DISPASSIONATED DJ
*பால‌ஸ்தீன‌ எதிர்ப்பிசையின் இல‌ய‌ங்க‌ள்
		<description>பாலஸ்தீன எதிர்ப்பு இசை-அஹமட் ஹபீப்தமிழாக்கம்: டிசே தமிழன்திரைப்பட இயக்குநரும், நெறியாள்கையாளருமான, ஜாக்கி ரீம் சலூம், பாலஸ்தீனக் கலைகளை உலக அளவில் எடுத்துவருவதில் முக்கியமான ஒருவராக இருந்து வருகின்றார்.பாலஸ்தீன மற்றும் சிரியாப் பெற்றோருக்கு, டியபோர்ன் மிக்சிக்கனில் பிறந்த சலூமின் கலைப்படைப்புக்களில் ஒரு புலம்பெயர்ந்த அரபு இளம்பெண்ணுக்குரிய பாதிப்பு இருக்கின்றது. சலூம் தனது பதின்ம இறுதிகளில், நியூயோர்க் பல்கலைக்கழகத்திலுள்ள கலைக் கல்லூரியில் படித்திருக்கிறார்.2005ம் ஆண்டில் சண்டான்ஸ் திரைப்படவிழாவில், 'அரேபியர்களின் உலகம்' என்கின்ற ஒன்பது ...</description>
எதிர்ப்பே வாழ்வாய்…
		<description>-Aimee & Jaguar ஜேர்ம‌னிய‌த் திரைப்ப‌ட‌த்தை முன்வைத்து-ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைக‌ளையும், க‌லாசார‌ ப‌ண்பாட்டுப் பின்புல‌ங்க‌ளையும் வேறுவ‌கைக‌ளால் விள‌ங்கிக்கொள்ள‌ முய‌ற்சிக்க‌ முடியும். அத‌ற்கு ந‌ம் எல்லோருக்கும் விசால‌மாய் சிந்திக்கும் ம‌னோநிலையும், தெரியாத‌தை தெரிந்து கொள்ளும் ஆர்வ‌மும், இவ‌ற்றுக்கு ...</description>
உட‌ல‌ப்ப‌ச்சைய‌ங்க‌ள்
		<description>1.நேற்றைக‌ளின் இர‌வுக‌ளின்ஒவ்வோர் க‌த‌க‌த‌ப்பான‌ அழைப்பிலும்ப‌ச்சைய‌ம் ப‌டிந்து உருவான காடுக‌ள்...க‌ழுத்திலொரு வ‌ளைய‌ம் அணிவித்துகால‌ம் ந‌ம்மை நெருக்கிய‌போதுஎல்லா இர‌க‌சிய‌ங்க‌ளையும்தம்மோடு மூடிக்கொண்டுதுய‌ர‌த்தில் த‌ற்கொலை செய்திருந்த‌ன‌'எல்லாமும்' இருக்கின்ற‌யாரும‌ற்ற‌ ப‌னிப்பாலையில்சுழிய‌த்திலிருந்து தொட‌ங்கும் ப‌திய‌ங்க‌ள்...த‌வ‌றுக‌ளின் துரித‌க‌தியில் ஊரத்தொட‌ங்குகின்ற‌ன‌ புத்த‌க‌ப்பூச்சிக‌ள்புத்த‌க‌ங்க‌ளும் வேண்டாம் பூனாவும் வேண்டாமென‌மூர்ககமாகி அனைத்தையும் உதைத்துத்த‌ள்ளிய‌பின்கொளுத்த‌த்தொட‌ங்கினேன் புத்த‌க‌ம் + பூச்சிக‌ளை.2.இப்போது உதிர்ந்துகொண்டிருக்கும்இலைக‌ளில்பொழியும் மழைமீண்டும் கிள‌ர்த்திக்கொண்டிருக்கிற‌துக‌ன‌வுக‌ளை.'ந‌ம‌க்கான‌ க‌ன‌வுக‌ள் த‌னித்துவ‌மான‌வை'நூறிலிருந்து சுழிய‌த்துக்கு ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌விருப்புக்க‌ளின் ச‌துர‌ங்க‌த்திற்குள் நின்றொலித்திருக்கிறேன்பாம்பு வாலால் சுழ‌ற்றி வீழ்த்திய‌போதும்ஏணியில் ஏற்றிவிட‌ 'தொலைவிலொரு குர‌ல்' காத்திருந்த‌துப‌ச்சைய‌ங்க‌ளில் வ‌ள‌ர்த்த‌ந‌ம‌க்கான‌ காடு த‌ற்கொலையை நாடிய‌போதுஅத‌ன் ...</description>
சே குவேரா, சுகுமார‌ன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில‌ குறிப்புக‌ள்
		<description>உல‌க‌ அள‌வில் இன்று அர‌சிய‌ல் என்ப‌து மாற்று, எதிர்ப்பு என்ப‌வ‌ற்றை விடுத்து ஒருவித‌ பித்த‌ உற‌க்க‌த்தில் இருப்ப‌த‌ன் ப‌ய‌ங்க‌ர‌ம் அச்ச‌த்தை அளிக்கிற‌து. அற‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசுவ‌தும் அற‌ அழுத்த‌ங்க‌ளைப் ப‌திவு செய்வ‌தும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், வ‌ன்முறை என்று அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் ஒரு கால‌க‌ட்ட‌த்தில் விடுத‌லை என்ப‌து ப‌ற்றிச் சிந்திப்ப‌து ஒரு க‌வித்துவ‌மான‌ ஆறுத‌லை ம‌ட்டுமே த‌ர‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.(பிரேம் -ர‌மேஷ்: க‌ட்டுரையும் க‌ட்டுக்க‌தையும்)1.சில‌ புத்த‌க‌ங்க‌ளை அதிக‌ ஆர்வ‌த்தோடு வாசிக்க‌த் தொட‌ங்கும்போது அவ‌ற்றிலிருந்து எடுத்துக்கொள்ள‌ எதுவுமில்லையென்ற‌ ...</description>
த‌மிழ் முகாங்க‌ள் - NY Times, Editorial
		<description>த‌மிழ்ப்புலி கெரில்லாக்க‌ளை வெற்றி கொண்ட‌தாய் அறிவிக்க‌ப்ப‌ட்டு இர‌ண்டு மாத‌ங்க‌ளின் பின்னும், இல‌ங்கை அர‌சாங்க‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ த‌மிழ் ம‌க்க‌ளை இன்ன‌மும் 'ந‌ல‌ன்புரி கிராம‌ங்க‌ள்' என‌ப்ப‌டும், ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ இராணுவ‌ விசார‌ணை முகாங்க‌ளாய்த் தெரிகின்ற‌ இட‌ங்க‌ளில் த‌ங்க‌வைத்திருக்கின்ற‌து.மிக‌வும் கோரமான‌ போரின் இறுதிக்க‌ட்ட‌த்தில் கெரில்லாக்க‌ளால் பய‌ண‌க்கைதிக‌ளாக்க‌ப்ப‌ட்ட‌ இங்கிருக்கும் ம‌க்க‌ளில் அநேக‌ர், முகாங்க‌ளில் இருந்து வெளியே செல்ல‌ அனும‌திக்க‌ப்ப‌ட‌வோ, ம‌னித‌ உரிமை நிறுவனங்க‌ளாலோ அல்ல‌து ப‌த்திரிகையாள‌ராலோ அணுக‌வோ முடியாது இருக்கிறார்க‌ள். அர‌சாங்க‌ம், இங்கிருக்கும் அக‌திக‌ளிலிருந்து ...</description>
என‌க்குத் தெரிந்த‌ முருகைய‌ன்
		<description>('முருகைய‌னின் வாழ்வும் நினைவும்' நிக‌ழ்வில் வாசிக்க‌ப்ப‌ட்ட‌ க‌ட்டுரை)1.இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி நகரும்போது, சிறுவயதுகளில் படித்த பாடப்புத்தகங்களின் மூலமாக அறிமுகமாயிருப்பார் போலத்தான் தோன்றுகின்றது. ஈழத்தில் படித்த காலத்தில் பாடக்குழு உறுப்பினர்களின் பெயரில் முருகையனின் பெயர் நீண்டகாலமாய் ...</description>
*xxxxxxxxx
		<description>-மீள்ப‌திவு1.உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய் யோசிக்கத்தொடங்கும்போதே இன்னுமொரு குரூரமான உலகிற்குள் நீ நுழையத்தொடங்கிவிடுகிறாய். வாழ்வின் அபத்தங்களிலிருந்து தப்பியோடுவதால் நீதான் அவற்றிலிருந்து விலகிப்போகிறாயே தவிர, அவை உன்னைப் பின் ...</description>
‘கால‌ம்’ இத‌ழில் வெளிவ‌ந்த‌ க‌தை
		<description>ஹேமா அக்கா-இள‌ங்கோ'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்தில் கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்றொரு ...</description>
மஹ்மூத் த‌ர்வீஷ் க‌விதைக‌ள் - த‌மிழாக்க‌ம்: எம்.ஏ. நுஃமான்
		<description>உயிர்த் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போதுஉயிர் தியாகிக‌ள் தூங்க‌ச் செல்லும்போதுகூலிக்கு மார‌டிப்போரிட‌மிருந்து அவ‌ர்க‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்காக‌நான் விழித்திருக்கிறேன்நான் அவ‌ர்க‌ளுக்குச் சொல்கிறேன்:நீங்க‌ள் ஒரு புதிய நாட்டில் விழித்தெழுவீர்க‌ள் என்று ந‌ம்புகின்றேன்அங்கு முகில்க‌ளும், ம‌ர‌ங்க‌ளும், கான‌லும், நீரும் இருக்கும்ந‌ம்ப‌முடியாத‌ நிக‌ழ்விலிருந்து,ப‌டுகொலைக‌ளின் உப‌ரி மதிப்பிலிருந்துஅவ‌ர்க‌ள் பாதுகாப்பாய் இருப்ப‌தையிட்டுநான் அவ‌ர்க‌ளைப் பாராட்டுகிறேன்நான் கால‌த்தைத் திருடுகிறேன்ஆக‌வே அவ‌ர்க‌ள் என்னைக் கால‌த்திலிருந்து இழுத்தெடுக்க‌ முடியும்நாம் எல்லோரும் உயிர்த்தியாகிக‌ளா?நான் குசுகுசுக்கிறேன்: ந‌ண்ப‌ர்க‌ளே,ஒரு சுவ‌ரைத் துணிக்கொடி க‌ட்டுவ‌த‌ற்கு விட்டுவையுங்க‌ள்,ஒரு இர‌வைப் பாடுவ‌த‌ற்கு விட்டுவையுங்கள்நீங்க‌ள் விரும்பும் ...</description>
மே தினம்
		<description>-NO ONE IS ILLEGAL  சார்பாக-(படங்களின் மேல் அழுத்திப் பெரிதாக்கிப் பார்க்கலாம்) </description>