DISPASSIONATED DJ

December 29, 2005

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 1:06 pm

கடற்கரையில்
கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்
பிரியமாய் சேகரிக்கின்றேன்
உனக்கான வார்த்தைகளை

வார்த்தைகள் அனைத்தும்
வன்முறையேறி
இரத்தமாய் வழிகின்றன
அல்லது
போதையேறி
போலியாய் பல்லிளிக்கின்றன

வலிக்கவும் செய்யாமல்
வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்
உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடி
பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்
நீ மணலிலும்
நான் பனியிலும்
எழுதி அழித்த வாக்கியங்கள்
நட்சத்திரங்களாகின்றன

வருடங்கள் கடந்து
வாவிகள் தாண்டி
இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
உதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு பருவத்தில்
நிகழக்கூடும் நமது சந்திப்பு

அப்போது விளம்புவேன்
உனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.

(குட்டி இளவரசிக்கு)

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 12:06 pm

கடற்கரையில்
கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்
பிரியமாய் சேகரிக்கின்றேன்
உனக்கான வார்த்தைகளை

வார்த்தைகள் அனைத்தும்
வன்முறையேறி
இரத்தமாய் வழிகின்றன
அல்லது
போதையேறி
போலியாய் பல்லிளிக்கின்றன

வலிக்கவும் செய்யாமல்
வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்
உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடி
பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்
நீ மணலிலும்
நான் பனியிலும்
எழுதி அழித்த வாக்கியங்கள்
நட்சத்திரங்களாகின்றன

வருடங்கள் கடந்து
வாவிகள் தாண்டி
இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
உதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு பருவத்தில்
நிகழக்கூடும் நமது சந்திப்பு

அப்போது விளம்புவேன்
உனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.

(குட்டி இளவரசிக்கு)

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:06 pm

கடற்கரையில்
கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்
பிரியமாய் சேகரிக்கின்றேன்
உனக்கான வார்த்தைகளை

வார்த்தைகள் அனைத்தும்
வன்முறையேறி
இரத்தமாய் வழிகின்றன
அல்லது
போதையேறி
போலியாய் பல்லிளிக்கின்றன

வலிக்கவும் செய்யாமல்
வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்
உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடி
பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்
நீ மணலிலும்
நான் பனியிலும்
எழுதி அழித்த வாக்கியங்கள்
நட்சத்திரங்களாகின்றன

வருடங்கள் கடந்து
வாவிகள் தாண்டி
இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
உதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு பருவத்தில்
நிகழக்கூடும் நமது சந்திப்பு

அப்போது விளம்புவேன்
உனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.

(குட்டி இளவரசிக்கு)

113587611207010322

December 26, 2005

Filed under: புலம் — டிசே தமிழன் @ 4:35 pm

ட்சுனாமி நினைவுகூர்தலும் பின்நோக்கிய சில பார்வைகளும்

இன்று ஸ்காபுரோ நகரின் நகரசபை திறந்தவெளி அரங்கில் சென்றவருடம் நிகழ்ந்த ட்சுனாமியின் அகோரத்தை நினைவுகூருதல் நடைபெற்றது. மிக உக்கிரமான குளிரினூடும் (பூஜ்ஜியத்துக்கு கீழே பத்துவரைக்கு இருந்தது என நினைக்கின்றேன், குளிர்க்காற்று வேறு) நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டதும், அதில் எண்பது வீதத்துக்கு மேற்பட்டவர்கள் உயர்கல்லூரி/பல்கலைக்கழக/கல்லூரி மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடப்பட்டது.

கனடாவின் பல்வேறு அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். கனடீய மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் வந்திருந்ததும், அவர்கள் அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த இராணுவத்தின் தாக்குதல்களைத் கண்டித்து தமிழ்மாணவர்களுக்காய் அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னும், கனடா அரசாங்கம் ட்சுனாமிக்காய் அறிவித்த பணம் போய்ச்சேர்ந்து உருப்படியான விசயங்கள் எதுவும் ஈழத்தில் நிகழ்ந்ததாய்த் தெரியவில்லை. அதையே மாணவர் ஒருவரும் பேச்சில் தெரிவித்திருந்தார். ஆக்ககுறைந்தது (அடுத்த மாதம் 23ந்திகதி வரவிருக்கும்) தேர்தலுக்கு வாக்கு கேட்க வரும் கட்சிக்காரர்களிடம் இதுகுறித்து கேள்வியைக் கேளுங்கள் என்று ஒரு தோழர் குறிப்பிட்டதை அனைவரும் கவனத்தில் கொள்ளலாம்.

தேர்தலில் எங்கள் பலத்தைக் காட்டாமல் இருப்பதோ, அல்லது இங்குள்ள அரசியலில் எந்தப்பங்களிப்பும் செய்யாமல் இருக்காதவரை எமது குரல்கள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கும். கிட்டத்தட்ட இதைவிட இன்னும் கொடும் குளிரில் சில ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன். பெப்ரவரி நான்கு எமக்கான சுதந்திர நாள் அல்ல என்று உயர்கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாள்களில் டவுன்ரவுண் ரொரண்டோவில் மிக நீண்ட ஊர்வலத்தில் நாமெல்லோரும் கத்திக் கத்தி குரல்கொடுத்தபடி நெடும் வீதிகளில் நடந்தும் எதுவும் உருப்படியாக நிகழ்ந்ததில்லை (எனக்கு அதன் நீட்சியில் மூன்றுநாள்கள் காய்ச்சல் வந்து பாடசாலைக்கு போகமுடியாதிருந்ததுதான் மிச்சம்). அதுபோல், பொங்குதமிழ் முதலாவது நிகழ்ச்சி யாழில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்தபோது, அதை நடத்தும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் உயிரிற்கான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று கனடீய அரசாங்கத்திடம் வேண்டி குளிருக்குள் ஒட்டாவாவில் இருந்த வெளிவவிவகார அமைச்சர் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றோம்.

கிருஷாந்தி பாலியல் வன்புணரப்பட்ட சம்பவம் வெளியே வந்தபோது, கிட்டத்தட்ட 500 பேர் மட்டுமே வசித்துக்கொண்டிருந்த ஒட்டாவாவில், மாணவநண்பர்கள் பேரணிக்காய் பல்வேறு பகுதியில் இருந்து, இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைத் திரட்டியிருந்தார்கள். எந்த சமூகத்தின் மாணவர்களும் கனடாவின் தலைநகரில் இப்படியான ஒருவிடயத்தைச் செய்திராதபோது மிகுந்த தெம்புடனும், நம்பிக்கையுடன் அதைச் செய்திருந்தோம். குளிருக்குள் பலர் மயங்கி விழுந்தது காணாது என்று கிருஷாந்தியை அறிந்த அவரது தோழிகள் சிலரும் மேடையில் பேசும்போது உணர்ச்சிகளின் நிமிர்த்தம் மயங்கிவிழுந்ததையும் பார்த்துக்கொண்டே பாராளுமன்றத்தின் முன் குழுமியிருந்தோம். யாரோ ஒரு பெயர் தெரியாத அலுவலகரை அனுப்பி எமது மனுக்களை பெற்றுக்கொண்டபோது ஆர்ப்பாட்டங்கள் இந்த மேல்நாட்டு அரசியல்வாதிகளிடம் கிஞ்சித்தும் எடுபடாது என்ற உண்மை எனக்கு முதன் முதலில் விளங்கியது. எனக்குத் தெரிந்து, இந்த நிகழ்வை நடத்த பல நண்பர்கள் ஒரு செமஸ்டர் கல்வியையே தாரை வார்த்திருந்தனர். இந்நிகழ்வுக்காய் ஒன்பது மணித்தியாலங்கள் வரை தொலைதூரங்களில் இருந்து பயணித்து எல்லாம் மாணவ நண்பரகள் வந்திருந்தார்கள்.

அனைவரின் உழைப்பும் வீணாய்ப்போனதை, எமது குரல்கள் சப்தமின்றி அடங்கிப்போனதை, அழுத பெண்களின் கண்ணீர்த்துளிகள் பெய்தபனிக்குள் உறைந்துபோனதை, எதுவும் செய்யவியலாத இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அதே அரசாஙகமும், கனடீய பத்திரிக்கைகளும், ஒரு கோடைகாலத்தில் 50ற்கும் குறைவான சிங்கள மக்கள் கலந்துகொண்டு, புலிகள் யாழ் வாசலில் நின்று ஆமிக்கு அடியடியென அடித்தபோது யாழில் இருக்கும் இராணுவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அலறியபோது, ஒட்டாவாவின் பாராளுமன்றத்தின் உள்ளேயேயும் எதிரொலித்தது. பத்திரிக்கைகள் சில முன்பக்கத்தில்கூட பெரிய செய்தியாக ஆர்ப்பாட்டச் செய்தியைப் பிரசுரித்து, தமது ‘நடுநிலைமையை’ எமக்குத் தெரியப்படுத்தின. அதிலிருந்து அதிகாரம் உள்ளவரின் குரல் மட்டுந்தான் அம்பலத்தில் ஏறும் என்ற உண்மை உறைக்கத்தொடங்கியது.

(இயலுமானவரை பொங்குதமிழ், தமிழர் நாள் என்று இன்னபிற மாணவர்கள் வைக்கும் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற்றினாலும்) என்னைப்பொறுத்தவரை, நாம் கனடீய அரசியல் பங்குபெறாதவரை, எமது வாக்குகளுக்கு வலு உண்டென்று நிரூபிக்காதவரை உருப்படியான விடயங்கள் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

அண்மையில் ஸ்காபுரோ நகரின் ஒரு எம்.பி.பியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கு, பத்திரிகையில் வந்த அரசாங்க அறிவித்தலில் ஆங்கிலத்துக்கு அடுத்து தமிழில் மட்டுமே விபரம் வந்திருந்தது. ஆகவே அரசியல்வாதிகள் தமிழ் வாக்குகளின் பலத்தை நிச்சயம் உணர்வார்கள் என்றபடியால் எமது இருப்பையும் தேவையும் அவர்களுக்கு இனிவரும் காலங்களில் தெளிவாக வெளிப்படுத்தலாம்; வெளிப்படுத்தவேண்டும். கனடீய அரசால் அறிவிக்கப்பட்ட ட்சுனாமி நிதி எங்கே போனது என்ற கேள்வியுடன் வரும் தேர்தலை நாம் எதிர்நோக்குவது மிகச்சிறந்தது, அதுபோல பிற உள்ளூர் விடயங்கள் கூடவே.

மற்றும்படி ட்சுனாமியால் பாதிக்கபபட்டவர்களுக்கும், இழப்புக்களால் உள/உடல் தாக்கங்களுக்கு உட்பட்டவர்களுக்கும் தருவதற்கு நம்பிக்கை வார்த்தைகூட என்னிடம் இல்லை என்பதுதான் அவலமானது. கொலை செய்யும் கலாச்சாரம், பாலன் பிறக்கும் தேவாலயத்தின் உள்ளே கூட நீண்டுவிட்டதன்பின் எதைப் பேசித்தான் என்ன பயன்?

ஒருவருக்கு கடிதம் எழுத உட்கார்ந்தபோது, யோசப் பரராஜசிங்கத்தின் கொலையை இணையத்தில் அறிந்த குழப்பத்தில், அவருக்கு இப்படி எழுதினேன்….

‘இந்தக்கணத்தில் வாழ்வு என்பது, எனது அறையிலிருந்து பார்க்கையில் வெளியே வெறிசோடிப்போயிருக்கும் தெருவைப்போல வெறுமையாகவும் மிக மிக நிசப்தமாகவும் இருக்கிறது.’

அதற்கு அவர் எழுதிய பதிலைத்தான் எனக்கான குரலாக ட்சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கே விட்டுப்போகின்றேன்….

‘சமூகத்தின் நிசப்தமோ, பயங்கர இரைச்சலாய் என் மன அமைதியைக் கெடுக்கிறது’ என்ற வரிதான் உங்களதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதே வெறுமை என்னையும் தாக்கியதுண்டு. ஆனாலும் வசந்தங்கள் வரும் நிச்சயமொருநாள்… என்று நம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய நாம்? சாளரத்தினருகே அமர்ந்து விழிவிரித்து எதிர்பார்த்துக் காத்திருப்பதைத் தவிர.’

December 22, 2005

உடைந்த உரையாடல்கள்

Filed under: புனைவு/அனுபவம் — டிசே தமிழன் @ 12:45 pm

‘என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?’
‘ச் சா சா…என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.’
‘இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.’
‘கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.’
‘அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.’
‘சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்…. என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கின்றீர்?’
‘எப்படியப்பா?’
‘இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா….உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.’
‘அப்படியா சொல்லுறவா? அந்த மனுசி நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.’
‘அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?’
‘அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.’
‘அவனவன் கவிதைகள், கட்டுரைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்…. என்னப்பா எங்கையப்பா அவசரமாகப் போகின்றீர்?’
‘இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.’
‘ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்.’
‘சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.’
(மனதுக்குள் முணுமுணுத்துபடி…) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்…இப்ப என்னடா என்றால்…
‘என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது…?’
‘இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?’
‘சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.’
‘என்னதையப்பா..?’
‘என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக்கேட்கிறீர்…..வெங்காயம்….வெங்காயத்தை உரியும்.’

(2)
‘கலகக்காரர்களை எனக்கு ஒருகாலத்தில் பிடிக்கும்!’
‘ஏன் இப்ப சலித்தமாதிரி பேசுகிறாய்’
‘இல்லை. கலகக்காரர்களை நேரில் அறியும் சந்தர்ப்பம் வரும்போதுதான் அவர்களின் உண்மை முகம் தெரிகின்றது.’
‘என்ன நடந்தது?’
‘இல்லை முந்தியொருக்கா வெங்கட்சாமிநாதன் இங்கே வந்தபோது தங்கள் எதிர்ப்பை எல்லாம் காட்டி பிரமீளுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டிருந்தார்கள்.’
‘அது நல்ல விடயந்தானே…தாம் நம்புவதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார்களே!’
‘ஓம். எனக்கும் சந்தோசமாய்த்தான் இருந்தது. ஆனால்…’
‘என்ன ஆனால்?’
அண்மையில் சு.ராவின் நினைவஞ்சலிக் கூட்டம் நடக்கும்போது, ஒருவர் சு.ராவின் விடயத்தில் பிரமீள் துரோகி என்று வெளிப்படையாக கூறினார்.’
‘சொன்னவருக்கு என்றும் ஒரு கருத்து இருக்கும்தானே’
‘அது இல்லை விசயம். முந்தி பிரமீளுக்கு துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்களில் ஒருவரும் அங்கே இருந்தவர். அது மட்டுமில்லை… ‘கவித்துவமான’ ஒரு கவிதையையும் எழுதிப்போட்டு, கவிட்டைக் குனிந்து பார்க்கவும் அல்லது பசுவய்யாவின் நூற்றெட்டுக் கவிதைகளைப் பார்க்கவும் என்று அடிக்குறிப்பும் தந்து கலகமாயும் எழுதினவர். அவர் இந்தச்சமயத்தில், ஒரு சின்ன எதிர்ப்பையும் பிரமீளுக்கு ஆதரவாய் காட்டாததுதான் வியப்பாயிருந்தது’
‘விளங்கேல்லை நீ என்ன சொல்ல வருகிறாய்?’
‘இல்லை, ஆகக்குறைந்தது, இது ஒரு இரங்கல் நினைவுக்கூட்டம். பிரமீளும், சு.ராவும் காலமாகிவிட்டார்கள், அந்த விடயங்களை பேசவேண்டாம் என்றாவது கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் வேறொருசமயத்தில் இவற்றை விரிவாக விவாதிக்கலாம் என்றாவது கூறியிருக்கலாம்.’
‘ம்…ம்…’
‘எனக்கு இங்கிருக்கின்ற மற்ற குறூப்புக்களைவிட அவர்களில் மிகவும் நம்பிக்கை இருந்தது….எழுதுவதற்கும் நேரிலும் வித்தியாசம் இல்லாமல் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலகக்காரர்கள் என்றால் தாங்கள் கூறிய கருத்துக்களில் வலுவாய் டிபென்ஸ் பண்ணி நிற்கோனும். இவர்கள் கூறுவதை எல்லாம், நாங்கள் நம்பி, எப்படி வேறு தளங்களில் வேறு ஆக்களோடு விவாதிப்பது?’
‘சரி சரி அதைவிடு……விம்பங்கள் என்றால் உடையத்தானே செய்யும்!’

‘இப்படித்தான் இன்னொரு விம்பமும் உடைந்தது….’
‘என்னென்டு…’
‘இல்லை இப்ப நல்ல நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கின்றாரே ஒருத்தர்….’
‘ஓம்…உனக்கு அந்தமாதிரி பிடித்த எழுத்தாளர்தானே அவர்…..’
‘ஓமோம்…அவர்தான்…..அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியவுடன் ஒரு நண்பர் தொலைபேசினார்.’
‘என்ன சொன்னார்?’
‘நீர் இப்படி அவனைப்பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்து எழுதியிருக்கின்றீர். அவன் ஊரில் இருக்கும்போது அவனும் அவனது குடும்பமும் சாதித்திமிர் பிடித்துத் திரிந்தவர்கள்…இப்படிப்பட்ட அவனைப்புகழ்ந்து நீரெழுதுவது தலித்துக்களையே கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது……நான் ஒரு தலித்தாய் இருப்பதால் இதை அறிந்தும் அனுபவித்தும் இருக்கின்றேன் எண்டார்’
‘சிலவேளை அவர் ஏதாவது காழ்ப்புணர்வில் சொல்லியிருக்கலாம்…அந்தாள் புலியின்ரை ஆளோ?’
‘அப்படியெல்லாம் இல்லையடா…உடனே இப்படிப்பட்டவர்களுக்கு எதிராய்ப்பேசினால் புலியின்ரை ஆளென்டு முத்திரை எல்லாம் குத்தாதே….அவருடைய தமையனை மண்டையில் போட்டதே புலிதான்….எனவே அந்தாள் பொய் சொல்லியிருக்காது’
‘சரி சரி நீ என்ன சொன்னனீ?’
‘நான் சொன்னேன்… பார்த்தீங்களே அண்ணே…நான் ஒரு பதிவு எழுதும்போதுதான் இப்படி துள்ளிக்குதித்து கொண்டு வருகின்றீர்கள். இதையெல்லாம் நீங்கள் முன்னரே எழுத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் எல்லோ. இரண்டாயிரம் ஆண்டளவில் இலக்கியத்திலும் அரசியலிலும் நுழைகின்ற எங்கள் தலைமுறைக்கு எப்படி இதையெல்லாம் அறிய முடியும்? என்டாலும் என்னால் அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்று எழுதியதை விட்டுத்தரமுடியாது. புலம்பெயர் சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் சிலரில் அவரும் ஒருவர் என்ற கருத்தில் நான் உறுதியாக நின்றனான்’
‘சரி, நீ உன்னுடைய பதிவில் எழுதிய கருத்தில்தானே உறுதியாய் நின்றிருக்கின்றாய்’
‘ஆனால் இப்படிச் சொன்னாப்பிறகு அவ்வப்போது தொலைபேசும் நண்பர் இப்போது தொலைபேசுவதே இல்லை.’
‘சரி சரி விடு…அங்கை பார் பச்சை கிளி ஒன்று பறந்துபோகிறது…’
‘என்னடா…கலியாணம் கட்டி உனக்கு ஒரு வருசமும் ஆகிறது…இன்னும் பழைய பழக்கம் போகவில்லை…’
‘இலக்கியவாதி என்றால் ஐம்பது வயதிலும் இருபது வயதுப்பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்றுதானே நமது பெருங்கவிகள், கோணல் பத்திக்காரர்கள் கூறுகின்றார்கள்.’
‘அது சரி நீ இலக்கியவாதி ஆவது பற்றி கதை…எனக்கு மனுசியின்ரை இடியப்ப உரல் தான் கண்ணுக்குள்ளே நிற்கிறது!’
‘என்னடா உன்ரை வீட்டிலும் இடியப்ப உரலா?’
‘அட, நாசமாய்ப்போனவனே! கொஞ்ச நேரம் இடியப்ப உரலை மறந்து எதையாவது கதைக்கலாம் என்டால் அதையே திருப்ப திருப்ப ஞாபகப்படுத்து.’

(3)
‘பெரியவர்….வாங்கோ வாங்கோ…’
‘என்ன என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது மாதிரித் தெரிகிறது.’
‘அப்படியில்லை….புத்தர் இயேசு என்று அடிக்கடி இங்கே வாறவையள். கடைசியாய் பிள்ளையார் கூட வந்து hip-hop ஆடிவிட்டுப் போனவர். அடுத்து நீங்கள் தானே வரவேண்டும்….அதுசரி சைபீயாவாவில் குளிர் எப்படி?’
‘சைபீரியாவை நினைவுபடுத்தாதை…அவன் விசரன் ஸ்ரானின் செய்த கொலைகள் தான் ஞாபகத்துக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. Trotskyவை எல்லாம் மண்டையில் போட்டவனையெல்லாம் இன்னும் புகழ்ந்துகொண்டிருக்கிற தொண்டரடி’வால்கள்’ இருப்பதைப் பார்க்க இன்னும் வலிக்கிறது.’
‘சரி அதைவிடுங்கள்…எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதானே இருக்கிறது….’பெரியவர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது..’
‘கேள்விகளா? கேள் கேள்…எனக்கு அப்படிக்கேட்பவர்களைத்தான் பிடிக்கும்!’
(அதுதானே எனக்கு கைவந்த கலை) ‘இல்லை பெரியவரே….இன்றைக்கு வருகின்ற இளைய தலைமுறை மதங்களை எப்படி இலகுவாய் உதறித்தள்ளிப் போகின்றார்களோ அதுமாதிரி மார்க்ஸிசத்தையும் விலத்தியே வைத்திருக்கின்றார்களே அது ஏன?’
‘உனக்கு என்னுடைய பதில் வேண்டுமோ, இல்லை எனது தத்துவங்களை மனப்பாடம் ஆக்காக்குறையாய் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் கூறும் பதில் வேண்டுமோ…?’
‘இரண்டையும் சொல்லுங்கோ…எல்லாக் கருத்துக்களையும் பகுத்தறிந்து பார்ப்பதுதானே நல்லது என்றுதானே நீங்களும் கூறியிருக்கின்றீர்கள்!’
‘சீடர்கள் உடனே என்ன சொல்வார்கள் என்றால், எல்லாத்துக்கும் உலகமயமாதல்தான் காரணம் என்பார்கள்….உலகமயமாதல் அரும்பாய் முளைக்கத் தொடங்கியபோதே எனது தத்துவங்களை வைத்து கடுமையாக விவாதித்து அதை முற்றாக நிராகரித்திருக்கவேண்டும். ஆனால் வழமைபோல காலம் கடந்தபின் சுதாகரித்துவிட்டு இப்போதுதான் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்….அதற்குள் உலகமயமாதல் எங்கேயோ போய்விட்டது.’
‘ஆனால் பெரியவரே, உலகமயமாதல் மூலம் பல நன்மைகள் தங்களுக்கு ஏற்பட்டதாக தலித்துக்கள் கூறுகின்றார்களே….?’
‘நீதானே சொன்னாய் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது என்று’
‘சரி உஙகள் கருத்துத்தான் என்ன?’
‘இதைப் பற்றிக் கதைத்தால் நான் மூலதனம் மாதிரி இன்னொரு புத்தகம் தான் எழுதவேண்டும். நான் என்னைப் பின்தொடர்பவர்களை…பின்பற்றுபவர்களை…எனது தோள்களுக்கு மேலே ஏறிநின்று இன்றைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்…ஆனால் அவங்களில் கனபேர் என் தாளை எல்லோ பணிந்துகொண்டு கிடக்கின்றாங்கள்.’
‘சரி விடுங்கோ…’தோள் கண்டோர் தோளே கண்டனர்’ மாதிரி உங்கடை பாதத்தைப் பார்த்து மயங்கி அவர்கள் உஙகள் தாள்களைப் பணிந்து நிற்கின்றனர் போல.’
‘கம்பர் சொன்னதை நீ கூறத்தான் ஞாபகம் வருகிறது…உங்கடை ஊர் பெரியாருக்கும் உதுதானே நிகழ்ந்தது.’
‘ஓமோம்…எவரையும் திருஉருவாக்கி வழிபடத்தொடங்கினால் கடைசியில் வந்துநிற்கிற இடம் அதுவாய்த்தானே முடியும். பெரியவரே உஙகளை பற்றி அணமையில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றதே. ஜெர்மனி, இங்கிலாந்து என்று முதலாளித்துவ நாடுகளிலிருந்துகொண்டுதான் நீங்கள் மூலதனம் நூலை எழுதி இருக்கின்றீர்கள் என்று?’
‘அது எல்லாம் விசமத்தனமானது…என் கொள்கைகளோடு விவாதிக்கமுடியாதவர்கள் எழுப்பும் போலித்தனமான குற்றச்சாட்டு இது….நீ எங்கே இருக்கின்றாய் என்பது அல்ல முக்கியம்…என்ன பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு இருக்கின்றாய் என்பதுதான் முக்கியம். நோம் சாம்ஸ்கியின் அனைத்து வாதங்களைக் கூட அவர் அமெரிக்காவில் வசிக்கின்றார் என்ற ஒரே காரணத்துக்காய் நிராகரிக்கமுடியும் என்பது முட்டாள்தனமல்லவா?’
‘நன்றி பெரியவரே…கடைசியாய் ஒரு கேள்வி…’பின் தொடரும் நிழலின் குரல்’ என்று ஒரு நாவல் வாசித்திருக்கின்றீர்களா? அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?’
‘நீதானே முந்தி ஒருக்காய் சொல்லியிருந்தாய்….ஸ்ராலினின் கொடுங்கோலாட்சி என்று பத்துப்பக்கத்தில் எழுதவேண்டிய கட்டுரையை நூற்றுக்கணக்கான பக்கங்களை செலவழித்து அந்த எழுத்தாளர் மரங்களின் தாள்களை வீணாக்கியிருக்கின்றார். இப்படி வீணாய் மரங்களை அழிக்கவேண்டாம் என்று சூழலியல் அக்கறைகொண்ட அந்த நல்ல மனுசன், நவமார்க்ஸிசர் கோவை ஞானி, இந்த எழுத்தாளருக்கு நல்ல அறிவுரை கூறலாம்.’
‘பெரியவர் உங்களோடு இப்படி உரையாடுவ்து… சிறுவயதில் சோவிய இலக்கியங்களை வாசிக்கும்போது, ஸ்ரெப்பிப்புல்வெளிகளில் பனிபொழிகின்றபோது, வின்ரர் கோட்டுடன் ஒரு பெண்ணின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடப்பது போன்ற கதகதப்பைத் தருகின்றது.’
‘சரி….இந்த கதகதப்பை இலக்கியம், இசங்களின் விவாதங்கள் என்று கரைத்து மனதை இறுக்கமாக்காமல், அன்பைத் துணையிடமும் தாயிடமும் காட்டு.’
(அதுசரி, பன்னாடை வெங்காயம் என்று என்னை அம்மாவும் துணையும் ‘அன்பு’ பாராட்டுவது இந்த மனுசனுக்கு எங்கே தெரியப்போகின்றது என்று ‘எங்கே நித்திரை எங்கே நித்திரை’ என்று நான் வழமைபோல கூகிளில் தேடத் தொடங்குகின்றேன்).

உடைந்த உரையாடல்கள்

Filed under: குறும்பு — டிசே தமிழன் @ 11:45 am

‘என்னப்பா உங்கடைபாட்டில முணுமுணுத்துக்கொண்டு என்னத்தை எழுதிக்கொண்டு இருக்கிறியள்?’
‘ச் சா சா…என்ன எழுத்து நடையப்பா இவனுக்கு. இவனைப்போல எழுதோணும் என்று ஆசைப்பட்டு எழுதிப்பார்த்தால் அவனது எழுத்துக்கு பக்கத்தில் கூட எதுவும் வரமாட்டேன் என்கிறது.’
‘இதைத்தானேயப்பா, நீர் கல்யாணங்கட்டினதிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றீர். உந்த மண்ணாங்கட்டி வேலையை விட்டுவிட்டு, கூகிளிலை இருந்து எடுத்துப்போட்டு உம்மடை ஆக்கம் என்று பத்திரிக்கைக்கு அனுப்பிவிடும்.’
‘கூகிளிலிருந்தா? எனக்கு அப்படிச்செய்து பழக்கமில்லை.’
‘அதுசரி, முந்தி யூனியில் படிக்கும்போது, நீர் கூகிளிலிருந்து உருவிப்போட்டு கட்டுரைகள் எழுத, நானும் உமக்கு அந்தமாதிரி எழுத்துத் திறமை என்டெல்லோ தவறாக நினைத்து காதலித்தனான்.’
‘சரி, சரி பழையதெல்லாம் இப்ப ஏன் கிண்டுகின்றீர்? நான் பழையதெல்லாம் மறக்க முயன்று என்ரைபாட்டில் ஒரு கட்டுரை எழுதலாம் என்டு பார்க்கிறன்…. என்டாலும் நீர் வர வர எங்கடை அம்மா மாதிரிதான் கதைக்கின்றீர்?’
‘எப்படியப்பா?’
‘இல்லை அம்மா அடிக்கடி சொல்லுவா….உன்னைப் பெத்ததற்குப் பதிலாய் இரண்டு தென்னம்பிள்ளைகளை வைத்து தண்ணி ஊற்றியிருந்தால் இந்த நேரம் தேங்காயாவது பிடுங்கியிருக்கலாம், நான் ஒரு பன்னாடையை எல்லோ பெத்துவிட்டேன் என்று.’
‘அப்படியா சொல்லுறவா? அந்த மனுசி நான் உம்மளை கலியாணங்கட்டப்போகின்றேன் என்றபோது இதை என்னிடம் சொல்லியிருந்தால் நானும் இந்த நரகத்திலிருந்து தப்பியிருக்கலாமே.’
‘அவா, இதுவரை தான் பெற்ற கஷ்டம் போதும் என்றுதான் உம்மளிடம் என்னைத் தள்ளிவிடுகின்றேன் என்றவா! சரி அதைவிடும். நான் ஒரு அறிவுஜீவியாக வரவேண்டும் என்று கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். அதற்கு ஏதாவது உதவி செய்யுமன்?’
‘அதற்கெல்லாம் நீர் தத்துவங்களைக் கரைத்துக் குடித்திருக்கவேண்டும். அடிக்கடி இச(க்) கிளப்புகளுக்கு போயிருக்கவேண்டும். எனக்குத் தெரிந்து நீர் போனதெல்லாம் யோகா கிளப்புகளுக்கும், கோப்பிக்கடைகளுக்கும் தான். அங்கே போயும், நீர் ஒழுங்காய் உருப்படியான விடயத்தையா செய்தனீர்? அங்கு வாற போற கேர்ல்ஸை சைட் அடித்தது மட்டுந்தானே சின்சியராய்ச் செய்தனீர்.’
‘அவனவன் கவிதைகள், கட்டுரைகள் எழுதி உலகம் சுற்றும் PLAYERகளாக குதூகலித்துக் கொண்டிருக்கின்றாங்கள் என்ற பொறாமையிலை நான் வயிறெரிந்து கொண்டிருக்கிறன். நீர் என்னடா என்றால்….
என்னப்பா எங்கையப்பா அவசரமாகப் போகின்றீர்?’
‘இல்லை ஏதோ player, கவிஞர் என்று கேட்டிச்சுது. அதுதான் இந்த இடியப்ப உரல் எங்கே இருக்கிறது என்று தேடப் போகின்றேன்.’
‘ஏனப்பா கோபப்படுகின்றீர். கொஞ்ச நாளாய் இடியப்ப உரலுக்கு வேலை தராது நல்ல மனுசனாய்த்தானே இருக்கிறன். எதைச் சொன்னாலும் உடனே இடியப்ப உரலைத் தேடும்.’
‘சரி சரி, உந்த எழுதிறது கிழிக்கிறது என்பதை விட்டு விட்டு சமைக்கிறதுக்கு வந்து ஏதாவது உதவி செய்யும்.’
(மனதுக்குள் முணுமுணுத்துபடி…) முந்தி அம்மாவோட இருக்கைக்க, றூமுக்குள்ள கணணியோடும் ரீவியோடும் பொழுதுபோக்கிக்கொண்டிருக்க, நேரந்தவறாது சாப்பாடு தேத்தண்ணி என்டெல்லாம் வரும்…இப்ப என்னடா என்றால்…
‘என்னப்பா ஏதோ சொல்கிற மாதிரிக்கேட்குது…?’
‘இல்லை. இன்டைக்கு கத்தரிக்காய் குழம்பு வைக்கிறதோ உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்கிறதோ என்று யோசித்துப்பார்த்தனான். உம்மளுக்கு என்னப்பா பிடிக்கும்?’
‘சரி சரி எனக்கு ஐஸ் வைக்காமல், உம்மடை சொந்தக்காரர்களை எடுத்து உரிக்கத் தொடங்கும்.’
‘என்னதையப்பா..?’
‘என்னதையோ? ஏதோ தெரியாத மாதிரிக்கேட்கிறீர்…..வெங்காயம்….வெங்காயத்தை உரியும்.’

(2)
‘கலகக்காரர்களை எனக்கு ஒருகாலத்தில் பிடிக்கும்!’
‘ஏன் இப்ப சலித்தமாதிரி பேசுகிறாய்’
‘இல்லை. கலகக்காரர்களை நேரில் அறியும் சந்தர்ப்பம் வரும்போதுதான் அவர்களின் உண்மை முகம் தெரிகின்றது.’
‘என்ன நடந்தது?’
‘இல்லை முந்தியொருக்கா வெங்கட்சாமிநாதன் இங்கே வந்தபோது தங்கள் எதிர்ப்பை எல்லாம் காட்டி பிரமீளுக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டிருந்தார்கள்.’
‘அது நல்ல விடயந்தானே…தாம் நம்புவதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கின்றார்களே!’
‘ஓம். எனக்கும் சந்தோசமாய்த்தான் இருந்தது. ஆனால்…’
‘என்ன ஆனால்?’
அண்மையில் சு.ராவின் நினைவஞ்சலிக் கூட்டம் நடக்கும்போது, ஒருவர் சு.ராவின் விடயத்தில் பிரமீள் துரோகி என்று வெளிப்படையாக கூறினார்.’
‘சொன்னவருக்கு என்றும் ஒரு கருத்து இருக்கும்தானே’
‘அது இல்லை விசயம். முந்தி பிரமீளுக்கு துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்களில் ஒருவரும் அங்கே இருந்தவர். அது மட்டுமில்லை… ‘கவித்துவமான’ ஒரு கவிதையையும் எழுதிப்போட்டு, கவிட்டைக் குனிந்து பார்க்கவும் அல்லது பசுவய்யாவின் நூற்றெட்டுக் கவிதைகளைப் பார்க்கவும் என்று அடிக்குறிப்பும் தந்து கலகமாயும் எழுதினவர். அவர் இந்தச்சமயத்தில், ஒரு சின்ன எதிர்ப்பையும் பிரமீளுக்கு ஆதரவாய் காட்டாததுதான் வியப்பாயிருந்தது’
‘விளங்கேல்லை நீ என்ன சொல்ல வருகிறாய்?’
‘இல்லை, ஆகக்குறைந்தது, இது ஒரு இரங்கல் நினைவுக்கூட்டம். பிரமீளும், சு.ராவும் காலமாகிவிட்டார்கள், அந்த விடயங்களை பேசவேண்டாம் என்றாவது கூறியிருக்கலாம். இல்லாவிட்டால் வேறொருசமயத்தில் இவற்றை விரிவாக விவாதிக்கலாம் என்றாவது கூறியிருக்கலாம்.’
‘ம்…ம்…’
‘எனக்கு இங்கிருக்கின்ற மற்ற குறூப்புக்களைவிட அவர்களில் மிகவும் நம்பிக்கை இருந்தது….எழுதுவதற்கும் நேரிலும் வித்தியாசம் இல்லாமல் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். கலகக்காரர்கள் என்றால் தாங்கள் கூறிய கருத்துக்களில் வலுவாய் டிபென்ஸ் பண்ணி நிற்கோனும். இவர்கள் கூறுவதை எல்லாம், நாங்கள் நம்பி, எப்படி வேறு தளங்களில் வேறு ஆக்களோடு விவாதிப்பது?’
‘சரி சரி அதைவிடு……விம்பங்கள் என்றால் உடையத்தானே செய்யும்!’

‘இப்படித்தான் இன்னொரு விம்பமும் உடைந்தது….’
‘என்னென்டு…’
‘இல்லை இப்ப நல்ல நாவல்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கின்றாரே ஒருத்தர்….’
‘ஓம்…உனக்கு அந்தமாதிரி பிடித்த எழுத்தாளர்தானே அவர்…..’
‘ஓமோம்…அவர்தான்…..அவரைப் பற்றி ஒரு பதிவு எழுதியவுடன் ஒரு நண்பர் தொலைபேசினார்.’
‘என்ன சொன்னார்?’
‘நீர் இப்படி அவனைப்பற்றி புகழோ புகழ் என்று புகழ்ந்து எழுதியிருக்கின்றீர். அவன் ஊரில் இருக்கும்போது அவனும் அவனது குடும்பமும் சாதித்திமிர் பிடித்துத் திரிந்தவர்கள்…இப்படிப்பட்ட அவனைப்புகழ்ந்து நீரெழுதுவது தலித்துக்களையே கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது……நான் ஒரு தலித்தாய் இருப்பதால் இதை அறிந்தும் அனுபவித்தும் இருக்கின்றேன் எண்டார்’
‘சிலவேளை அவர் ஏதாவது காழ்ப்புணர்வில் சொல்லியிருக்கலாம்…அந்தாள் புலியின்ரை ஆளோ?’
‘அப்படியெல்லாம் இல்லையடா…உடனே இப்படிப்பட்டவர்களுக்கு எதிராய்ப்பேசினால் புலியின்ரை ஆளென்டு முத்திரை எல்லாம் குத்தாதே….அவருடைய தமையனை மண்டையில் போட்டதே புலிதான்….எனவே அந்தாள் பொய் சொல்லியிருக்காது’
‘சரி சரி நீ என்ன சொன்னனீ?’
‘நான் சொன்னேன்… பார்த்தீங்களே அண்ணே…நான் ஒரு பதிவு எழுதும்போதுதான் இப்படி துள்ளிக்குதித்து கொண்டு வருகின்றீர்கள். இதையெல்லாம் நீங்கள் முன்னரே எழுத்தில் பதிவு செய்திருக்கவேண்டும் எல்லோ. இரண்டாயிரம் ஆண்டளவில் இலக்கியத்திலும் அரசியலிலும் நுழைகின்ற எங்கள் தலைமுறைக்கு எப்படி இதையெல்லாம் அறிய முடியும்? என்டாலும் என்னால் அவர் ஒரு சிறந்த படைப்பாளி என்று எழுதியதை விட்டுத்தரமுடியாது. புலம்பெயர் சூழலில் விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகள் சிலரில் அவரும் ஒருவர் என்ற கருத்தில் நான் உறுதியாக நின்றனான்’
‘சரி, நீ உன்னுடைய பதிவில் எழுதிய கருத்தில்தானே உறுதியாய் நின்றிருக்கின்றாய்’
‘ஆனால் இப்படிச் சொன்னாப்பிறகு அவ்வப்போது தொலைபேசும் நண்பர் இப்போது தொலைபேசுவதே இல்லை.’
‘சரி சரி விடு…அங்கை பார் பச்சை கிளி ஒன்று பறந்துபோகிறது…’
‘என்னடா…கலியாணம் கட்டி உனக்கு ஒரு வருசமும் ஆகிறது…இன்னும் பழைய பழக்கம் போகவில்லை…’
‘இலக்கியவாதி என்றால் ஐம்பது வயதிலும் இருபது வயதுப்பிள்ளையைப் பார்க்கவேண்டும் என்றுதானே நமது பெருங்கவிகள், கோணல் பத்திக்காரர்கள் கூறுகின்றார்கள்.’
‘அது சரி நீ இலக்கியவாதி ஆவது பற்றி கதை…எனக்கு மனுசியின்ரை இடியப்ப உரல் தான் கண்ணுக்குள்ளே நிற்கிறது!’
‘என்னடா உன்ரை வீட்டிலும் இடியப்ப உரலா?’
‘அட, நாசமாய்ப்போனவனே! கொஞ்ச நேரம் இடியப்ப உரலை மறந்து எதையாவது கதைக்கலாம் என்டால் அதையே திருப்ப திருப்ப ஞாபகப்படுத்து.’

(3)
‘பெரியவர்….வாங்கோ வாங்கோ…’
‘என்ன என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது மாதிரித் தெரிகிறது.’
‘அப்படியில்லை….புத்தர் இயேசு என்று அடிக்கடி இங்கே வாறவையள். கடைசியாய் பிள்ளையார் கூட வந்து hip-hop ஆடிவிட்டுப் போனவர். அடுத்து நீங்கள் தானே வரவேண்டும்….அதுசரி சைபீயாவாவில் குளிர் எப்படி?’
‘சைபீரியாவை நினைவுபடுத்தாதை…அவன் விசரன் ஸ்ரானின் செய்த கொலைகள் தான் ஞாபகத்துக்கு வந்து நெஞ்சை அடைக்கிறது. Trotskyவை எல்லாம் மண்டையில் போட்டவனையெல்லாம் இன்னும் புகழ்ந்துகொண்டிருக்கிற தொண்டரடி’வால்கள்’ இருப்பதைப் பார்க்க இன்னும் வலிக்கிறது.’
‘சரி அதைவிடுங்கள்…எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் கலந்துதானே இருக்கிறது.’
‘பெரியவர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது..’
‘கேள்விகளா? கேள் கேள்…எனக்கு அப்படிக்கேட்பவர்களைத்தான் பிடிக்கும்!’
(அதுதானே எனக்கு கைவந்த கலை) ‘இல்லை பெரியவரே….இன்றைக்கு வருகின்ற இளைய தலைமுறை மதங்களை எப்படி இலகுவாய் உதறித்தள்ளிப் போகின்றார்களோ அதுமாதிரி மார்க்ஸிசத்தையும் விலத்தியே வைத்திருக்கின்றார்களே அது ஏன?’
‘உனக்கு என்னுடைய பதில் வேண்டுமோ, இல்லை எனது தத்துவங்களை மனப்பாடம் ஆக்காக்குறையாய் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் கூறும் பதில் வேண்டுமோ…?’
‘இரண்டையும் சொல்லுங்கோ…எல்லாக் கருத்துக்களையும் பகுத்தறிந்து பார்ப்பதுதானே நல்லது என்றுதானே நீங்களும் கூறியிருக்கின்றீர்கள்!’
‘சீடர்கள் உடனே என்ன சொல்வார்கள் என்றால், எல்லாத்துக்கும் உலகமயமாதல்தான் காரணம் என்பார்கள்….உலகமயமாதல் அரும்பாய் முளைக்கத் தொடங்கியபோதே எனது தத்துவங்களை வைத்து கடுமையாக விவாதித்து அதை முற்றாக நிராகரித்திருக்கவேண்டும். ஆனால் வழமைபோல காலம் கடந்தபின் சுதாகரித்துவிட்டு இப்போதுதான் விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்….அதற்குள் உலகமயமாதல் எங்கேயோ போய்விட்டது.’
‘ஆனால் பெரியவரே, உலகமயமாதல் மூலம் பல நன்மைகள் தங்களுக்கு ஏற்பட்டதாக தலித்துக்கள் கூறுகின்றார்களே….?’
‘நீதானே சொன்னாய் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது என்று’
‘சரி உஙகள் கருத்துத்தான் என்ன?’
‘இதைப் பற்றிக் கதைத்தால் நான் மூலதனம் மாதிரி இன்னொரு புத்தகம் தான் எழுதவேண்டும். நான் என்னைப் பின்தொடர்பவர்களை…பின்பற்றுபவர்களை…எனது தோள்களுக்கு மேலே ஏறிநின்று இன்றைய உலகத்தைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன்…ஆனால் அவங்களில் கனபேர் என் தாளை எல்லோ பணிந்துகொண்டு கிடக்கின்றாங்கள்.’
‘சரி விடுங்கோ…’தோள் கண்டோர் தோளே கண்டனர்’ மாதிரி உங்கடை பாதத்தைப் பார்த்து மயங்கி அவர்கள் உஙகள் தாள்களைப் பணிந்து நிற்கின்றனர் போல.’
‘கம்பர் சொன்னதை நீ கூறத்தான் ஞாபகம் வருகிறது…உங்கடை ஊர் பெரியாருக்கும் உதுதானே நிகழ்ந்தது.’
‘ஓமோம்…எவரையும் திருஉருவாக்கி வழிபடத்தொடங்கினால் கடைசியில் வந்துநிற்கிற இடம் அதுவாய்த்தானே முடியும்.’
‘பெரியவரே உஙகளை பற்றி அணமையில் ஒரு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றதே. ஜெர்மனி, இங்கிலாந்து என்று முதலாளித்துவ நாடுகளிலிருந்துகொண்டுதான் நீங்கள் மூலதனம் நூலை எழுதி இருக்கின்றீர்கள் என்று?’
‘அது எல்லாம் விசமத்தனமானது…என் கொள்கைகளோடு விவாதிக்கமுடியாதவர்கள் எழுப்பும் போலித்தனமான குற்றச்சாட்டு இது….நீ எங்கே இருக்கின்றாய் என்பது அல்ல முக்கியம்…என்ன பேசிக்கொண்டு எழுதிக்கொண்டு இருக்கின்றாய் என்பதுதான் முக்கியம். நோம் சாம்ஸ்கியின் அனைத்து வாதங்களைக் கூட அவர் அமெரிக்காவில் வசிக்கின்றார் என்ற ஒரே காரணத்துக்காய் நிராகரிக்கமுடியும் என்பது முட்டாள்தனமல்லவா?’
‘நன்றி பெரியவரே…கடைசியாய் ஒரு கேள்வி…’பின் தொடரும் நிழலின் குரல்’ என்று ஒரு நாவல் வாசித்திருக்கின்றீர்களா? அதைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்?’
‘நீதானே முந்தி ஒருக்காய் சொல்லியிருந்தாய்….ஸ்ராலினின் கொடுங்கோலாட்சி என்று பத்துப்பக்கத்தில் எழுதவேண்டிய கட்டுரையை நூற்றுக்கணக்கான பக்கங்களை செலவழித்து அந்த எழுத்தாளர் மரங்களின் தாள்களை வீணாக்கியிருக்கின்றார். இப்படி வீணாய் மரங்களை அழிக்கவேண்டாம் என்று சூழலியல் அக்கறைகொண்ட அந்த நல்ல மனுசன், நவமார்க்ஸிசர் கோவை ஞானி, இந்த எழுத்தாளருக்கு நல்ல அறிவுரை கூறலாம்.’
‘பெரியவர் உங்களோடு இப்படி உரையாடுவ்து… சிறுவயதில் சோவிய இலக்கியங்களை வாசிக்கும்போது, ஸ்ரெப்பிப்புல்வெளிகளில் பனிபொழிகின்றபோது, வின்ரர் கோட்டுடன் ஒரு பெண்ணின் கரத்தைப் பற்றிக்கொண்டு நடப்பது போன்ற கதகதப்பைத் தருகின்றது.’
‘சரி….இந்த கதகதப்பை இலக்கியம், இசங்களின் விவாதங்கள் என்று கரைத்து மனதை இறுக்கமாக்காமல், அன்பைத் துணையிடமும் தாயிடமும் காட்டு.’
(அதுசரி, பன்னாடை வெங்காயம் என்று என்னை அம்மாவும் துணையும் ‘அன்பு’ பாராட்டுவது இந்த மனுசனுக்கு எங்கே தெரியப்போகின்றது என்று ‘எங்கே நித்திரை எங்கே நித்திரை’ என்று நான் வழமைபோல கூகிளில் தேடத் தொடங்குகின்றேன்).

December 20, 2005

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:49 pm

எதை எழுதினாலும்
போலியாக இருக்கிறது
அல்லது
போலிகளைப் பேசுவதே
கலகமாகிறது

‘இராணுவம் கற்பழிக்கத்தான் செய்யும்’
அற்புத தரிசனங்கள் தருபவர்கள்
வரலாற்றை எழுதவும்,
பெண்களை
சிதைத்துச்செல்பவர்கள்
திசைகள் எங்குமலைந்து
அரசியல் பேசவும்
செய்யும் விசர்ப்பொழுதில்
எதைப் பேசினாலும் எடுபடாது

தோள்கள் தினவெடுத்தால்
கொன்று குவிக்கவும்
குறிகள் விறைத்தால்
புணர்ந்து களிக்கவும்
தமிழரென நாமமது
தரணியிலே கொண்டோம்
உமக்காய்.

கொல்லுங்களடா
கொல்லுங்களடா
வன்புணர்ந்துவிட்டு
கிணற்றிலும் கிரனைட்டிலும்
அடையாளங்களைச் சிதைத்துவிட்டு
எகத்தாளமாய்ச் சிரிக்கவும் செய்யுங்களடா

வரலாற்றின்
இருண்ட குழிகளிலிருந்து
யோனிகளும் முலைகளும்
எழுந்துவந்து
பூர்வீக நிலங்களிலிருந்து
அடியோடு வேரறுக்கும்
இந்தப்பாவிகளை

சுதந்திரக்காற்று பனிப்புலத்தில்
சுழன்றடிப்பினும் களிப்புறோம்
மனிதர்களையும்
இளமையையும் தொலைத்துவிட்ட
கடந்தகாலத்துயர்
விரும்பி யாசிக்கும்
மரணத்தை

தங்கையிலும் துணையிலும்
அதிகாரம் அத்துமீறாதவரை
நுரைக்கும் பியருடன்
ஆட்டுக்கறி சுவைத்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாம்
அரசியல் அறம்.

Dec 20/2005

(இளவயதிலேயே, உரையாடல் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட தர்சினிக்கு…)

December 19, 2005

வாசிப்பு

Filed under: திரைப்படம் — டிசே தமிழன் @ 10:25 am

Baise-Moi (Rape Me)

ஒரு நாவலும், பார்க்காத படமும், வசீகரிக்கும் படைப்பாளியும்

‘Baise-Moi’, Despentes என்ற பிரெஞ்சுப் பெண்ணால் எழுதப்பட்ட நாவல். மனு(Manu) நடீன் (Nadine) என்ற இருபெண்களைச் சுற்றிக் கதை படர்கிறது. மனு, மிகவும் கொடூரமான முறையில் வன்புணரப்பட்டு வாழ்வதில் இழப்பதற்கும் பெறுவதற்கும் எதுவுமில்லை என்ற மனோநிலையில் இருக்கின்ற சமயத்தில், விலைமாதரும், நிகிலிஸ்டுமானான நடீனைச் சந்திக்கின்றார். ஆண்களால் கொடூரமாய் ஒடுக்கப்பட்டும் வறுமையில் மோசமாய் உழன்றுகொண்டிருக்கும், இவர்கள் இருவரும் அரசு/அதிகாரம் என்பவை விதித்த சட்டங்களை மீறி எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்தபடி பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் பயணிப்பதாய் கதை விரிகிறது. ஆண்களுடன் one night stand போல உறவில் ஈடுபட்டபடி அவர்களைக் கொன்று போட்டபடி பயணித்தபடி இருக்கின்றார்கள். அதன் நீட்சியில் எதையும் இலகுவாய் துப்பாக்கி வைத்துச் செய்யலாம் என்றவகையில் அவசரமான பொழுதுகளில் ஒரு சில பெண்களைக்கூட கொன்றும் விடுகின்றனர். எதையும் இழக்கவேண்டியிருக்காது என்பது தெரிந்திருந்ததைப்போல, தங்களது வாழ்வுக்கு விரைவில் முடிவு வரும் என்பதிலும் தெளிவாக இருக்கின்றனர். இறுதியில் ஒரு கடையைப் பணத்துக்காய் கொள்ளையடிக்கும்போது அந்தக்கடைக்காரரின் துப்பாக்கியால் மனு கொல்லப்படுகின்றார். அதைத் தொடர்ந்து நடீன் என்ன செய்கின்றார் என்பது கதையின் நீட்சியில் கூறப்படுகின்றது.

இந்தக்கதை ஒரு இலக்கியப்படைப்பு என்ற வகைக்குள் வைக்கலாமா இல்லையா என்பதை விமர்சகர்களின் அசைப்போடலுக்கு விலக்கிவிட்டுப்பார்த்தால், இது நாம் இதுவரை நினைத்துபார்க்காத விளிம்புநிலை மனிதர்களின் அவல வாழ்வையும், அதன் கொதிப்பில் சட்டம்/சம்பிராதாயம் என்பவற்றை எல்லாம் மிக இலகுவாய் கடந்துகொண்டு போவார்கள் எனபதுவான ஒரு வெளியை இந்தப்புதினம் நமக்கு அறிமுகப்படுத்துகின்றது மனுவும், நடீனும் செய்யும் கொலைகளுக்கு எந்த motivationம் இருப்பதில்லை. அவர்களுக்கு எவரையாவது பழிவாங்கவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள். ஓரிடத்தில் குறிப்பிட்டமாதிரி, ‘Fuck me and see what happens to you’ என்பதுதான் இந்தக்கதையின் நடக்கும் கொலைகளின் பலதில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்தக்கதையை வாசித்துக்கொண்டிருந்தபொழுதில்தான் Monster படமும் பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது. Monster (இது உண்மையில் நடந்த கதையை வைத்து எடுக்கப்பட்டது) படத்திற்கும், இந்தக்கதையும் சிலவிடயங்களில் ஒற்றுமைகளைப் பார்க்கமுடிந்தது. Monster படத்தில் உள்ளதுமாதிரி, இந்த நாவலில் உள்ள பெண்கள் லெஸ்பியனாக இல்லாததைத்தவிர அதிக வேறுபாடுகள் இல்லாமல் இரண்டையும் பொருத்திப்பார்க்கலாம்.

இந்தப் புதினத்தை வாசித்து முடிந்தபின் எழுந்த ஆவலில் நாவலின் ஆசிரியரையும் அவரோடு சம்ப்ந்தப்பட்ட பிற விடயங்களையும் இணையத்தில் தேடத்தொடங்கியபோது பல சுவாரசியமான விடயங்கள் கிடைத்தன. இந்த நாவலை இரண்டாயிரம் ஆண்டளவில் படமாக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். மேலும் இந்த நாவலாசிரியர் இதை எழுதி வெளியிட்டபோது அவருக்கு வயது 25. நாவலை எழுதியது 23 வயதில் என்றாலும், சர்ச்சைக்குரிய விடயங்கள் நாவலில் இருந்ததால் எந்தப்பதிப்பகமும் முதலில் இதை வெளியிட முன்வரவில்லை. ஆனால் வெளியிடப்பட்ட குறுகிய காலத்தில் 50 000 பிரதிகள் விற்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கவும்பட்டிருக்கிறது.

Despentes பதினேழு வயதில் விட்டை விட்டு வெளிக்கிட்டு punk இசையில் ஆர்வம் வந்து Les Berurier Noir குழுப்பாடகர்களோடு அலைந்து திரிந்து, பிறகு சில வருடங்கள் விலைமாதராயும், ராப் பாடல்கள் பாடித்திரிந்தும் இருந்திருக்கிறார். ஒரு பொழுதில் அரசியலிலும், Surrealism லிலும் ((இருப்பியல்வாதம்?), நாவல்களிலும் ஆர்வம் வந்து அவற்றில் மூழ்கி, இந்தக்கதையை தனது பெற்றோர் வீட்டிலிருந்து மூன்று வாரங்களில் எழுதி முடித்திருக்கின்றார். தனது எழுத்துக்கும் எழுத்து நடைக்கும் punkம், rapம் பெரும்பங்காற்றியிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றார்.

இந்த நாவலை விட, இந்த நாவலைப்படம் எடுத்ததன் பின்னாலுள்ள இந்த நாவலாசிரியரின் உறுதியும், அவர் முன்வைத்த கருத்துக்களும்தான் என்னை அதிகம் வசீகரிக்கின்றன. இவரும், இவரது தோழியும் அந்தப்படத்தில் இன்னொரு இயக்குநருமான Trinh Thiம், இந்தப்படத்தை எடுக்க ஆரம்பிக்கின்றனர். Trian Thi 18 வயசிலேயே ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்ததை விட்டுவிட்டு ஒரு விலைமாதராக வாழத்தொடங்கியவர். படம் எடுக்க ஆரம்பிக்கின்றபோது, Trinh Thi ற்கு வயது 24, Despentes ற்கு வயது 31. இவர்களது படத்தின் நாயகிகளாக நடித்தவர்களும் விலைமாதராகவே இருந்தவர்கள்.

Despentes கூறுகின்றார், நாங்கள் இந்தப்படத்தில் இன்றைய காலத்தில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையம் போன்றவை கூறும் வன்முறை, பாலியல் காட்சிகளுக்கு மேலாய எதுவும் காட்ட முயலவில்லை. ஆனால் நாங்களும், எமது படத்தில் நடிப்பவர்களும் விளிம்புநிலை மனிதர்களாக இருந்ததால், பிரான்ஸின் மையநீரோட்ட ஊடகங்களால், எங்களை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தது. மேலும் நடித்த பெண்கள், கலப்பினத்தவர்களாகவும், பாரசீக, அல்ஜீரிய பின்புலத்தில் இருந்தும் வந்ததால், அப்படியான பெண்கள் வன்புணரப்பட்டு அதற்கு பழிவாங்கப்படுவது ஜரோப்பிய வெள்ளையின ஆண்களாய் இருந்ததையும் இந்த பொதுசன ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதாகவே இருக்கின்றது என்கிறார்.

இவர் ஒரு நேர்காணலில் (2002ல்) கூறுகின்ற, ”We didn’t realise just how much fear and hatred it would arouse, but it definitely stoked up a lot of nasty stuff. Not least because it’s about poor, non-white women. In France, there’s real conflict between the white majority and the Arabic population’ என்பது எவ்வளவு உண்மையானது என்பதை சென்ற மாதம் பிரான்ஸில் நடைபெற்ற (பிரெஞ்சு) வெள்ளை நிறத்தோலாளர்களுக்கும், ஆபிரிக்கா, அரேபிய பின்னணியில் வந்தவர்களுக்கும் நடைபெற்ற கலவரங்களில் நாமும் கண்டுகொள்ளலாம். பிரான்ஸ், சுதந்திரமான கலைகளின் வெளிப்பாட்டு இடமென்பதையும், எந்த இனமும் சம உரிமையுடன் அங்கே வாழமுடியும் போன்ற கற்பிதங்களை, இந்தக்கலவரங்களும் அதன்பின்னால் நடக்கும் கைதுகளும் கிழித்துக்கொண்டுதானேயிருக்கின்றன.

இந்தப்படம் பிரான்ஸில் 1973 ஒரு படம் தடைசெய்யப்பட்டதன்பிறகு, தடைசெய்யப்பட்ட இரண்டாவது படம்; அதனால் மறைத்தே பலவிடங்களில் திரையிடவும் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தப்படம் தடைசெய்யப்பட்டதன் பிரச்சினை பற்றி Despentes தெளிவாகக் கூறுகின்றார். இது ஒரு சமூகத்தின் கீழ்நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்களின் கதை. மேலும் இந்தப்படத்தை எடுத்த நாமும் விளிம்புநிலைப் பெண்கள் (marginal women). எந்தப்பொழுதிலும் mainstream, எதுவும் அற்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய கதையாடல்களைக் கேட்க விரும்புவதில்லை. அதுவும், அந்த மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராய் ஆயுதம் எடுத்து பணத்துக்காகவும், தங்கள் குரூர திருப்திக்காகவும் கொலைகள் செய்வதை mainstream ஆல் நிச்சயம் சகித்துக்கொள்ளவேமுடியாது. உண்மையில் இவ்வாற விடயங்கள் யதார்த்தத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் மையநீரோட்டங்கள் வழமைபோல இதை அலட்சியப்படுதியபடியே இருக்கின்றன.

Despentes, இந்த நாவலையும் படத்தையும் எடுத்ததன் பிறகு, பல பெண்களால், பெண்ணியப்படைப்புக்களில் விளிம்புநிலைப் பெண்களின் புதியதொரு வாசலைத் திறந்தவர் என்றும் பாராட்டப்படுகின்றார். தொடர்ந்து பல படைப்புக்களை இன்றும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார். முக்கியமாய் பாலியல் நோக்கில் ஆண் இதுவரை கொண்டிருக்கும் மேலாண்மையை நிராகரித்து, தனது பாலியல் சுதந்திரத்தைத் தானே பெண்கள் தேடும் வழிகளை Despentesன் படைப்புக்கள் தேட விளைகின்றது என்பது கவனத்திற்குரியது.

Despentes தானும் 1969 ல் பிறந்ததால் அப்போதைய காலகட்டத்திலும் பிறகும் எழுச்சி பெற்ற பெண்ணிய அமைப்புக்கள் தன்னைக் கவர்வதாகவும், தன்னை ஒரு பெண்ணியவாதியாக அடையாளம் காட்ட விரும்புவதாகவும் கூறுகின்றார். தான் தன் சுய அடையாளத்தை தேடுபவர் என்றும், தனக்கு காசு சம்பாதிப்பதிலும், அதிகாரத்தைப் பெறுவதிலும் விரும்பு உள்ளதாகவும் கூறுகின்றார். வாழ்கை ஒரு அழகு நிறைந்த வீரதீரச்செயல் எனவும், இந்தச்சமூகம் அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட வாழ்வை அல்ல அதற்கப்பால்தான் தனது தேடல் உள்ளது என்கிறார்.

இவரை ஒருவர் நேர்காணல் காணும்போது, நேர்காணல் கண்டவர் ஒரு கேள்விகேட்பார், அதற்கு Despentes பதிலளித்தவிடயம் அருமையாக இருந்தது. (கிட்டத்தட்ட நானும் அந்த நேர்காணல் கண்டவரைப்போல நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது ‘புத்திசாலித்தனமாய்’ யோசித்த விடயம்தான் இது)

‘இந்த நாவலில் இரண்டு பெண்கள் அருகருகிலேயே எப்போதும் இருக்கின்றார்கள். பல பகுதியில் மிகவும் erotic காட்சிகளும், அவர்கள் almost naked யாய் நடனமாடுவதாய் கூடச் சித்தரிப்புக்களும் வருகின்றது. ஆனால் ஏன் அவர்களை லெஸ்பியனாய் உறவில் ஈடுபடுவதாய்க் காட்டவில்லை?’

‘It’s a male problem, being homosexual and not doing it. If you are not a lesbian, you are not a lesbian. As for the dancing: it was a total joy that males in the audience are sure they’ll sleep together–and then nothing!’

இந்தப்பதிலில் இருந்து நிறைய விடயங்களை யோசித்துப் பார்க்கலாம் போலத்தோன்றுகின்றது.

Virginie Despentes was born in 1969. She is also the author of three other novels and a collection of stories, and she wrote and codirected the film version of Baise-Moi .
(back cover of the book, Baise-Moi)

மேலதிகத்தகவல் பெற உதவிய இணைய இணைப்புக்கள்:
http://observer.guardian.co.uk/life/story/0,6903,683906,00.html
http://www.geraldpeary.com/interviews/abc/baise_moi.html

வாசிப்பு

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 9:25 am

Next Page »

Powered by WordPress