DISPASSIONATED DJ

December 30, 2004

YOU GUYS MAKING ME F** SHIT WHEN I READ YOUR NEWS

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 10:13 am

THIS IS WHAT HAPPENING IN EELAM AND THE OVERSEAS

Sri Lanka Against Direct Relief Aid to Tamil Rebels

…Prime Minister Mahinda Rajapakse said he had ordered the government to dispatch relief funds and aid supplies equally to all provinces – including the north under rebel control.But an official of an international aid agency reported today that Sinhalese mobs were blocking relief trucks from reaching the frontier, diverting the supplies to their own hard-hit communities.At least four trucks were stopped by a low-ranking government official from crossing into the Tamil zone, said the official…

http://news.scotsman.com/latest.cfm?id=3938318

————————————————————————————————
An appeal to the international news media

….While the international news media from BBC to CNN to FOX has been fairly covering most of the areas of devastation: Indonesia, Thailand and India, when they cover Sri Lanka, they only report about Southern Sri Lanka: primarily Colombo and Galle. However, Southern Sri Lanka only makes up 1/4 of the 21,715 death tolls…

http://www.tamilcanadian.com/pageview.php?ID=2810&SID=487

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:23 am

இறுதியாய் கிடைக்கும் செய்திகளின்படி வடகிழக்குப்பகுதியில் அம்பாறையில்தான் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது. எம் கையே எமக்கு உதவி என்று அனுப்பப்படுகின்ற உதவிகள் கூட திசை திருப்பப்படுகின்ற செய்திகள் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போலவிருக்கிறது.

……..

ஆரம்பத்தில் திருகோணமலைக்கு அனுப்பப்படவிருந்த நிவாரணப்பொதிகளுடன் இருந்த கப்பலை திசைதிருப்பிய முயற்சி இறுதியில் தமிழ் எம்பி ஒருவரால் முறியடிக்கப்பட்டது. இன்று கூட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு மலையகத்திலிருந்து உதவிகளுடன் சென்ற லொறிகளை இராணுவம் தாங்கள் சொல்லும் இடங்களுக்குத்தான் அனுப்பவேண்டும் என்று கட்டளையிட்டதாக வானொலிச்செய்திகள் கூறுகின்றன. எனது உறவினர் இரண்டு லொறிகளை நிவாரணப்பணிகளுக்காய் கொழும்பில் மாணவர்களிடம் கொடுத்திருக்கின்றார். அதில் ஒரு லொறியை பொதிகளுடன் காலிக்குச் செல்லவேண்டுமென அரசாங்க அதிகாரிகள் கட்டளையிட்டிருக்கின்றார்கள். அத்துடன் இரண்டு நாட்கள் தொடர்ந்து ஓடிய லொறிகளை (கொடுத்தவர் இலவசமாகத்தான் சேவைக்கு கொடுத்தார்) சிங்கள விதானைமார்கள் தங்கள் பெயரில் பதிந்து அதற்கான கட்டணங்களை அறவிட்டிருக்கின்றார்கள். இன்னும் உதவிகள்/நிவாரணங்கள் எதுவுமே பாதிக்கப்பட்ட மக்களை எட்டவில்லை என்றுதான் அங்கிருந்து பேசும் நேரடியாகப்பேசும் மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அம்பாறையில் சிங்கள மக்கள்/முஸ்லிம் மக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அங்கே உதவிப்பொருட்களை அனுப்பினால் அது தமிழ் மக்களுக்கும் போயிவிடும் என்ற பயத்தில் பலவிதத்தில் இனவாதிகள் இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பதாய் புலிகளின் குரலிலும் கூறினார்கள். இடையிடையில் நம்பிக்கையூட்டும் சின்ன விசயங்களும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. குருணாகலிலிருந்து சிங்கள மக்கள் தங்கள் உதவிக்கரத்தை திருகோணமலைக்கு நீட்டியிருக்கின்றார்கள். உதவிய ஒரு சிங்களவர் சொன்னார், முந்தி எங்களுக்கு வெள்ளப்பெருக்கின்போது புலிகளும் வன்னிமக்களும் உதவினார்கள். அதை நாங்கள் நன்றியுடன் மனதில் இருத்தி வைத்திருந்தோம். இது நாங்கள் உதவுவதற்கான அரிய தருணம் என்றார்.

……………

இன்று வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தபோது ஒரு கிறிஸ்தவ sister யாழிலிருந்து நேரடியாகப் பேசியிருந்தார். அவர் கற்பித்த பாடசாலை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. கற்ற மாணவர்களில் பத்திற்கு மேற்பட்ட சிறார்கள் இறந்திருக்கின்றார்கள். பேசுவதற்கு சற்றுமுன்கூட ஒரு சிறுமியைப் புதைத்துவிட்டுத்தான் பேசினார். அவர் வானலையில் சொன்ன இரண்டு விசயங்கள் முக்கியமானது. போர் என்றாலும் ஆகக்குறைந்தது கொஞ்ச உடுப்புக்களையும் கையிலிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டாவது ஓட முடியும். ஆனால் இந்த அழிவு அப்படிப்பட்டதல்ல. பல ஆயிரம் மக்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டிருக்கிறார்கள், உயிரைத்தவிர. மரங்களில் தப்பியிருந்த பலர் ஆடைகளில்லாது கூட பல மணித்திலாயங்கள் இருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். எனவே புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவர்களுக்கான உடனடித்தேவைகளை மட்டும் நிறைவேற்றுவதோடு மட்டுமில்லாமல், அவர்களது எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளையும் செய்யவேண்டும் என்று கேட்டிருந்தார். காயப்பட்டு மற்றும் தப்பியிருக்கும் அநேகர், எல்லாப் போய்விட்டது. இனி என்ன செய்வது?’ என்ற மனப்பிறழ்வுடன் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மற்றது இந்த அனர்த்தத்தில் அதிகம் இறந்துபோனது குழ்ந்தைகள் மற்றும் சிறார்கள். இதனால் எங்கள் பிரதேசங்களிள் ஒரு generation gap வரும் அபாயம் வருமென்று கூறினார். உண்மைதானே.

……..

இங்கும், CNN னிலிருந்து CBC (Canadian Broadcasting Cooperation) வரை எல்லோருக்கும் இலங்கையில் பாதிப்படைந்தது தெற்குப்பகுதி மட்டுந்தான். எல்லா video clipsம் அதைத்தான் காட்டுகின்றன. இது குறித்து CBC தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஒரு பெண்மணி நேரடியாக அழைத்துக்கேட்டபோது, தங்களால் அங்கே போகமுடியாதுள்ளதால், வடகிழக்குப்பிரதேசங்களின் பாதிப்புப் பற்றி எதுவும் அறியமுடியாதிருக்கின்றது என்று கூறினார்களாம். அழைத்த பெண்மணியும் சளைக்காமல், நாங்கள் video clips எடுத்துத்தந்தால் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டபோது கிடைத்தால் செய்கிறோம் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்னரே தமிழ் தொலைக்காட்சியினரால் video clips & information எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டதாம். என்ன செய்வது இயற்கை மட்டுமல்ல, aftermathம் எங்களுக்குச் சதி செய்துகொண்டுதானிருக்கிறது.

……..

ஒன்று மட்டும் புரிகிறது. எமக்கென்றொரு சட்டரீதியான அரசாங்கம் இல்லையென்றால் எவருமே எங்களைக் கவனிக்கப்போவதில்லை என்பதே. இன்னும் தெற்குப்பகுதியில் நடைபெறும் சம்பவங்கள், தமிழ்-சிங்கள உறவை மேம்படுத்துவதற்கு பதிலாக இன்னும் விரிசலடைவதற்குத்தான் வித்திடுவதாய் தோன்றுகிறது.

December 29, 2004

துயரில் மூழ்கிய பொழுதுகள்

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 11:23 pm

HELP!!!

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:20 am

people who are willing to help…

http://www.geotamil.com/pathivukal/notice_tsunami_fund.html

http://kavithai.yarl.net/archives/002482.html

(thanx to pathivukal.com & EelaNathan)

December 28, 2004

HELP!!!

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 11:20 pm

people who are willing to help…
http://www.geotamil.com/pathivukal/notice_tsunami_fund.html
http://kavithai.yarl.net/archives/002482.html
(thanx to pathivukal.com & EelaNathan)

December 27, 2004

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 12:04 am

இயற்கை எங்களையும் பழிவாங்கியது. உயர்ந்துகொண்டிருக்கும் உயிரிழப்புக்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகம் என்ற செய்தி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இந்த நிகழ்வு இரவில் நிகழ்ந்திருந்தால் இன்னும் அதிகமாய் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அங்கிருந்து கதைப்பவர்கள் சொல்கிறார்கள். இலங்கை அரசாங்கமும், புலிகளும் அவசரகாலத்தை பிரகடனப்படுத்தி மீட்புப்பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். அதிகமான உயிரிழப்புத் தவிர்க்கப்பட்டிருக்கலாம் சொல்லிக்கொண்டிருப்பதைவிட அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதே முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அத்தியாவசிய தேவைகளும், ஆறுதல் வார்த்தைகளுமே இந்தக்கணத்தில் தேவையானது.

……….

பல இடங்களில் சிறுவர்கள் பலியாகிப்போனது நெஞ்சை உருக்கவைப்பவை. மட்டக்களப்பு மாகாணத்தில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நாற்பது பிள்ளைகளைக் காணவில்லையாம். அதைவிடக் கொடுமை, முல்லைத்தீவில் பெற்றோரில்லாத பிள்ளைகளைப் பராமரிக்கும் செந்தளிர் இல்லத்தில் நூற்றியெழுபதிற்கும் மேற்பட்ட பிள்ளைகள் அதைப் பராமரித்த ·பாதருடன் காணாமற்போய்விட்டனர். பத்து இருபது சிறுவர்கள் தப்பியிருக்கலாம் என்று கடைசியாக ஒருவருடன் கதைத்தபோது சொன்னார். மட்டக்களப்பு மாகாணம்தான் மிகக்கோரமாய் சிதைந்து போயிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏற்கனவே வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தப்பெரும் அனர்த்தம் எதுவுமே இல்லாதவர்களாக்கிவிட்டது. அங்கிருந்து பேசிய ஒருவர் கூட, கனடாவிலிருந்து ஏற்கனவே வெள்ளப்பெருக்கிற்காய் வந்து நிதியில் லொறியில் ஏற்றிய நிவாரணப்பொதியை இந்த அழிவில் சிக்கிக்கொண்டவர்களுக்காய் பாவிக்கப்போவதாய் சொன்னார். ஒருநாள் முழுதும் உண்ண எந்த உணவுமின்றி மக்கள் தவிர்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் வானொலியொன்றில் கூறினார்.தொலைபேசிகளில், வானொலிகளில் அங்கிருந்து வந்து விழும் கதைகள் நினைத்தே பார்த்து முடியாதன.

……….

எனது அக்கா கொழும்பில் வசித்து வருகிறார். அவரது வீடு கடற்கரையோரமாய் தானிருக்கிறது. வீடு, பிறகு ஒரு தண்டவாளம் அதற்கடுத்து பெருங்கடல். அக்காவின் வீட்டிலிருந்த ஒரு பெண், இந்த பெரும் கொடும் அலையை (30 அடிக்கு மேலேயென்கின்றனர்) கண்டிருக்கிறார். திடீரென தண்ணீர் வற்றி (கடலின் ஆழத்திலுள்ள கற்கள் எல்லாம் தெரிந்ததாம்) பெரும் அலைகள் பனையளவு உயரத்திற்கு எழும்பியது என்றார். இன்னும் எமது உறவினர் ஒருவரின் வான் (அவர் டிரைவர் வைத்து யாழ்-கொழும்பு சேவை செய்பவர்) யாழ்ப்பாணத்தின் (அல்லது முல்லைத்தீவின்) கடற்கரையோரமாய் நின்றபோது அதில் இருந்த அனைவரும் வானோடு கடலிற்கு அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போய்விட்டனர். டிரைவர் தற்செயலாய் வெளியில் நின்றதால் கடலோடு இழுத்துப்பட்டாலும் நீந்தித் தப்பி வந்து இதைச் சொல்லியிருக்கிறார். இப்படி இன்னும் எத்தனையோ கதைகள்? புலிகளின் கட்டுப்பாட்டில் அதிகம் சேதத்திற்குள்ளானது முல்லைத்தீவுக் கடற்கரையோரம். இதுவரையே உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டிவிட்டிருக்கின்றது. இன்னும் வெளிநாடுகள் கொடுக்கும் எந்த உதவியையும் புலிகளின் கட்டுப்பாடுகளுக்கு வரவில்லை/வராது என்று அங்கிருந்து வரும் குரல்கள் மேலும் கவலையை அதிகரிக்கின்றது.

……..

இங்கேயிருந்து கொண்டு என்ன இழவைச் செய்வது? விடிகாலையில் எழும்பி செய்தி கேட்டபின் பிறரைப் போல எனது அண்ணாக்களுடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட பணத்தை வானொலிக்கு கொடுத்தோம். (வானொலிக்காரர்கள் உடனடியாக நிதியைச் சேகரித்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்

கொண்டிருக்கிறார்கள்). பிறகு, பல்கலைக்கழக/உயர்கல்லூரி மாணவர்கள் அவசரமாய் ஒரு கூட்டத்திற்கு வரச்சொல்ல சென்றிருந்தேன். ஒவ்வொரு குழுவாகப் பிரித்து, சில வேலைத்திட்டங்களைச் செய்வதாய் முடிவெடுத்தோம். முதலில் media குழுவில் நான் இருந்தபோதும், உடனடியாக வேறெதாவது செய்வது நல்லது என்று நிதிசேகரிக்கச் சென்ற குழுவோடு இணைந்து கொண்டேன். அவசரமாக எந்த வசதிகளும் இல்லாமல், எல்லா இனத்தவரின் வீடுகளைத் தட்டி இயன்றளவு நிதியைத் திரட்டிக்கொள்வதே எங்களின் இலக்காக இருந்தது. பயங்கரமாய் ஸ்நோ கொட்டிக்கொண்டிருக்க, வீதியில் கார் circus விளையாட்டுக்காட்டியது. இதை எல்லாவற்றையும் விட அங்கிருந்த மக்களின் துயரும், எல்லாவற்றையும் உதறிப்போட்டுவிட்டு உதவுவதற்கு வந்த தோழர் தோழிகளின் விரிந்த மனதும் எதையாவது செய்யவேண்டும் என்ற உத்வேகத்தைத் தந்தது.. எம்மைப்பார்த்துப் பூட்டிய கதவுகள் எத்தனை? நீங்கள் யார் என்ன அடையாளம் உங்களிடம் உள்ளது என்று கேட்டு எங்களின் பொறுமையைச் சோதித்த மனங்கள் எத்தனை? அனுமதியில்லாமல் வீட்டைத்தட்டியதால் பொலிசிற்கு அடிப்போம் என்று பயமுறுத்தியோர் எத்தனை பேர்? இதையெல்லாம் மீறி ஏதோ இராமர் பாலம் கட்ட உதவிய அணிலைப்போல நாங்களும் ஏதோ செய்தோம் என்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தேன். நாளைக்கும் வருவதாகவும் இன்னும் அதிகமாய் நிதி சேகரிக்கவேண்டும் என்ற கனவும் எங்களில் பலருக்கு உண்டு.

December 26, 2004

யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 11:04 pm

THE BLACK SUNDAY

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 9:02 am

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்.

THE BLACK SUNDAY

Filed under: பாதித்தவை — டிசே தமிழன் @ 8:02 am

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்.

December 25, 2004

தோணிகள் வரும் ஒரு மாலை

Filed under: Uncategorized — டிசே தமிழன் @ 6:25 pm

இசைத்தட்டு வெளியீட்டு விழாவும், அரங்கினுள் குளிர் நுழைந்த கதையும்

தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டு வெளியீட்டு விழா மாலை ஐந்து என்று போட்டிருந்தனர். நல்ல நித்திரையிலிருந்த நான் அரக்கப்பரக்க எழுந்து ஐந்து மணிக்கு கிட்டவாக விழா நடக்கும் இடத்திற்கு சென்றுவிட்டேன். இங்கே நடக்கும் விழாக்கள் எப்போதும் அரை மணித்தியாலம், ஒரு மணித்தியாலம் ஆரம்பிப்பது சம்பிரதாயம் என்றாலும், நான் இந்த விழாவிற்கு நேரத்திற்கு ஒரு காரணமிருந்தது. எனென்றால் முந்தி ஒருக்காய் புத்தக வெளியீடு ஒன்றிற்கு கொஞ்சம் தாமதாய் போக புத்தகம் எல்லாம் விற்று தீர்ந்திருந்தது. ஆனால் அதிசயமாய் புத்தக வெளியீடை இன்னும் நடத்தப்படாமல் இருந்தது. என்னடா இதுவென்று வரவேற்று கொண்டிருந்தவரிடம் கேட்டபோது, ‘ஏன் எல்லாம் சம்பிரதாயமாய் இருக்கோணும்? புத்தகவெளியீட்டிற்கு பிறகுதான் புத்தகம் வெளியிடோணும் என்று ஏன் நினைக்கிறியள்?‘ என்று போட்டுத்தாக்கினார். ‘சரி நீங்கள் சொன்னால் சரியாகத்தான்’ இருக்குமென்று அவரிடம் சொல்லி அமைதியாகிவிட்டேன். அந்த அனுபவத்தால் இந்தவிழாவிற்கு கொஞ்சம் பிந்திப்போனாலும் இசைத்தட்டு விற்று முடிந்துவிடுமோ என்று பயத்தில் நேரத்திற்கு போயிருந்தேன். இவர்களும் சம்பிராதயத்தை உடைப்பவர்கள் என்ற என் எண்ணத்தை ஒரு மணித்தியாலம் பிந்தித் தொடங்கி, நாங்கள் typical தமிழாக்காள், நீயன்டும் பயப்பிடத்தேவையில்லை என்று நிரூபித்துவிட்டினம். இப்ப நிகழ்ச்சிகளுக்கு போக சரியாய்ப் பயமாயிருக்கிறது. வரும் மனிதர்கள் எல்லாம் இறுக்கமாய் உட்கார்ந்து இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தங்கள் கூட்டணியாக்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள். சிலருக்கு வெங்கட்சாமிநாதனைப்பற்றி பதிவுகளில் நானெழுதியது மனவருத்தம் போல. வழமையாய் சிரித்துப்பேசும் ஒருவர் சுவரோடு ஒதுங்கிக்கொண்டார். இன்னொருத்தரிடம் அவரிடம் படைப்புக்களை பேசுக்கொண்டிருக்கும்போது உட்காரப்போறன் என்டார். சரியென்று அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கதைக்க, சரியாய் குளிராய்க்கிடக்கிறது என்று முன்னுக்குப்போனார். மனுசனுக்கு குளிருது போல இருக்கிறது என்று நானும் முன்னுக்கு போய் உட்கார்ந்தேன். பிறகும் தம்பி இதிலையும் குளிராய்க்கிடக்கிறது என்று சொன்னபோது, என்னடாப்பா நான் Jacket கழட்டிப்போட்டிருந்தே குளிரவில்லை. இந்த மனுசன் Jacketயோடு இருந்தும் குளிருது என்கிறதே எண்டு யோசித்தேன். பிறகுதான் என்ரை ஆறாம் அறிவு (?) விழித்துக்கொள்ள, அண்ணை இலக்கிய அரசியல் ஆடத்தொடங்கிறார் என்று புரிந்துவிட்டது. நாளைக்கு இந்தவிழாவைப்பற்றி ஏதாவது எழுத, யாராவது பக்கத்தில் இவர்தான் உட்கார்ந்திருந்தார் என்று சொன்னால் அவருடைய இமேஜ் என்னாவது? சரி நீங்கள் போய் முன்னுக்கு இருங்கோ. நான் கனநேரம் நிற்கமாட்டேன். CDஐ வாங்கிக்கொண்டு போய்விடுவன் என்று சொல்லி பின்னாலிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டேன். எவ்வளவு வயதுபோனாலும், தனிமனித நட்பையும், இலக்கிய விமர்சனத்தையும் பிரித்துப்பார்க்க பலரால் முடிவதில்லை. உண்மையில், வெங்கட்சுவாமிநாதனின் விருதிற்கு பின்பான சுந்தர ராமசாமியிற்கும் வெங்கட்சாமிநாதனுக்கிடையிலான விவாதம் மிகுந்த கவலையைத் தந்தது. வெ.சா ஒருகட்டத்தில் சொல்லியிருந்தார், சுராவை இனி சுந்தரராம்சாமி என்று கூட அழைக்கமுடியாது என்று. எதற்கு நட்பையும் இலக்கிய விமர்சனத்தையும் ஒன்றாக கலக்கின்றனர் என்று யோசித்தேன். எத்தனை காலமாக பேணிய நட்பை ஒரு விருதிற்கான விவாதத்தில் தொலைத்துக்கொண்டு இருவேறு துருவங்களாகிவிட்டனர்.

சரி விசயத்திற்கு வருவோம். தோணிகள் வரும் ஒரு மாலை இசைத்தட்டில் 12 பாடல்கள் இருக்கின்றது. ஏற்கனவே இதற்கு இசையமைத்தும் பாடிய ராஜ் ராஜரத்தினம் கண்ணீரும் குருதியும் காத்திருப்பும் என்ற இசைத்தட்டை சிலவருடங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். இது இவரது இரண்டாவது வெளியீடு. 12 பாடல்களில் 9 பாடல்கள் சேரனுடையது. ஏனைய மூன்றில், இரண்டு வ.ஜ.ச.ஜெயபாலனுடையது. ஒன்று செழியனுடையது. பாடல்களைக் கேட்கும்போது ஜெயபாலனுடைய பாடல்கள் இலகுவாய் பாடுதற்குரியதான ஒருவிதமான இலயத்தில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது( அவருடைய கவிதைகளில் எல்லாம் இப்படியான ஒருபண்பு இருப்பது அவர் இன்னும் மரபுக்கவிதை முறையை முழுமையாக அறுக்கவிரும்பாமல் இருப்பதால் இருக்கக்கூடும்). ஜெயபாலனுடைய பாடல்களில் ஒருவித குதூகலமும், தவறுகளை இழைத்தும், வருந்தியும், குறும்புசெய்தும் வாழ்வில் நகர்ந்துகொள்ளும் மனிதமனத்தைக் காணலாம். சேரனுடைய பாடல்கள்/கவிதைகள் அப்படியில்லை. ஒரு வித அறிவுஜீவித்தனத்துடன் (‘எல்லோரையும் போல அந்த நேரத்தில் நீ அழவில்லை’, ‘நான் தரையில் வாழும் பறவை அல்ல/நான் உனக்கும் அல்ல’) என்று சோகம் நிரப்பிக்கிடக்கும் பொழுதிலும் உணர்ச்சிவசப்படுவதேயில்லை. இந்த இசைத்தட்டில் இரண்டாம் பாடலான ‘காற்றோடு போனதெல்லாம்’ சேரனின் புலம்பெயர்வாழ்வை சொல்வது போலப்பட்டது. ‘வேற்றவர் நாட்டுக்குள்ளே/வெறென்ன கிடைக்குமென்று/தீட்டிய பாடலொன்று/ தெருவோரம் முழங்கக்கேட்டேன்’ பாடலில் புலம்பெயர்ந்த ஒரு கவிஞனின் நம்பிக்கையீனம் மற்றும் நம்பிக்கை தெரிகிறது. தமிழை வாழ்த்தியும் சேரனின் ஒருபாடலுண்டு. தமிழை வாழ்த்திப்பாடும்போது, எப்படியென்றாலும் பாரதியின் தாக்கம் எல்லாக் கவிஞர்களுக்கு வந்துவிடுகிறது. ‘பூமியின் அழகே/ பரிதியின் சுடரே/ பொறுமையின் வடிவே/தமிழே’ என்று பாடல் ஆரம்பிக்கும்போது பாரதியும் உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுகிறார். இன்னும், ‘எங்கும் அலைந்து திரிந்து கிடப்பினும்/ ஏதிலி வாழ்வில் உதிரம் வடிப்பினும்/எங்கள் மொழிக்கொரு புதுவளம் சேர்ப்போம்/எண்ணமெல்லாம் தமிழென வாழ்வோம்’ என்கின்றபோதும், வேற்று நாடுகள் சென்றெனினும் தமிழுக்கு வளங்கள் சேர்ப்பீர் என்று பாரதியின் ஏக்கம் நினைவிற்கு வந்து விடுகிறது. ஒருவிதமான் பைலா பாடலும் உண்டு. ஆடுங்கள் ஆடுங்கள் என்று எல்லா வசனமும் முடிகிறது. இப்போதைக்கு கேட்கும்போது சாதாரமாய்த்தான் தெரிகிறது. இதிலை சேரனின் எழுதுகோல வைரமுத்து வந்து உட்கார்ந்தது மாதிரித்தெரிந்தது. பாடல் ஆடக்கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று Molson Canadian குடித்து கேட்டபின் சொல்கிறேன். எவடம் எவடம் என்ற பாடலும் சாதாரண வகைப்பாடல். இது சேரனின் நாடகப்பிரதியான, ஊர்ப்போக்கில் இணைக்கப்பட்ட பாடல் என்று பிறகு கேள்விப்பட்டேன். சாதியைப்பற்றித்தான் சாடைமாடையாகச் சொல்கிறது. எப்பதான் சேரன் தன் ஞானக்கண்ணைத் திறந்து சாதி பற்றி பேசப்போகிறாரோ தெரியாது. கவிஞர் எல்லாவற்றையும் எழுதவேண்டுமா என்று யாராவது கேட்கக்கூடும்? ஆனால் ஆரம்பத்திலிருந்தே ‘பேரிளம் பெண்களின் காதலனாகவே கழிந்த இவ்வாழ்வில்’ என்று எழுதி, இந்த இசைத்தட்டிலும் ‘முற்றாத காதலோடு முழுமையத் தேடுகிறேன்’ என்று காதலை PhD அளவில் வெட்டிக்கொத்தி ஆராய்ச்சி செய்பவர் மற்ற விசயங்களுக்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவழிக்கலாம் என்பது என்னுடைய நினைப்பு.

ஜெயபாலனுடைய இரண்டு பாடல்களும் மனதில் சட்டென்று அமர்ந்துகொள்கின்றன. ஒரு பாடலின் ஆரம்பமே, ‘கால மகள் மணலெடுத்து/ கோலமிட்ட கடற்புரத்தில்/ஏழைமகள் ஒருத்தி… என்று பாடலுக்குரிய அமைவுடன் வார்த்தைகள் வந்துவிழுகின்றன. வாழ்வின் துயரம் இலகுவான சொற்களில் பாடப்பட்டாலும் மனதை நிரப்புகிறது. ‘தானாய் விடிவெள்ளி/ தோன்றுகின்ற சங்கதிகள்/வானத்தில் மட்டும்/ வாழ்வினிலே இருள் தொடரும்’ என்ற வரிகளில் வாழ்வின் நியதி துலங்குகிறது. எனக்கு மற்றப்பாடல்தான் நன்கு பிடித்திருந்தது. மலையகப்பெண்ணின் துயரைச் சொல்லும் பாடல். ஒரு இடத்தில், தேயிலை கொய்யும் பெண்ணின் கண்ணீர்தான் மகாவலியாய் பெருக்கெடுக்கிறதோ என்கின்றமாதிரி அருமையான உவமையுடன் வரும். இன்னும், ‘யாழ்ப்பாண செம்மண்ணில் புல்லறுக்கும் தேவதையே/ வன்னியிலே காடழித்து வயல் விளைக்கும் அருந்ததியே/ மீன்பாடும் தேனாட்டின் தெம்மாங்கு ஊர்வசியே/ மலையகத்து தேவதையே பேரணியில் வாரீரோ!’ வரிகளில் கவிஞரின் நுண்ணிய அவதானங்கள் கேட்பவரின் மனதிலும் எட்டிப்பார்க்கிறது. செழியனின் ‘மழை பெய்த நாளொன்றில்’ பாடலின் துயர் பெருக்கெடுத்தோடுகிறது. விட்டு வந்த சொந்தமண்ணையும், வேரைப் பதிக்கமுடியாத அந்நியநாட்டிலுமான வாழ்வின் கொடுங்கனவை இந்தப்பாடல் பேசுகிறது. ‘துயரங்கள் போவேன்று நிலம் விட்டு நிலம் வந்தும் துயராய் வழிகின்றதே/ பெருந்துயராய் வழிகின்றதே/ வாழ்வு துயராய் வழிகின்றதே’. நம்மில் பலருக்கு இதுதானே யதார்த்தம்.

மற்றபடி ராஜ் ராஜரத்தினத்தின் உழைப்பு மதிக்கப்படவேண்டியது. ‘எங்களுக்கென தனித்துவமான இசை வடிவங்களை உருவாக்கிற ஒரு பெரும் முயற்சியில் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது’ என்ற அவரது ஆதங்கத்தைப் புரிந்து அவரை நாமும் உற்சாகப்படுத்துவோம். இரண்டாவது இசைத்தட்டில் நிறைய சினிமா முன்னணிப்பாடகர்கள் பாடியிருக்கின்றனர். இது பலமா பலவீனமா என்பதை காலத்தை தீர்மானிக்கவிடுவோம். முதல் இசைத்தட்டில் சொன்ன, ‘ஒரு வழிப்பாதையாக இருந்துவரும் ஈழ-தமிழக கலை இலக்கியப் பாலம், இரு வழிப் பாதையாக திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகள் இடம்பெறும் இவ்வேளையில்…’ என்கின்ற வரிகளில் ராஜ் ராஜரத்தினம் போன்றவர்களின் விருப்புக்கள் எத்தனை விதம் சாத்தியப்பட்டிருக்கின்றது என்பது பற்றி அறியவும் ஆவல்.

Next Page »

Powered by WordPress