DISPASSIONATED DJ

January 28, 2005

Filed under: கவிதை — டிசே தமிழன் @ 12:29 am

நினைவுகள்
பனிப்பாளமாய் இறுகிக்கிடக்க
உடைத்துருக்கும்
வழிதெரியாது
துயருறும் நெஞ்சம்

எனக்காய் நீ
காத்திருக்கையில்
உனக்கு சிநேகமாகிப்போன
subway இருக்கையில்
இன்றும் அமர்ந்திருக்கிறாள்
யாரோ ஒரு பெண்
எதன் வரவையோ எதிர்பார்த்து

சிலவேளைகளில் தோன்றுவதுண்டு
சிறகுகளை மட்டுமல்லாது
ஒரு சிறு கத்தியையும்
நமக்கென நேசமாய் விரிந்த பொழுதுகளில்
பத்திரப்படுத்தியிருக்கலாம்
என்று.

ஏப்ரல்/04

January 25, 2005

ஒரு கதையும் சில குறிப்புக்களும்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:40 am

சுமதி ரூபனின் இந்தக்கதை, புலம்பெயர்தேசத்திலிருந்து எழுதப்பட்டதில் நான் அண்மையில் வாசித்த சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று என்பேன். சுமதி ரூபன் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்களின் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியவர். சிறுகதைகள், கவிதைகள் எழுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகையாகவும், நல்லதொரு இயக்குநனராகவும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். வாழ்வதற்கான முயற்சிகளிலே தோற்றுக்கொண்டு, அதற்காய் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில், இவ்வாறு படைப்பு முயற்சிகளில் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருப்பவர்களை அவதானிக்கும்போது நான் வியப்பதுண்டு. சுமதி ரூபனின் கவிதைகளில் எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லாதபோதும் (கிட்டத்தட்ட ஒரே விடயத்தைப் பேசுவதால் அப்படி இருக்கலாம்), அவரது பல சிறுகதைகள் என்னைக் கவருபவை. சில சிறுகதைகள் ஒருவித அதிர்ச்சியாக எழுதப்பட்டது போன்ற பாவனையில் இருந்தாலும், அதையும் மீறிய பல நல்ல கதைகளை என் வாசிப்பனுபவத்தில் பெற்றிருக்கின்றேன். அண்மையில் கூட, மித்ர பதிப்பகம் மூலம் சுமதி ரூபனின் சிறுகதைகள் தொகுப்பாய் வந்ததாய் அறிய முடிகிறது.

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தற்கு என்ன காரணம் என்று முதலில் யோசிக்கும்போது, எனக்கு பரீட்சயமான (புலம்பெயர்) சூழலில் இந்தக் கதை பின்னப்பட்டிருக்கிறது. அதில் வரும் பாத்திரங்கள் கூட மிகுந்த நம்பகத்தன்மையை உடையதாக படைக்கப்பட்டிருக்கிறது.

அநேக கதைகளில் வருவதைப்போலன்றி, இந்தக் கதையில் வரும் பாத்திரம் வசந்தமலருக்கு காரணம் எதுவுமில்லாமலே (கணவனை கெட்டவனாக காட்டவில்லை) தன்னிலும் வயது குறைந்த பையனோடு உறவு ஏற்படுகிறது. இயல்பு வாழ்க்கையில் பல சமயங்களில் பலவிடயங்கள் இவை ஏன் நிகழ்கின்றன என்பதே புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. எத்தனை ஏன் போட்டுப்பார்த்து வலைவிரித்தாலும் பதில்கள் சிக்குவதில்லை. அவ்வாறுதான் வசந்தமலரும், முகுந்தனிற்கும் தனக்கும் எப்படி உறவு முகிழ்ந்தது என்று எண்ணி வியப்படைகின்றார், வாசிக்கும் நாமுந்தான்.

அதைவிட நுட்பமான பகுதி இதுதான்…

“தாலிக்கொடிய கழட்டுங்கோ” அவன் பார்வையில் பாசிஇ திடுக்கிட்ட வசந்தமலர்.. “என்னடா சொல்லுறாய்.. இந்த வெளிலிய காருக்க..ஜயோ நான் மாட்டன்”

உறவில் மரபை மீறும் இருவருக்குமே தாலிக்கொடி பெரிய விடயமாகிறது. மேற்கத்தைய கலாச்சாரத்தில் முற்றாக மூழ்கி இருக்கின்றவனுக்கும், தாலிக்கொடியுடன் உறவு கொள்வது உறுத்துகிறது. வசந்தமலருக்கும், தனது கணவன் கட்டிய தாலியைக் கழட்ட மனம் மறுகுகிறது. இந்த முக்கியமான விடயத்தை சுமதி ரூபன் கதையின் ஓட்டத்தில் நாசுக்காய் சொல்லிப்போகிறார். நானறிந்தவரையிலும், தமிழே தெரியாத (அல்லது ஒன்றிரண்டு வார்த்தை) பேசுபவர்கள கலாச்சாரத்தில் பலவிடங்களில் மிக ஊறிப்போயிருப்பதைக் கண்டிருக்கின்றேன். இப்படியானவர்களிலிருந்து வந்த சாதியின் நாற்றமும், மதம் மீதான் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பலவேளைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

அற்புதமாகப் போகின்ற கதை முடிவில் கொஞ்சம் சாதாரணமாகிப் போய்விடுவது மாதிரித்தோன்றியது. ஆனால் வசந்தமலரின் கணவன் குமார் வீசும் ஏளனச்சிரிப்பும், கண்களிலுள்ள வன்மமும் ஏதோ தவறுதலாக நடைபெற்று முடிந்துவிட்டது என்பதை வாசகரிடையே விட்டுச்செல்கிறது. அந்த மர்மப்புன்னகை இரண்டுவிதமாய் யோசிக்கவைக்கிறது. பார்த்தியா எனக்கு எல்லாம் நீஙகள் பொத்தி பொத்தி ஒளித்துவைத்திருந்த உறவு ஏற்கனவே தெரியும். வசந்தமலர் விபத்தில் செத்துவிட்டார் இனியென்ன செய்வாய் என்ற ஏளனம் மிதப்பது மாதிரி ஒரு புறமும், மறுபுறம் இப்படி ஒரு உறவு இருப்பதைக் கண்டுபிடித்து, விபத்து என்று சோடித்து வசந்தமலரின் கணவரே வசந்தமலரைக் கொலையும் செய்திருக்கலாம் என்று இருபிரிவாக நினைக்க வைத்தது முடிவு.

(அவசரத்தில் எழுதுகின்றேன். என் வாசிப்பில் பிழையிருந்தால் சுட்டிக்காட்டவும்)

January 24, 2005

ஒரு கதையும் சில குறிப்புக்களும்

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 11:40 pm

January 23, 2005

மன்னிக்க வேண்டுகின்றேன்!

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 5:25 am

பொடிச்சி மற்றும் நண்பர்களுக்கு,

நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். எழுதிய நண்பர் தனிப்பட்டமுறையில் மிகநெருக்கம் என்பதாலும், இதைப் பிரசுரிப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், அது அறம் சேர்ந்த விடயம் என்பதால் தவறிழைத்திருப்பதாய்தான் தெரிகிறது. எனெனில் அவரோடு இப்போது சிறிதுகாலமாக தொடர்பில்லாததால் அவரின் அனுமதியைப் பெறமுடியவில்லை. இந்தக்கடிதத்தில் அவரது சில தனிப்பட்ட விபரங்களைத் தவிர்த்தே பிரசுரித்துள்ளேன். எனினும் அவரால் விவாதத்தில் பங்குபெற முடியாதிருப்பதால் இதைப் பிரசுரித்தது பிழைதான். அந்த நண்பரிடம் இனி நேரில் காணும்போது மன்னிப்பையும் இந்தப்பதிவை அவரின் அனுமதி பெறும்வரை இங்கிருந்து அகற்றியும் விடுகின்றேன். மனதிற்கு மிகச் சங்கடகமாயிருக்கிறது.எல்லாம் சொதப்பி விட்டேன். மிகவும் மன்னிக்கவும்.

மன்னிக்க வேண்டுகின்றேன்!

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 4:25 am

January 21, 2005

‘ம்’

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 10:51 pm

நாவலிருந்து சில பகுதிகள்

“…இனி நான் எழுதப்போவதைப் படிக்கும்போது நீங்கள் சலிப்படையக்கூடும். சாவை வாசிப்பதால் நீங்கள் சலிப்படைகின்றீர்கள். நீங்கள் புத்தகத்தைத் தூக்கி வீசுவதாலோ இனி வரும் சில பக்கங்களை படிக்காமல் தள்ளிவிடுவதாலோ ஒரு காலத்தைக் கடந்து விடமுடியுமென்று நினைக்கின்றீர்களா? அந்தக்காலத்தில் திரும்பவும் திரும்பவும் ‘ஜெயவாவோ’ முழக்கம் எங்களைச் சூழ்ந்து எழுந்தது. சிங்களத்தில் வெறிக்கூச்சல் வெலிகட முழுவதும் பரவிற்று.

நீளமான விசில்கள் சாவை ஒலித்தன. வெள்ளை நிறத்தில் ‘ப்ப்ளின்’ துணியில் முழங்கால்களை முட்டும் முழங்கால்களை முட்டும் காற்சட்டைகளும் மேற்சட்டைகளும் அணிந்திருந்த கைதிகள் வை.ஓ கட்டடத்தின் முகப்பிலிருந்த கம்பிகளால் பின்னப்பட்ட பிரதான கதவை உடைக்கத் தொடங்கினர். அவர்களில் முதலாவதாக சேபால ஏக்கநாயக்கா கோடரியால் கதவைக் கொத்தினான். வை.ஓ கட்டடத்தைச் சூழ்வும் சிங்கள்க் கைதிகள் சுவர்களில் தொற்றி ஏறினார்கள். அவர்கள் தங்களின் கைகளில் சசிறையின் கிடாரத்தில் சோறு கிளறும் இராட்சத அகப்பைகள், சிறைத் தச்சுத் தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கக்கூடிய உளிகள், மரம் அரியும் வாட்கள் கோடரிகள் போன்றவற்றை வைத்திருந்தார்கள். எங்களின் சிறைக்கூண்டுகள் அதிரலாயின. ஜெயவோவா!

(ப 98-99)

“…அவர்கள் மேலும் சில ‘செல்’களை உடைத்துவிட்டார்கள். ஒருவர்ன் ஒரு முழுக்கையை இரத்தம் சொட்ட சொட்ட, தரையில் இழுத்துச் சென்றான். நவரத்திணசிங்கம் வெட்டப்படுகிறார். ரொபேர்ட்டின் உடல் அவர்களால் அலவாங்கால் புரட்டிப் போடப்படுகிறது. ‘சிவசுப்பிரமணியத்தையும் கொன்று விட்டார்கள்’ என்ற அலறல் கேட்கிறது. ஓவ்வொரு கோடரி வீச்சுக்கும் ஒவ்வொரு உளிக்குத்துக்கும் ஒவ்வொரு அலவாங்கு அடிக்க்கும் ஒரு ஜெயவேவாச் சத்தம் எக்காளத்தோடு எழுகிறது.

சிறையின் தரை முழுதும் உதிரச் சகதி. அந்தச் சகதியில் கொலைக்காரர்கள் நடக்கவும் முடியாமல் ஓடவும் முடியாமல் திரும்பத் திரும்பக் கால்கள் வழுக்கி விழுந்தார்கள் என்பதை உங்களால் நம்பமுடிகிறதா? அதை நான் என் கண்களால் கண்டேன். எங்கள் செல்லின் கதவை உடைக்க முயன்றவர்கள் இரத்தத்தில் நிற்கமுடியாமல் தடுமாறினார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தடுமாறி விழுகின்றார்கள்…”

(பக 95-96)

“….மாதா எங்கள் எல்லோரையும் பார்த்துச் சொன்னான். ‘கிட்டு மாமாக்கு உங்களின் ஆட்கள் குண்டு வீசியிருக்கிறார்கள்’ என்று மறுபடியும் பக்கிரியை எழுந்திருக்கச் சொன்னான். பக்கிரியின் முகம் விகாரமாய்க் கிடந்தது. அவரின் வாயில் நீர் வடிந்தது.

மாதா தன் கையிலிருந்த துப்பாக்கியை நீட்டி அதன் குழலால் பக்கிரியின் முகத்தைத் தொடப்போனான். பக்கிரி ‘Fucking Weapons’ என்று கூறியவாறே அந்தத் துப்பாக்கிக் குழலை தன் கையால் பற்றி மெல்ல புறத்தே தள்ளிவிட்டார். எங்கள் பதின்நான்கு பேரினதும் கண்களின் முன்னே எதிரே அன்று அவர்கள் பக்கிரியின் வாயைக் கைகளால் கிழித்தே அடித்தே பக்கிரியைக் கொலை செய்தார்கள்…”

(ப 158)

……

ரோசாவசந்த் இந்த நாவலிருந்து சிலபகுதிகளைப் பதிந்ததைப் பார்த்த ஆவலில் நானும் சிலதைப் பதிகின்றேன். பொடிச்சி, மு.மயூரன், வெங்கடேஷ் (சூனாமியிற்கு நன்றியை இன்னமும் எடுக்கவில்லையா? hrrrr) போன்றவர்கள் வாசித்த தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கின்றார்கள்.

‘ம்’

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 9:51 pm

January 20, 2005

சாரு நிவேதிதா….இன்னும் கொஞ்சம்!

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 1:52 am

இன்று நண்பர்களுக்கு எழுதிய, நண்பர்களாய் எழுதப்பட்ட பழைய கடிதங்களை எனது கணணியின் பதுங்குகுழியிலிருந்து எடுத்து வாசித்துக்கொண்டிருந்தேன். பழைய கள்ளைப் போல பழைய கடிதங்களும் மிகவும் ருசியானவை என்று புரிந்தது. தற்செயலாய் நான்கு வருடங்களுக்கு முன்பு நண்பரொருவருடன் சாரு நிவேதிதாவின் படைப்புக்கள் குறித்து விவாதித்தபோது நண்பர் ஒருவர்(பெயர் குறிப்பிட பிரியமெனினும் அவரது தொடர்பு இப்போது இல்லாததால், அனுமதி வாங்கமுடியவில்லை) எழுதிய கடிதத்தின் பகுதி மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

“…சாருவின் நாவல்பற்றி நீங்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்திலிருந்து முற்றிலும் மாறானது என் கருத்து. பாலியல் விடயங்களை இவரல்ல முதலில் தமிழில் சொன்னது. அதற்கு கு.ப.ரா, ரகுநாதன், ஜி.நாகராஜன், ஜானகிராமன் என்று நீண்ட வரலாறு இருக்கின்றது. ஜி.நாகராஜன் வெளிக்கொணர்ந்த இருண்டபகுதிகள் தமிழிலக்கியத்திற்கு முக்கியமானவை. அவரது நாளை மற்றுமொரு நாளே என்ற நாவலில் ஒரு நாளின் பரப்பிற்குள், கசடையும், அன்பையும், கற்பையும், பிறள்வையும் அழகாக சொல்லியிருந்தார். குபராவின் ஆற்றாமை சிறுகதையில் ஒரு பெண்ணினது மனம் கற்பு என்ற கோட்டில் நின்று கொண்டு கடக்க விரும்பியும் கடக்க முடியாமல் ஊசலாடுவதை எடுத்துக்காட்டி, விடியுமா சிறுகதையில் கணவன் இறந்தபின்னர் ஒரு பெண்ணுக்கு விடிந்துபோவதாகக் காட்டி இருந்தார். இந்த விடிவு எதனைக் குறிக்கிறது என்பதே அந்தச் சிறுகதை இன்றும் சிரஞ்சீவியாக இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.

ஜானகிராமனின் அம்மா வந்தாள், அமிர்தம், மரப்பசு போன்ற நாவல்கள் எல்லாம் இதே உள்ளுடனைக் கொண்ட சிறந்த படைப்புகள்தான். மரப்பசுவில் அம்மணி எல்லோரையும் தொடவிரும்புகிறாள். வைப்பாட்டியாக வாழ்கிறாள். அம்மா வந்தாளில் அலங்காரத்தம்மாள் சின்னவீடு வைத்திருக்கிறாள். கணவனுக்கும், பரபுருசனுக்குமாக ஒவ்வொரு பிள்ளை பெறுகிறாள். பின்னர் பிராயச்சித்தம் செய்ய பரபுருசனின் மூலம் பிறந்த அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள். இவை அந்தக்காலத்து மீறல்களும், அதற்காக கழுவாய் தேடிய நல்ல மனிதர்களின் உதாரணங்களுமாகும். காலத்தோடு ஒட்டிப் பார்க்கும்போது மேற்படி படைப்பாளிகள் சாருவைவிட உயர்ந்த கலைஆளுமை உடையவர்களாகவும், சமூக உய்வையும் விரும்பியவர்களாகவும் தெரிகிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்களது காலம், பண்பாடு- வார்த்தைகளில் மிகவும் காப்பாற்றப்பட்ட காலம். இன்று சாருவிற்கு இந்த இறுக்கம் தேவைப்படாத அளவிற்கு சினிமாவும், தொலைக்காட்சிகளும், சர்வதேச வர்த்தக விரிவாக்கம் மூலம் உள்நுழைந்து கொண்ட பிற காலாச்சார அறிமுகங்களும் தளர்த்தி விட்டிருக்கின்றன. வார்த்தைக்கு வார்த்தை இன்று தூசணம் ஆங்கிலத்திலும், தமிழிலும் சர்வ சாதாரணம். ஆகவே தூசணத்தை இலக்கியத்தில் கொண்டு வருவதால் எந்தவிதமான சாதனையும் சாரு செய்துவிடப் போவதில்லை. உள்ளடக்கம் பாலியல் கெடுபிடியை, மரபை மீறுவதாக அமைந்து அதன் பாசையும் வெளிப்படையான பாசையாகி, மீறலை நிகழ்த்துமாகில் சாருவின் சேவையை பாராட்டலாம். ஆனால் புதிது செய்து முகத்தில் வெளிச்சம் விழவேண்டுமென்பதற்காக வலிந்து இழுத்து உள்ளுடனையும் வெளிப்பாட்டையும் புரட்சிகரமானது என்ற பொய்ச் சவடால் விட்டு குரல் காட்டுவது காலத்தின் முன் காணாமல் போய்விடும். இவர் இந்த ரகம். ஒரு பெண்ணின் விரகதாபம் எப்படி இயல்பாகக் கிளம்பி இயல்பான சுய வடிசல்கள் மூலம் நிறைவு காண முடியும் என்ற அறிவே இவரிடம் இல்லை. இதற்கு மேற்படி நாவலில் சில அத்தியாயங்களே சாட்சி. அவற்றை விலாவாரியாக எடுத்துச் சொல்ல நான் விரும்பவில்லை.

இவரது முதல்நாவல் வெளிவந்தபோது உங்கள் வயதுதான் எனக்கும். அன்று அதை வாசித்தபோது மிகவும் புரட்சிகரமாகவும், இப்படிப் பச்சையாக தமிழ்நாவலில் முன்னெப்போதும் (அப்போது சடங்கு படித்திருக்கவில்லை) காணமுடியாத எழுத்துக்கள் இளவயதிற்கு பிரியமாகவும் இருந்தது. ஆனால் நாவலின் முடிவில் வேறெதாவது காத்திரமான விடயம் மனதில் மிஞ்சியதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் பாருங்கள், ஜானகிராமனையும், குபராவையும், சாருவின் எக்ஸிஸ்டென்சியலிசமும் ·பான்சி பனியனும் படிப்பதற்கு முன்பே படித்திருந்தேன். இன்று இதை ரைப்பண்ணும்போது மீட்டுப்பார்க்கும்போது ·பான்சி பனியனில் சூரியா கண்டடைந்த ஞானங்கள் எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. மாறாக, குபராவும், திஜாவும் படைத்த பாத்திரங்களும், அவற்றின் விடயங்களும் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே நிலையான பாதிப்புக்களை நல்ல படைப்புக்கள்தானே தோற்றுவிக்கும்.

சாருவின் கலகக்குரல்கள் தமிழிற்கு தேவையான ஒன்றுதான். ஆனால் அதற்கு அவர் (ஜெயமோகன் போல) தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் முதன்மந்திரி வேசங்கள்தான் அருவருப்பானவை. மற்றும், இன்றைய தலித் படைப்பாளிகள் நுழைந்து வரும் பகுதிகள் பல, பாலியலின் வன்கதவை உடைக்கின்றனவே? சிவகாமியின் இரண்டு நாவல்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். மற்றுமொரு விசயம்- சாரு பாலியல் விடயங்களை எழுதுகிறார்தான் ஆனாலும் அவரது உள்மனம் சுத்த சுயம்புவான ஆண்மனம். பெண்ணை அவளது யோனியுடன் சேர்த்து சொத்தாக பெரிதுவக்கும் வியாபாரியின் புத்தி இவருடையது. இந்த நாவலைப் படித்து முடியும்போது நீங்களே புரிந்து கொள்வீர்கள்….”

…………..

சாரு நிவேதிதாவின் போலித்தனம் பற்றி ரோசாவசந்த் விரிவாக எழுதியுள்ளார். நான் நேரடியாக அறிந்த இரண்டு விடயங்களைப் பதிவு செய்துவிடலாம் என்று நினைக்கின்றேன். முதலாவது சாருநிவேதிதா தனது கோணல்பக்கத்தில் ஜெயமோகனின் கனடாக் கூட்டத்தின்போது கவிஞர் சக்கரவர்த்தி மேளதாளத்துடன் இந்துத்துவா அடையாளங்களுடன் வந்து ஜெயமோகனை கிண்டல் செய்திருந்தார் என்று எழுதியிருந்தார். சக்கரவர்த்தி கூட்டத்திற்கு வரும்போது நானும் இன்னும் சில நண்பர்களும் வாசலில் நின்றிருந்தோம். சக்கரவர்த்தி கைகள், முகம் போன்றவற்றில் சந்தனம் இட்டிருந்ததைத் தவிர அவர் வேறொன்றிடனும் வரவில்லை. இது குறித்த,சாரு நிவேதிதாவின் கோணல்பக்கத்தை வாசித்தபோது எனக்கே வியப்பாயிருந்தது. என்னடாப்பா நானே நேரில் கண்டனான் இந்தாள் இப்படி எழுதுகிறதே என்று. சிலவேளை நான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த பெண்களை இரசித்துக்கொண்டிருந்ததால் மேளச்சத்தம் கேட்கவில்லையோ என்று நினைத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு நண்பருக்கும் மெயில் போட்டு இப்படி ஏதாவது நடந்ததா என்று கேட்டேன். நான் பெண்களை இரசித்துக்கொண்டிருந்தாலும் சக்கரவர்த்தியின் வரவையும் அவதானித்திருக்கின்றேன் என்பதற்குச் சாட்சியாக நண்பரும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது சம்பவம். சாரு நிவேதிதா தனது கோணல்பக்கத்தில் குறிப்பிட்டிருந்த கனடாத் தோழி பற்றியது. தற்செயலாய் ஒரு நிகழ்விற்கு (இலக்கியம் சம்பந்தமானது அல்ல) சென்றபோது அறிமுகமாகி அவரது பெயர் ஏதோ என் மூளையில் க்ளிக்காக நீங்கள் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராய் என்று கேட்க, வாசிப்பேன் என்று சொன்னபோது, உங்களையா சாருநிவேதிதா குறிப்பிட்டு எழுதினார் என்று வினாவ, கொஞ்சம் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். பிறகு அவ்வபோதைய தொலைபேசி/நேரடி உரையாடல்களின்போது, சாரு நிவேதிதாவுடனான நட்பு பற்றி தானாகவே கூறத்தொடங்கினார். அண்மையில் கூட ட்சூனாமி நிதிசேகரித்தலின்போது எங்களுடன் வந்திருந்தார். அந்த தோழிபற்றி சாருநிவேதிதா தனது பத்தியில் எழுதியபோது 6-7 மணித்தியாலங்கள் தொலைபேசியில் தொடர்ந்து கதைத்தது என்றெல்லாம் கூறியதாய் ஞாபகம். ஆனால் தோழி சொன்னதோ ஆகக்கூடியது 1 அல்லது 1 1/2 மணித்தியாலங்களே பேசியது என்று.

…..

கதைகளில் நாவல்களில் எதையும் புனைந்துகொள்ளலாம். உண்மை சம்பவங்கள் என வாசகரை நம்பவைத்து தனது பங்கிற்கு கற்பனையை எல்லாம் சாருநிவேதிதா கலந்தடிப்பதை எப்படியென்று சொல்வது?

சாரு நிவேதிதா….இன்னும் கொஞ்சம்!

Filed under: வாசிப்பு — டிசே தமிழன் @ 12:52 am

January 19, 2005

சில பிதற்றல்கள், கோபங்கள், விரக்திகள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:35 am

நேற்று நான் தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, ஒருவருடைய வலைப்பதிவில் இவ்வளவு காலமாகவும் இணைக்கப்பட்டிருந்த எனது பக்கத்திற்கான இணைப்பு நீக்கப்பட்டிருந்தது. இது குறித்து எனது முந்தைய பதிவில் பின்குறிப்பில் முதலில் இப்படி எழுதியிருந்தேன்.

பி.கு:ஒருவர் ஏற்கனவே எனது blog addressஐ தனது வலைப்பதிவில் சேர்ந்திருந்தார். இன்று தமிழ்ப்பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அந்த link அகற்றப்பட்டிருந்ததைக் கண்டேன்.என்ன காரணமாய் இருக்கும் என்று யோசித்தபோது இறுதிப்பதிவில் எழுதப்பட்ட, வன்னி, செஞ்சோலை, புலிகள் தான் காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். ம்… புரிந்துகொள்கிறேன்.

என்று பதிவிட்டபின், இப்படி எத்தனைபேரை பார்த்திருக்கின்றேன் என்ற அலுப்பில் அதை நீக்கிவிட்டிருந்தேன். இப்போது நண்பர் ஒருவர் தந்த, சென்ற வருட நடுப்பகுதியில் நடந்த விவாதத்தின் இணைப்புக்களை வாசித்தபோது எனது இணைப்பை நீக்கிய இந்த நபரும் அந்த விவாதத்தில் பங்குபற்றி தனது ‘அறிவுஜீவித்தனமான’ கருத்துக்களை எழுதியிருந்ததைக் கண்டேன். அண்மையில் கூட, நீங்கள்(ஈழத்தமிழர்) நாய்கள்தான் ஆனால் ட்சூனாமியில் அடிபட்டுவிட்டியள் இந்தா பிச்சை என்ற மாதிரி ஒருவர் எழுதியிருந்ததைக் கடுமையாக நிராகரித்திருந்திருந்தேன். வியப்பாயிருந்தது என்ன என்றால், இந்த ஆசாமிதான் கடந்த வருடத்து விவாதத்தில் அப்படிப்போடு என்று மற்றவர்களை உசுப்பேத்தியவர் (எல்லா NRIகளும் புலி/ஈழ ஆதரவில்லை என்று நெத்தியடியாக சொன்னீங்களே என்று முதுகுசொறிதல் வேறு)பெயரிலி ஏற்கனவே ஆழமாய் அடிபட்டிருந்தாலும் திறந்த மனதோடு இந்த நபர்பற்றி எதுவும் கூறவில்லை. எனக்கு இந்த நபரின் எழுத்துக்களை வாசிக்கும்போதே(ஈழ நிலைப்பாடை வைத்து மட்டுமல்ல) இவர் எப்படிப்பட்டவர் என்று ஏற்கனவே ஒரளவிற்கு புரிந்திருந்தது.

அந்த விவாதத்தை வாசித்தபோது, தமிழகத்தமிழர்களில் இப்படியும் சிலர் இருப்பார்களா என்று ஒருகணம் என்னை அதிர்ச்சியுள்ளாக்கியது. ஈழப் பிரச்சினை/புலிகள் என்ற பிரிவைக்கூடப் புரிந்துகொள்ளாது இருப்பின் பரவாயில்லை. ஆனால் சகமனிதனைக்கூடப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ஒற்றைப்படையாக விவாதத்தின் எல்லைகளை மீறிப் பேசியது கோபத்தையும் விரக்தியையும் ஒன்றாய் என்னுள் ஏற்படுத்தியது. புலிகள்/ஈழப்பிரச்சினை பற்றி எத்தனை பேரிடம் நேரிலும், இணையத்திலும் விவாதிக்கிறேன்.அவர்களின் பலர் புலிகளால் பிரியமானவர்களை இழந்தவர்களாய், புலிகளால் தேடப்பட்டு தப்பி வந்தவர்களாய், இன்னும் பல விதங்களில் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவரிடமும் இருந்து இப்படியான வன்மமான சொற்களை, வசையான சொல்லாடல்களைக் கேட்டதில்லை. பெயரிலி, நான், ரோசாவசந்த் என்று இன்ன பிறர் இப்படியான விவாதங்களில் (முக்கியமாய் பதிவுகளில்) பங்குபற்றியிருக்கிறோம். நாங்கள் பலர் எதிரெதிரர்ய் விவாதித்தபோதும் ஒரு அளவிற்கு மேல் தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்கியதில்லை. சென்ற வருடத்து விவாதத்தில்,பெயரிலி இந்தளவிற்கு கீழிறக்கப்பட்டபோதும் (இதன்பின் தான் இனி விவாதங்களில் பங்குபற்றுவது இல்லை சொல்லியிருந்தார் என்று நினைக்கிறேன்) ஒரு சில தமிழ்நாட்டு நண்பர்களைத் தவிர மற்றவர்கள் கருத்துச் சொல்லாததைப் பார்க்கையில் கவலையாகக் கிடந்தது.

…..

கிட்டத்தட்ட இந்தக் காலகட்டப்பகுதியில் நான் ஈழம், தமிழ்நாட்டுக்கு பயணித்துக்கொண்டிருந்தேன். தமிழ்நாட்டு அனுபவங்கள் பற்றி விரிவாக எழுத ஆர்வம் இருக்கிறது. அங்கே நான் சந்தித்த மனிதர்களுக்கும் இங்கு விவாதத்தில் பங்குபற்றி அறிவுஜீவிகளுக்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது என்பதை மட்டும் இங்கே குறித்துக்கொள்ளுகிறேன்.

….

போரே வாழ்வாய், தினமும் செல்லடி, கிபீரடி, இடம்பெயர்வு என்று வாழ்ந்த ஈழத்தமிழர்களின் வார்த்தைகளில் சிலவேளைகளில் கடுமை தெரியலாம். ஒரு இயல்பான வாழ்வு/மனநிலை அமைய இந்த வாழ்க்கைக்காலமே போதாது போன்றதுதான் பல புலம்பெயர்ந்தவர்களின் மனநிலை. எங்கள் கருத்துக்கள்/படைப்புக்கள் தமிழ்நாட்டு தலித்துக்கள் போலத்தான் வெளிப்படும். அதை ஓரளவு புரிந்துகொள்பவர்களால்தான் (பரிதாபம் மற்றும் ச் கொட்டல் அல்ல நான் குறிப்பது) நாங்கள் சொல்லவருவதைப் புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்.

….

துப்பாக்கி கூட ஒரு முறைதான் கொல்லும். சில நாட்களுக்கு முன் கூட அப்படியான சம்பவத்தை என் வீட்டுக்கருகில் சந்தித்த துயருடன் நான் சொல்கிறேன். அதைவிட அதிகம் பயப்பிடும்படியாகவும் கொடூரமாகவும் இருப்பது இப்படியான அறிஜீவிகளின் மூளைகளே இந்தக்கணத்தில்.

Next Page »

Powered by WordPress