் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை மீறி, இப்படத்தில் நடிக்கமுன்வந்த ஜெனிபஸ் லோபஸும், அன்ரோனியோ பண்டரஸும் பாராட்டப்படக்கூடியவர்கள். மேலும் இப்படி பிரபலமானவர்கள் நடிக்கின்றபோடு இவ்வாறான திரைப்படங்கள் பரவலான பார்வையாளர்களைப் போய்ச்சேரும் என்பதையும் நினைவூட்டிக்கொள்ளலாம்.

Provoked, BorderTown போன்ற படங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படவேண்டும். பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டு விரிவான உரையாடல்கள் வளர்க்கப்படவேண்டும். அவற்றின் மூலமான அதிர்வுகள் ஆட்சியிலிருப்பவர்களையும், அதிகாரங்களை ஆக்குபவர்களையும் சலனமடையச் செய்தாலே பல மாற்றங்கள் சாத்தியப்படக்கூடும். கிரண் தனது வழக்கின் முடிவில் கூறுவார், இங்கே நான் பாதிக்கப்பட்டேன், விடுதலை பெற்றுவிட்டேன் என்று மகிழ்ச்சியடைய முடியாது, வெளியில் சொல்லப்படாத பல கதைகள் சொல்லப்படாமலே இருக்கின்றன. அவை குறித்தும் நமது பார்வைகள் விரியவேண்டும் என்பது நம் எல்லோருக்குமானது.

May 2, 2007

அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 8:47 am

பிரேம்- ரமேஷ்

பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.

******
அந்த ‘ஆண்மை’ உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது ‘பெண்மை’ விடுதலையில்லை என்பது உறுதி. ‘ஆண்மை’யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள்.

*****
இவற்றை 1928_ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்கப் படாதவைகளாகவே உள்ளது என்பது புரிந்துகொள்ளப்படவேண்டியதாக உள்ளது. ‘பெண் விடுதலை’ என்பதற்காக ஆண்கள் பாடுபடுவதும், கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளை மேலாதிக்கத்தினர் பாடுபடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ஒடுக்கும் சமூகத்தினர் பாடுபடுவதும் ‘ஏமாற்றுவதற்காகச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல’ என்பது வரலாற்றில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட ஒன்று. ஆனால் ஒடுக்குதல், ஒடுக்கப்படுதல் என்ற இருநிலைகளையும் ஏற்காத ‘முரண்படும்’ தன்னிலைகள் உருவாவது என்பது இந்த இரண்டு எதிரிடைகளையும் மறுக்கும் ஒரு தளத்தில் சாத்தியமாகக் கூடியதே. ‘விடுதலைக்கருத்தியல்கள்’ அனைத்திற்குமே இப்படி ஒரு விலகிய அடையாளம் தேவைப்படுகிறது. ஏனெனில், எல்லா ‘விடுதலைக்கருத்தியல்களுமே’ அதி தீவிர விலகுதல், அதி தீவிர மறுசீரமைப்பு என்ற தன்மைகளை உடையவை. ஒரு வகையில் இவை பலப்பட்டு விட்ட ‘உலகப்பொதுவழக்கு’ அல்லது ‘நிலைப்பட்டுவிட்ட எதார்த்தம்’ என்பதை மறுத்து, ஒரு குறிப்பிட்ட அறத்தின் அடிப்படையில் தமது நிலைப்பாட்டை எடுப்பவை. முழுவிடுதலை என்பது சாத்தியமே இல்லை என்பதும் ‘அடிமைத்தனம்’ இல்லாமல் ‘சமூகம்’ ‘நாகரிகம்’ என்பவை உருவாகி நிலை பெறாது என்பதும் உலகப்பொது வழக்கு சார்ந்த பிடிவாதமான நம்பிக்கைகள் என்றால், விடுதலைக் கருத்தியல்கள் ‘சுதந்திரம்’ என்பதை அதன் முழுவடித்திலும் தொடர்ந்து கூறிவருவது ‘முரண்படும் தன்னிலை’ பற்றிய சாத்தியம் குறித்து அவை கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த ‘நம்பிக்கை’ ‘பெண்ணியம்’ பற்றிய விவாதங்களிலும் பெண்ணியம் சார்ந்த மாற்று அறிதல் மற்றும் புரிதல்களிலும் தொடர்ந்து ஊடாடிக்கொண்டே இருக்கக்கூடிய ஒன்று.

இந்த நம்பிக்கையின் மற்றொரு வடிவம்தான் ஆண்மையம் மடிறுக்கும் ‘ஆண் முதன்மை’ மறுக்கும் ஆண்வழிப்புரிதல் கொண்ட ஆண்களால் ஏற்கப்படும் பெண்ணியம். நண்பர்கள் பலரும் தொடர்ந்து விவாதிக்கும் சிக்கிக் குழம்பும் ஒரு நிலைக்களம். பெண்ணியத்தை ஏற்கும் ஆண் அடையாளம், அல்லது பெண்ணியத்தால் உருவாக்கித் தரப்படும் ஆண் அடையாளம் என்பது என்ன? இது சற்றே சிக்கலாகத் தோன்றினாலும் முற்றிலும் சிக்கலானது அல்ல. பெண்மை, ஆண்மை என்ற இரண்டுமே கட்டமைக்கப்பட்ட புனைவுகள், புனைவுகளை மறுத்து மாற்று அடையாளம் பெறும் ஒரு அறிதல், கருத்தியல் தளத்தில் ‘அறவியல்’ மற்றும் ‘புலன் தளத்தில்’ சாத்தியமாகக் கூடியதுதான். மறுத்தல், முரண்படுதல், பங்கேற்காமை, விலகுதல், அடையாளம் துறத்தல் என்பவை அனைத்தும் ‘எதிர்ப்பு அரசியலின்‘ அறத்தந்திரங்கள் என்பது விரிவாக விளக்கத் தேவையற்ற நிஜங்கள். அப்படியெனில் பெண்ணியம் என்பது ஆண் விடுதலைக்கும், மாற்று அரசியலுக்கும் உரிய ‘உப அரசியல்’ பார்வை என்று பொருள்படுகிறது. இதுதான் ‘பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சி’. ஆம் பெண்ணியம் உண்மையில் ஆண் சுதந்திரத்தையும், ஆண் மைய மற்ற தளர்ந்த அடையாளத்தையுமே உருவாக்கித்தருகிறது. அதுவே புரட்சிகர அரசியல், விளிம்பு நிலை அரசியல் என மாற்று அறங்களை நோக்கிய கனவுகளைச் சாத்தியப்படுத்துகிறது. பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லது அடைபட்ட ஆண் தன்மையிலிருந்து யாருக்கும் விடுதலையில்லை. ஏனெனில் ‘ஆண்மை’ என்பது பெண்மையின் படைப்பு, ‘ஆண்நிலை’ ஆண் தன்மை, ஆண் அடையாளம் என்ற வன்முறைத் தொடர்ச்சி (இதனை வரமாக, பெருமையாகக் கொள்ளும் ஆண்கள் ஆதிசக்தியின் அருள்பெற்றவர்கள், அவர்கள் அவ்விதமே ஆகக்கடவது) தாய்மையால் உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு ‘பெண்மை’யால் வளர்த்தெடுக்கப்பட்டு விரிவுபடுத்தப்படுவது. அப்படியெனில் ‘பெண்மை’ அதுவும் பெண்மையால் தாய்மையால் வரையறுக்கப்பட்டு உருவகிக்கப்பட்டதே; அப்படியெனில், பெண்ணியம் ‘ஆண்மை’ என்பதை மட்டுமல்ல ‘பெண்மை’ என்பஆயும் அழித்தாக்கம் செய்யும் மிகச்சிக்கலான நிலையில் உள்ளது. அதனால்தான் இன்றைய ‘பெண்ணியம்’ பலவித வடிவங்களில் இயங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தகர்ப்பு, அழித்தாக்கம், முழு மறுபரிசீலனை, அரசழிப்புவாதம் என முனைப்பு கொண்ட தீவிர நிலைகளைப் பெண்ணியம் செயல்படவேண்டிய தேவை நேர்ந்திருக்கிறது.

பெண்ணியம் ஆண்மையைக் கட்டுடைக்கும்போது வரலாற்றில் ஆண்மை செலுத்தி வந்த அபத்தமான, அடக்குமுறையான பாத்திரம் தனது வடிவத்தை, இடத்தை இழந்து விடுகிறது. இதனை விடுதலை என்று ஏற்பதற்கு ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ ஒன்று தேவைப்படுகிறது. ‘நாம் எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து அடிமைகளாய் வளர்க்கப்பட்டோம் என்பதை மறுக்கின்றீர்களா? எனக் கேட்கும் பெரியாரின் குரலில், ஆண்மையம் மறுத்த ‘ஆண் அறம்’ வெளிப்படுவதை விடுதலைக் கருத்தியலின் பின் புலத்தில்தான் நாம் புரிந்துகொள்ள முடியும். ‘‘பெண்களின் அடிமைத் தன்மை பெண்கள் மாத்திரம் பாதிப்பதில்லை, அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை, ஆண்மையம் மறுத்த விடுதலைக் கருத்தியல் உடைய ‘சாதாரண ஆண்நிலை’ மறுத்த ஒரு புரிதலும் புலனும் உடையவராலேயே இதனைக் கூறமுடியும், இந்தக் கூற்று ‘அறிவொளி’த் தன்மை உடையது ‘அரசழிப்பு’த் தன்மை உடையது; ஏனெனில் அடிமைகள் அடிமைகளையே ‘காதலிக்கிறார்கள்’, அடிமைத்தனம் மறுத்தவர்கள் அடிமைப்படாதவர்களையே ‘காதலிக்கிறார்கள். இந்த அடிமைப்படுத்தல், அடிமைப்பட மறுத்தல் என்ற சமன்பாடு ‘அரசழிப்பு தன்மை உடையது, ‘அதீதி அறம்’ சார்ந்தது. ‘தனி மனிதர்’ என்பதை மூலக்கருவாகக்கொண்டது; இதனை இன்றைய பெண்ணியம் விரிவாக விவாதித்துக் கொண்டுள்ளது; பெண்மையை தகர்வாக்கம் செய்து கொண்டபடியே. அதனால்தான் பெண்ணியம் ‘ஆண்களுக்கு’ மட்டுமல்ல ‘பெண்களுக்கும்’ எதிரானதாக உள்ளது. ‘பெண்கள் விடுதலை பெறுவதற்கு ஆண்களைவிட பெண்களே பெரிதும் தடையாயிருக்கிறார்கள், (பெரியார் 1928) என்பது மேம்போக்ககான வெறுப்பு வாசகமல்ல, பெண்கள் முதலில் எந்த விடுதலைக் கருத்தியலையும் விட ‘பெண்ணியத்தையே’ முதலில் கேள்விக்குட்படுத்துவார்கள்; ஏனெனில் அது பெண், தாய்மை, அழகு, அன்பு, காதல், தியாகம் தெய்விகம் இன்னபிற பெரும்பேறுகளைக் கட்டுமானத் தகர்ப்பு செய்துவிடுகிறது. இந்தக் கட்டுமானங்களைத் தகர்த்து விட்டு ‘மாற்று அடையாளங்களை’, ‘அமைப்புக்கூறுகளை’ உருவாக்கும் செயல்பாடு மிகப்பெரும் வலி நிரம்பியது. இது நேரடியாக ஒரு ‘போர்க்கள’ச் சூழலை அழகியல், அறிவியல், அரசியல், கருத்தியல் தளங்களில் ஏற்படுத்திவிடக்கூடியது. எல்லா மாற்று, விடுதலைக் கருத்தியல்களுக்கும் இந்த ‘விதி’ ஒரு கட்டத்தில் நேர்ந்துவிடும். இந்த ‘போர்க்களச்சூழல்’ பட்டவர்த்தனமாக்கப்படவேண்டும், வெளிப்படையாகக்கப்படவேண்டும். குடும்பம் காதல், தாய்மை, தியாகம், பாசம், ஒழுக்கம், சமூக விதிகள் என்ற ஏதேதோ பெயர்களில் நிகழும் வன்முறைகளும் கொடூரங்களும் தமது ‘மூடிய தன்மையை இழந்து விடுவது ஒன்றே இந்த ‘போர்க்கள’ நிலையைப் பார்வைக்குக் கொண்டு வந்துவிடும். வன்முறையை, வன்கொடுமையை தேவகருணையாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் பாக்கியவான்களும் கூட; அமைதி அவர்கள் வசமே உறைகிறது. ஆனால் தொடர் போர் உத்திகளே மனித உறவுகளைத் திட்டமிட்டுத் தருகின்றன. இந்தத் திட்டமிடுதலில் ஆண்மையும்_ பெண்மையும் போராட்டம் மறந்து ஈடுபட்டு வருகின்றன. ஏனெனில் வரலாறும், சமூகமும், அரசியலும் ‘பெண் ஆண்’இணைகளால் உருவமைக்கப்பட்டவை, செயல்படுத்தப்படுபவை. பெண்ணியம் இந்த ‘இணையின்’ சமத்துவமற்ற தன்மையைத்தான் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதில் இரண்டொரு கேள்வி கள் மீதான கேள்விகளைச் சிறிது திருகித் திறக்கலாம்.

*******
மேல்நாள் நடந்த போரில் இவளுடைய தந்தை யானையை எதிர்த்து மாண்டான், நேற்று நடந்த போரில் இவள் கணவன் ஆநிரை கவர்ந்த பகைவரைத் தடுத்து மாண்டான், இன்றும் போர்ப்பறை கேட்டு விருப்பத்தொடு மயங்கி தன் ஒரே மகன் கையில் வேல் கொடுத்து வெண்ணிற ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி போர்க்களம் நோக்கிச் செல்லெனத். தன் மகனை அனுப்பும் இவள் துணிவு அச்சம் தரக்கூடியது, இவள் சிந்தை கெடுவதாகுக, இவள் மூதில் மகளிராகும் தகுதிபெற்றவள்’’ ஒக்கூர் மாசாத்தியாரின் இப்பாடலின் நேரடிப் பொருள் எதுவான போதும், காலத்தின் வெவ்வேறு கட்டங்களில் தந்தை, கணவன், மகன் என அனைவரையும் போருக்குச் செலுத்தும் ‘மூத்த இல்லத் தலைமை கொண்ட பெண்மை’ பற்றி பதிவை உடையது. ஈன்று புறம்தருதலைத் தன் கடனாகவும் போரில் நின்று மடிதல் தன் மகன் கடனாகவும் நம்பும் மறத்தாய்மை பற்றியது. புராதனத் தாய்மை ‘ஆண்மை’ என்பதை வரையறுக்கும் சிக்கலான தாயும், பிற பெண்மையும் ஏற்பதில்லை என்பது வரலாற்று நாடகத்தின் கடினமான ‘அங்கம்’. இது ‘ஆண்மை’ பற்றிய கருத்துருவாக்கத்தின் மிக அடிப்படையான பகுதி.

*******

மேற்குலகின் கொடுங்கனவாக இருந்துவரும் ‘மெடியா’ என்ற தொன்மப் பாத்திரத்தை இங்கு பார்க்கலாம். யூரிபிடஸ் (கி.மு.431) எழுதிய நாடகத்தின் மூலம் தொடர்ந்து ‘பெண்நிலை’ பற்றிய கேள்விகளை எழுப்பும் பாத்திரம் இது. ஏடீஸ் என்ற கோல்சிஸ் மன்னனின் மகள் மெடியா. மெடியாவின் சகோதரன் அம்சிர்டஸ் ஜேசன் என்பவன் கோல்சிஸ் நாட்டில் உள்ள தங்கக் கம்பளத்தைக் கவர்ந்து செல்ல வருகிறான். அவன் அவ்வகையில் அந்நாட்டின் பகைவன். மெடியாவோ ஜேசன் மீது காமம் கொண்டு தன் தந்தைக்குத் துரோகம் செய்து, தன் சகோதரனையும் கொன்று அல்லது கொல்லப்படக் காரணமாகி ஜேசனுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ஜேசனுடன் சேர்ந்து வாழ்ந்து இரு மகன்களைப் பெறுகிறாள். ஜேசனோ கோரிந்த் நாட்டின் அரசனாகும் ஆசையில் கிரியோனின் மகளான இயோல்கஸ் என்பவளை மணக்கத் திட்டமிட்டு மெடியாவை நாட்டைவிட்டு வெளியேற கட்டளை பிறப்பிக்கிறான். வேற்று நாட்டைச் சேர்ந்த மெடியா வஞ்சனையின் வலியுடன் பழி வாங்க முயல்கிறாள். இயோல்கஸைத் தனது மந்திரத் தன்மையால் கொல்வதுடன் நில்லாது, ஜேசனின் மகன்களையும் தாய் என்ற நினைவு மறுத்துகொன்று தன் வஞ்சத்தைத் தீர்க்கிறாள்.

‘தாய் தன் பிள்ளைகொல்லுதல்’ என்ற உருவகத்தின் மூலம் ‘தந்தை உரிமையைத் தகர்க்கும் இந்நாடக விபரீதம், மேற்குலகின் அச்சமூட்டும் ‘மனச்சிக்கல்’ வகைமைகளில் ஒன்றாக இன்றுவரை அணுகப்பட்டு பல்வேறு பொருளுரைப் புகலுடன் தொடர்ந்து வருகிறது. மெடியா வஞ்சிக்கப்பட்ட பெண்மையின் குறியீடாக மட்டுமின்றி புராதன ‘பெண்மைச் சிக்கலின்’ குறியீடாகவும் அணுகப்படும் ஒரு பாத்திரம். நன்மை, தீமை எதிரிடைகள் குழம்பும் ஒரு மனவடிவம் இது. ஈராஸ் மற்றும் அப்ரோடைட் இணைந்து (இவர்கள் காமத்தின் மூலவடிவமும் மோகத்தின் உருவமுமான இணைகள்) மெடியாவைத் தூண்ட தன் தந்தை, நாடு சகோதரன், அனைவருக்கும் துரோகமிழைத்து, தன் துணையை வேற்று நாட்டு ஆணிடம் காண்கிறாள். இந்த முதல் துரோகத்திற்கும், ஜேசன் அவளுக்கு இழைக்கும் இரண்டாவது துரோகத்திற்கும் இடையில் உள்ளது நாடு, மண், அரசு என்ற களங்கள் அனைத்தையும் ஆணுக்காக இழக்கத் தயாரான மெடியாவின் ‘கொலைச் செயல்’ பல்வேறு வடிவங்களில் சிக்கலடையும் ஒன்று. மெடியாவின் தொன்மம் வெவ்வேறு வடிவ மாறுபாடுகளுடன் பேசப்பட்டாலும் ‘பெண்மை’யின் புராதனச் சிக்கலைப் பதிவு செய்துள்ள ஒன்று.

மூதிண் மகளிருக்கும் மெடியாவுக்கும் இடையில் நீலியும் கண்ணகியும் இன்னபிறரும் வரிசையாக வந்து நிற்கலாம். வஞ்சிக்கப்படுதல், வஞ்சித்தல் என்ற நாடகத்தின் நீட்சி வளையாபதி, குண்டலகேசிகளில் தொடரலாம். இந்தத் தொடர்ச்சி மண்ணாக, எல்லைகளாக, அரசாக, போராகத் தொடரலாம்; பெண்மை என்பது மையத்திலிருந்து விளிம்புக்கும் விளிம்பிலிருந்து மையத்திற்கும் இடையே அலைக்கழியவும் அலைக்கழிக்கவுமான வடிவம் கொள்ளலாம். இந்த அலைக் கழிப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இடையில் உள்ளது பெண்மை/ஆண்மை என்ற முரண் இணைவுகள்; ஒன்றை ஒன்று வரையறுத்துத் தொடரும் போர் உத்திகளின் விளையாட்டுகள்.

பெண்ணியம் இந்த வரையறுப்பின் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நிலையில்தான் அனைத்து அறன்களையும் தலைகீழாக்கி, மறுபரிசீலனை செய்து, அழிப்பாக்கம் செய்து வேறொன்று பற்றிய வேறு பல பற்றிய பேச்சுக்களைத் திறந்து விடுகிறது.

பெண்மை என்பது தெய்விகம், இரக்கம், மென்மை, தயை, தாய்மை, பணிவு, ஆக்கம், கருணை, வன்முறைக்கு வெளியே உள்ளது, வரலாற்றிலும் அரசியலிலும் பங்களிக்காதது, முழுமையானது, வேட்கை தணிந்தது என்பன போன்ற’ ஆண்மை சூழ்ச்சி’ உத்திகளை மறுத்து ‘ஆண்மை’ என்பது போன்றே அனைத்துமாகக் கூடியது, அனைத்துமாக இருந்து வருவது, அனைத்திலும் பங்குடையது என்று கூறுவதன் மூலம் ‘புனைவுமறுப்பு’ நிலையை பெண்ணியம் அடைந்துவிடுகிறது.

இந்தப் பெண்ணியப் புரிதல் ஆண்மையின் அனைத்து மையத் தன்மைகளையும் குலைத்துவிடுவதன் மூலம் வரையறுப்பின் கொடுங்கோன்மையிலிருந்து பெண்மையை மட்டும் அல்ல ஆண்மையையும் விடுவித்திருக்கிறது; கருத்தியல் மற்றும் சொல்லாடல் தளத்தில் என்றாலும் இது எல்லாம் வல்ல பொது வழக்கின் முன்னே ஒரு புள்ளியாக நின்று இயங்கியபடி எல்லாவித ஒடுக்குமுறை, கொடுங்கோன்மை, நிர்ணய வாதங்களையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். இது வரலாற்றின் முன்னொரு தொந்தரவூட்டும் கேள்வி இயந்திரம். இந்த வகைக் கேள்விகள் இல்லாமல் எந்தவகையான ‘அறங்களும்’ உருவாகவோ, உருமாறவோ முடியாது.

*******

பௌத்த பெண் துறவிகள் எழுதி, பலகாலம் வழக்கில் இருந்து வரும் ‘தேரி கதா’ என்ற தொகை நூலில் விடுதலை அடைவதற்கான தமது தேடல் பற்றியும், அத்தேடல்களுக்கு நேரும் இடையூறுகள் பற்றியும், அவற்றை அவர்கள் மீறிக் கடந்து உண்மையை உணர்ந்து ‘ஞானமடையும்’ நிலைபற்றியும் பிக்குணிகள் (பெண் புத்தர்கள் திபேத்திய தாந்திரிக பௌத்தத்தில் பெண், ஆண் என்ற இரு புத்தர்கள் உண்டு) விரிவாக குறியீட்டு வடிவில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதில் ஒரு பிக்குணி தனது புலன்களும், ஆசைகளும் பலகாலம் தன்னை அலைக்கழிப்பது பற்றிக் குறிப்பிட்டு, ஒரு இரவு விளக்கின் முன் அமர்ந்து திரியையே கவனித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஞானத்தைக் கூறுகிறார்.

‘‘நான் அந்தச் சுடரையே/பார்த்துக் கொண்டிருந்தேன்/காற்றில் அதன் அலைக்கழிப்பு/சிறு குச்சியால் அதைக் கிண்டியபின்/திரியை எண்ணெய்க்குள்/அமிழ்த்தினேன்/விளக்கின் பெரு நிர்வாணம்!/ எனக்கு ஞானம் பிறந்தது/எனது இதயம் இப்போது/ விடுதலை அடைந்துவிட்டது.

எண்ணெய், திரி, சுடர், விளக்கு, ஒளி, இருள், சுடரை உயிர்ப்பிக்கும் எண்ணெயே சுடரை விழுங்குதல் வேட்கையின் அலைக்கழிப்பு, இருளின் உள்ளிருந்து புறப்படும் ஞானம். விடுதலையின் பாதை கடினமானது, அது இருள் ஒளி இரண்டிலுமாகத் தொடர்வது. விடுதலை பற்றிய கேள்வியோ வலியோ இல்லாதவர்கள் பாக்கியவான்கள்.

(நன்றி:தீராநதி)

Powered by WordPress